Lankamuslim.org

One World One Ummah

தனியான முன்னணியை உருவாக்கும் பேச்சுகளை ஆரம்பித்த கூட்டணிக் கட்சிகள்

with one comment

round-table-meeting-1152x864ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த சில கூட்டணிக் கட்சிகள் அதில் இருந்து விலகி, தனியான முன்னணி ஒன்றை ஸ்தாபிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேச விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆரம்ப கொள்கைகளுக்கு முரணாக செயற்படுவதாக இந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் தேசியப்பட்டியல் நியமனத்தின் போது தமது கட்சிகளுக்கு அநீதி ஏற்பட்டதாகவும் அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 29, 2015 இல் 11:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. நேற்று நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ள அதே வேளை மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    மஹிந்தவுடன் சேர்த்து சுதந்திரக் கட்சிக்குள் அவரின் தீவிர ஆதரவாளர்களான சுசில் பிரேம்ஜயந்த, அனுர யாப்பா ஆகியோரும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகின்றது.

    சுதந்திரக் கட்சிக்குள் சந்திரிக்காவின் மீள் வருகை மற்றும் கட்சி முடிவுகளில் அவரின் தலையீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அனுர யாப்பா மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    எனினும் தற்போதைய நிலையில் அரசியல் மற்றும் கட்சி ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் பெரும்பாலான முடிவுகளின் பின்னணியில் சந்திரிக்கா அம்மையார் செயற்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

    பௌமி

    ஓகஸ்ட் 30, 2015 at 10:02 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: