Lankamuslim.org

One World One Ummah

தோப்பூர் முஸ்லிம்களுக்குரிய 1000 ஏக்கர் காணி சேருவிலை பெரிய விகாரைக்குரியதாம்!

leave a comment »

thopoor 2திருகோணமலை மாவட்டம், சேருவிலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, தோப்பூர் செல்வநகர் பிரதேசத்திலுள்ள, முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1000 ஏக்கர் காணிகள் சேருவிலை பெரிய விகாரைக்குரியதென சேருவிலை பிரதேச செயலாளரினால் நில அளவை செய்யப்பட்டு எல்லைக் கற்களும் நடப்பட்டுள்ளன.

இக்காணி தொடர்பான சர்ச்சை கடந்த 07 மாதம் 26 ஆம் திகதி இவ்வாறு அளவை செய்யப்பட்ட போது பொதுமக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியமையால் அவ்வேலைகள் தற்காலிகமாக சேருவிலை பிரதேச செயலாளரினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன. தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களே கடந்துள்ள நிலையில், இக்காணிகள் சேருவிலை விகாரைக்குரியதென்ற திடீர் அறிவிப்பால் மக்கள் மத்தியில் பெரும் பற்றநிலை ஏற்பட்டுள்ளது.

செல்வநகர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிகள் தொடர்பான பிரச்சினை இன்று நேற்றையதல்ல. இப்பிரச்சினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதிரடியாக தலைதூக்கப்பட்டது.

கடந்த 2014 ஆண்டில் மஹிந்த ராஷபக்ஷவின் அரசாங்கத்தால் இம்மக்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் 3 ரூட் 21 பேர்ச்சஸ் காணிகளை தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் எனக் கூறி சுவீகரிக்கப்பட்டன. அவ்வாறு காரணம் கூறி சுவீகரிக்கப்பட்டாலும் தற்போது அவை சேருவிலை சின்ன விகாரைக்குரிய காணிகள் என்றே சேருவிலை பெரிய விகாரைக்குப் பொறுப்பான மகாநாயக்க தேரர் கூறி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அளவை செய்யப்பட்டிருக்கும் 1000 ஏக்கர் காணிகளும் எந்த அடிப்படையில், என்ன பெயரின் கீழ் அளவை செய்யப்பட்டிருக்கின்றன என்பதில் தெளிவு நிலை காணப்படவில்லை. வன வள இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் என்றும், பூ வித்யாவைக்குரிய காணிகள் என்றும், சேருவிலை பெரிய விகாரைக்குரிய காணிகள் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், 1000 ஏக்கர் செல்வநகர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பரம்பரைக் காணிகள் அரசாங்கத்தால் அளவை செய்யப்பட்டு, அளவைக் கற்களும் நடப்பட்டு, தற்போது பெயர்ப்பலகையும் நடப்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதனால், மக்கள் மத்தியில் பெரும் பற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகிறது.

செல்வநர் சமுர்த்தி பெறும் மக்களுக்கு வாழ்வாதாரக் கடன் வழங்குவதற்கான முதற்கட்ட கூட்டம் செல்வநர் பல்தேவை கட்டடத்தில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு சகல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செல்வநகர் சமுர்த்தி உத்தியோகத்தர் மேற்கொள்ள வேண்டுமென சேருவிலை பிரதேச செயலாளர் பணித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி உத்தியோகத்தர் மேற்கொண்டு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே செல்வநகர் காணிகளை அளவீடு செய்யும் சூட்சுமமான வேலைகளும் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதால் நில அளவை மேற்கொள்வதை இடைநிறுத்த முடியாமல் போனதாக தேரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வாழ்வாதார உதவிக் கடன் வழங்குவதற்கு சேருவிலை பிரதேச செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் திட்டமிட்ட ஏற்பாடு என்பதும் இவற்றுக்குப் பின்னால் சேருவிலை பெரிய விகாரைக்குப் பொறுப்பான மகாநாயக்க தேரர் செயற்படுவதும் கள ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

லரீப் சுலைமான்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2015 இல் 2:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: