Lankamuslim.org

One World One Ummah

இலங்கை காதியான் மதத்தினரின் குர்ஆன் (சிங்கள) மொழிபெயர்ப்பு வெளியீடு: காதியான் மதப் பரப்புரைகள்

leave a comment »

kaஇறைவனின் இறுதித் திருத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டு புனித இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் ஈமானை இழக்க வைக்கும் வழிகெட்ட கொள்கைகளின் ஒன்றான காதியானி மதத்தினரின் “வழிகெட்ட புது நபித்துவக் கோட்பாட்டின்” வெளிப்பாடான காதியானி மதம் இலங்கையில் வேர்விடத் தொடங்கிய காலம் முதல் இவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் உலமாக்களினால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டாலும் நீருக்கு அடியால் நெருப்பை கொண்டு செல்ல முயற்சிப்பது போல் மிக மிக ரகசியமாகவும், லாவகமாகவும் காதியான் மதப் பரப்புரைகள் முஸ்லிம்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இது வரைக்கும் சுமார் 20 க்கும் அதிகமான புத்தகங்கள் தமிழ் மொழியில் இவர்களினால் வெளியிடப்பட்டுள்ளன.

தமது மதத்தின் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் விதமாக இலவசங்களை அள்ளி வீசும் இவ்வழிகெட்ட அமைப்பினர். தமது செயல்பாடுகளை இணையதளங்கள் மூலமாகவும் முடுக்கி விட்டுள்ளார்கள்.

இறைத் தூதர் முஹம்மதுடன் முடிவுற்ற இறுதி நபித்துவம்.

நபித்துவ பதவியென்பது இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. திரு மறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் இதனை நமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இன்னொரு நபி வருவார் என்று யாராவது வாதிட்டால் அது வடிகட்டிய பொய்யாகும். அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை விட்டும் வெளியேறியவர்களாகவே கருதப்படுவார்கள்.

காதியானி மதத்தினரைப் பொருத்த வரையில் தமது மதத்தின் ஸ்தாபகத் தலைவரான மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பின் வந்த ஒரு நபியாக நம்புகின்றார்கள். மிர்சா குலாமும் தான் ஒரு நபியென்ற வாதத்தை முன் வைத்ததின் மூலம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33 : 40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதி (2145)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கüன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3535)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிலி) நூல் : முஸ்லிம் (907)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை. (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள்  என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (2198)

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்’ (இறைவனை அதிகமாகப் புகழ் பவர்) ஆவேன். நான் “மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்’ (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் “ஆகிப்’ (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை” என்று கூறினார்கள்.

நூல் :   முஸ்லிம் (4697)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (3455)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலிலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று சொன்னார்கள்.

(நூல் : முஸ்லிம் 4777)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததை மெய்பிக்கும் வகையில் தன்னை நபி என்று வாதிக்கும் பொய்யர்களில் ஒருவர்தான் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவனாவான். இவன் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் காதியான் என்ற ஊரில் பிறந்தான்.

யூதர்கள் எதிர் பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான்தான் என்று இந்த பொய்யன் உளறினான்.

இவனுடைய இந்த உளறினால் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள்,யூதர்கள் யாரும் இவனை ஏறிட்டும் கூட பார்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களில் இவனுடைய பொய்களைப் பற்றி அறியாத சிலர்தான் இவனால் வழிகெடுக்கப்பட்டு வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று மக்கா காஃபிர்களிடம் எடுத்துரைத்த போது அவர்களால் நபிகள் நாயகத்தின் நபித்துவத்தை மறுக்க இயலவில்லை. அதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்னும் நபித்துவத்திற்குப் பிறகும் உண்மையாளராகத் திகழ்ந்தார்கள் என்பதுதான். இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்üட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலüத்தனர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனை யொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது

நூல் : புகாரி (4770)

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய உண்மையை முன்னிறுத்திதான் தம்மை நபி என்று மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

1891 ம் ஆண்டிலிருந்து மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான். ஒரு நபி என்பதற்கு முக்கியமான அடையாளமே அவர் பொய்யராக இருக்க்கூடாது என்பதுதான். ஆனால் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரோ மிகவும் கடைந்தெடுத்த பொய்யர்களில் ஒருவராக இருந்தார். இவர் திருமறைக்குர்ஆனில் இல்லாத வசனங்களை திருமறைக்குர்ஆனில் உள்ளதாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறாத ஹதீஸ்களை நபியவர்கள் கூறியதாகவும் அல்லாஹ்வின் மீதும் நபியவர்களின் மீது இட்டுக்கட்டி கூறியுள்ளான். இப்படிப்பட்ட பொய்களே இவன் பொய் நபி என்பதற்கு தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

இவன் ஏராளமான பொய்களைக் கூறியுள்ளான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவனுடைய பொய்களுக்கு உதாரணமாக சில சான்றுகளைத் தருகின்றோம்.

மிர்சா குலாமும் முஹம்மதீ பேகம் திருமணமும்

முஹம்மதீ பேகம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரின் மனைவியின் மீது ஆசை கொண்ட மிர்சா குலாம் எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும என்ற நோக்கத்தில் அல்லாஹ் தனக்கு முன்னறிவிப்புச் செய்திருப்பதாக பின்வரும் விசயங்களைக் கூறினான்.

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்ததோம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வர நான் உயிருடன் இருப்பேன்.

இருண்டாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.

மூன்றாவது : எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது : முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.

ஐந்தாவது : அப்போது நான் முஹம்மதீ பேகத்தை திருமணம் செய்வேன்.

ஆறாவது : அவளை மணப்பேண். அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புகள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.

இவை அனைத்தும் “ஆயினே கமாலாத்” என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் மிர்சா குலாமால் எழுதப்பட்டுள்ளது.

இப்போது நாம் கேள்விக்கு வருகிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது “ஸவ்வஜ்னாகஹா” அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று கூறினான்.

அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக் கொடுத்ததாக கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள்.

இவ்வாறு “ஸவ்வஜ்னாகஹா” அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று பொய்யன் மிர்சாவுக்கு  அல்லாஹ் கூறியிருந்தால் அது கடடாயம் நிறைவேறியிருக்க வேண்டும் ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை. இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் இதுதான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம் என்றும் அவன் சொன்னான். இதற்கு மிர்சாவை நபி என்று நம்புபவர்கள் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்னபடி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.

நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை பொய்யன் குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை. நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.

அதுவும் இது தான் நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரம் என்று பொய்யன் அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது. இந்தக் கேள்விகள் காதியானிக் கூட்டத்தாருடன் விவாதம செய்யும் போது மூல நூலை வாசித்து கேட்கப்பட்ட கேள்விகளாகும். அதை அவர்கள் மறுக்கவில்லை.

அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் நடக்கும் வரை உயிருட்ன் இருந்து எனக்கு திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் மிர்சா கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்கு கல்யாணம செய்து வைக்காமலே மரணித்து விட்டார்.

இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும பொய்யன் என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா? இல்லையா?

அல்லாஹ் அப்படி சொல்லி இருக்கும் போது அது போல் நடந்ததா? இது நிறைவேறா விட்;டால் அவன் பொய்யன். இது நிறைவேறி இருந்தால் அவன் பொய்யன் அல்ல.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார் என்று இந்த அயோக்கியன் சொன்னானா இல்லையா. அவன் அப்படி சொன்னால் அதன் படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் உண்மை சொன்னான். நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொன்னான்.

அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்து தந்து விட்டு மரணிப்பார் என்ற இவன் சொன்னானா இல்லையா. சொன்னான் என்றால் அது நிறைவேறினால் அவன் உண்மை சொன்னான். நிறைவேறாவிட்டால் அவன் பொய் சொன்னான்.

இது காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்கப்பட்ட கேள்விகள். இப்போது நாம் கேட்கும் கேள்விகள் திடீர் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகள். அந்த விவாதததன் போதும் அவர்கள் அதற்குப் பதல் சொலலவில்லை. இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகு கூட பதில சொல்ல முடியாது.

மிர்சா குலாம் பொய்யன் தான் என்பதை அவன் ஆதாரமாகக் காட்டியவைகளை வைத்தே அல்லாஹ் அடையாளம் காட்டிவிட்டான்.

பொய்யன் மிர்சாவின் புளுகு மூட்டை

அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று மிர்சா கூறினான்.  (நூல் : தத்கிரா)

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவர் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் பேரன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

இது தத்கிரா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் 265 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படி பொய்களை விட்டடித்தவன் எப்படி உண்மையான நபியாக இருக்க முடியும் என்பதை இந்தக் காதியானி மதத்தினர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா

மிர்சா குலாம் காதியானி கூறுகிறான் : இதோ இவர்தான் மூஸா அல்லாஹ்வின் இளைஞர். இவர் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் தன்னுடைய வேதத்திலே சுட்டிக் காட்டியுள்ளான்.  அவர் வானத்திலே உயிருடன் இருக்கிறார். அவர் மரணிக்கவில்லை. அவர் இறந்தவர்களில் இல்லை என்று நாம் நம்பிக்கை கொள்வதை நம்மீது இறைவன் விதியாக்கியுள்ளான்.

நூல் : நூருல் ஹக் பக்கம் : 68, 69

மூஸா (அலை) அவர்கள் வானத்தில் உயிருடன் இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் எங்குமே கூறவில்லை. ஆனால் பொய்யர் மிர்சா குலாம் அஹ்மத் காதியானியோ குர்ஆனில் இல்லாத ஒன்றை குர்ஆனில் இருப்பதாக பொய்யாக இட்டுக் கட்டி கூறியுள்ளார். இதோ இத்தகைய பொய்யர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?

(அல்குர்ஆன் 7 : 37)

காதியானிகளின் குர்ஆன் வெளியீடு

உலக மக்களுக்கு நேர்வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப் பெற்ற திருக் குர்ஆனில் தமது கைச் சரக்கை சேர்த்து, விளக்கம் என்ற பெயரில் மக்களை வழிகெடுத்து நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை வேகமாக முன்னெடுத்து வருகின்றது காதியானி மத அமைப்பு.

ஈமானுக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக திருக்குர்ஆனிலேயே கையாடல் செய்து, குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்கி அதனை திருக்குர்ஆன் என்று காட்சிப் படுத்த முயல்வது மாத்திரமன்றி, சிங்கள மொழியில் மாற்று மத மக்களுக்கு மத்தியில் அதனை கொண்டு செல்ல முயல்வது என்பது இஸ்லாமிய சமுதாயத்திற்கு பெரும் சவாலான விடயமாகும்.

தூய இஸ்லாமிய கருத்துக்களை சிங்களம் பேசும் மாற்றுமத சகோதரர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதினூடாக எந்த மாற்றத்தை அடைய முடியுமோ, அந்த மாற்றம் காதியானி மத போலிகளின் சூழ்ச்சியின் காரணமாக இல்லாதொழிக்கப் படும் வாய்ப்புகள் நிறையவே காணப்படுகின்றன.

கடந்த 29.07.2015 அன்று கொழும்பு, பொது நூலக வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி ஒன்றில் காதியானி மதத்தினரின் திருக்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புப் பிரதிகள் சிங்கள் மக்களுக்கு மத்தியில் காட்சிப் படுத்தப்பட்டதுடன், விநியோகமும் செய்யப்பட்டது.

காதியானி மதத்தினரின் குர்ஆன் இது வரை உலகில் சுமார் 76 மொழிகளின் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது சிங்கள மொழியிலும் அது அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றது. வழிகேட்டை பல மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளும் இவ்வழிகெட்டவர்கள் ஏற்கனவே தமிழ் மொழியிலும் அவர்களுடைய குர்ஆன் பிரதியை வெளியிட்டு விட்டமை அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.

இறுதி நபித்துவத்திற்கு எதிராக செயல்பட்டு மிர்சா குலாமை நபியென்று பிரச்சாரம் செய்வதினூடாக இஸ்லாத்தை விட்டும் வெளியேறி காபிர்களாக மாறி விட்ட இந்த வழிகேடர்களின் பிரச்சாரத்தை விட்டும் நம்மையும், நமது இஸ்லாமிய சகோதரர்களையும் பாதுகாப்போமாக.

ரஸ்மின் MISc

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 1, 2015 இல் 4:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: