Lankamuslim.org

One World One Ummah

SLMC போராளிகளே இது உங்கள் கவனத்திற்கு……

with one comment

SLMC lankamuslimபிரமாண்டமான அலங்கார மாளிகை. அறை குறை ஆடைகளோடு அலைந்து திரியும் பெண்கள் கூட்டம்.நபிகளார் வெறுத்த இழுபட்டுக்கொண்டு செல்லும் நீண்ட ஆடை அணிந்த மணப்பெண். மணவாளனின் கைகளுக்குள் தனது கைகளைக் கோர்த்தவாறு நடைபோடுகிறாள் அவள்.ஓரத்தில் ஓங்கி ஒலிக்கும் பாடல் கச்சேரி.ஒய்யாரமாய் நடனாமாடும் பெண்கள் கூட்டம்.ஒரு கிறுஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் ஒரு வசதி படைத்த,பணம் என்று பார்க்காமல் வீசி எறியும், மறுமை என்றால் எதுவென்றே கேள்விப்படாத ஒரு பண முதலையின் வீட்டுக் கலியாணம் இது.

சிலருக்கு தலைவரின் சங்கதி பிழைதான் என்று தெரியும்.வெளியில் சொல்ல முடியாத வெட்கம் அவர்களுக்கு.

ஆம்.இது அம்பாரை மாவட்டத்தின் அரசியல் விதியைத் தீர்மானிக்கும்  கட்சியின் தலைவரின் குடும்ப லட்சணங்கள் இவை.

ஹக்கீம் ஒரு முரண்பாடுகளின் தொகுப்பு.அம்பாரை முஸ்லீம்களிடம் ஒரு முகம்.கண்டியில் குடும்பத்தினரிடம் ஒரு முகம் அவருக்கு.
காங்கிறசின் யாப்பு அல்குர்ஆனையும்,ஹதீஸையும் அடிப்படையாக வைத்தது என்கிறார்கள்.அதன் பொருள் இன்னும் புரியவில்லை.

ஒரு கட்சியின் யாப்பு குர்ஆனும்,ஹதீசும் என்றால் அதன் அர்த்தம் அக்கட்சியின் தலைவர்கள் குர்ஆனையும்,ஹதீசையும் பின்பற்றுவார்கள்.அதன் தொண்டர்கள் குர்ஆனையும்,ஹதீசையும் பின்பற்றுவார்கள்.கட்சி முடிவுகள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருக்கும்.இதுதானே அதன் பொருள்.அப்படியென்றால் குர்ஆன்,ஹதீஸை தலைவர் பின்பற்றினால்தானே கட்சியின் கீழுள்ள ஏனையவர்கள் பின்பற்றுவார்கள்.தலைமையே இவ்வாறு தவறு செய்யும் போது,குர்ஆனைக் கசக்கி குப்பைத் தொட்டியில் எறியும்போது தொண்டர்கள் எதைப் பின்பற்றிச் செல்வார்கள்.தலைமையே கட்சியின் யாப்புக்கு எதிராக நடக்கும் போது தொண்டர்களின் நிலை என்னவாக இருக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கும்,பொது வாழ்க்க்கைக்கும் இடையில் மிகப் பெரிய முரண்பாடு கொண்ட ஒரு மனிதனால்,இறைவன் வெறுத்த,நபிகளார் எச்சரித்த ஒரு கலாச்சாரத்தை தன் வாழ்க்க்கையாக எடுத்துக் கொண்ட ஒரு மனிதனால்,வீட்டில் ஒரு பக்கா மேற்கத்தையனாகவும்,அம்பாரை முஸ்லீம்களிடம் ஒரு அசைக்கமுடியாத ஆன்மீகவாதியாகவும் தன்னைக் காட்டும் ஒரு மனிதனால் எவ்வாறு முஸ்லீம் சமூகத்தின் தேசியத் தலைவனாக இருக்கமுடியும்.இந்த இரண்டு முகங்கள் கொண்டவரிடம் எவ்வாறு எமது அரசியல் விதியை தாரைவார்ப்பது.அது எத்தனை ஆபத்தானது.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு வானத்தின் மேலே ஒரு இறைவன் இருக்கிறான்.அரசியல் விதியையும் எழுதுவதும் அவன்தான்.தன் ரப்பையே வீசி எறியும் ஒருவனைத் தலைவனாகக் கொண்ட மக்களின் அரசியல் விதியை அந்த இறைவன் எவ்வாறு நன்றாக எழுதுவான்?

தனது அரசியல் லாபங்களுக்காக அல்லாஹ்வை அடமானம் வைக்கத்துணிந்த ஒருவர் மூலம் எமக்கு என்ன அரசியல் தீர்வு கிட்டப்போகிறது.இந்த இரட்டை வேடத்தை அவர் தனது அரசியலில் காட்டமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?பெரும்பான்மைச் சிங்களவரிடம் எங்கள் அரசியலை அடமானம் வைத்துவிட்டு வெளியில் வந்து குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி அமைதிப்படுத்தினால் நாம் எவ்வாறு அதைக் கண்டுபிடிப்பது.இறைவனின் விதிகளையே எறிந்து விளையாடுபவருக்கு வானத்திற்கு கீழ் இருக்கும் நாம் எம்மாத்திரம்.-FN

Written by lankamuslim

செப்ரெம்பர் 1, 2015 இல் 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Pity at SLMC supporters!

    risniy

    செப்ரெம்பர் 1, 2015 at 11:34 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: