Lankamuslim.org

One World One Ummah

தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் கட்சியின் தலைவரான ஜனாதிபதியிடம்

with one comment

mithiriதேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம்கட்சியின் தலைவரான   ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் புதிய செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதலாவது மத்திய குழுக் கூட்டம் இதுவாகும்.  அத்துடன் இந்தக் கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

தேசிய அரசாங்கம் அமைத்தல், அதில் பெற்றுக்கொள்ள வேண்டிய அமைச்சுப் பொறுப்புகள், அவை வழங்கப்பட வேண்டிய நபர்கள், என்பன குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் குறித்தும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சுதந்திரக் கட்சி மத்திய குழுவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதற்கும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2015 இல் 5:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பி.பி.சி. யின் சந்தேசய சிங்கள ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய செவ்வியில்,

    நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி ஆசனம் உரித்தானது. ஆனால் அதனை ஜனாதிபதியோ கட்சியின் தலைவரோ தீர்மானிக்க முடியாது.

    அதனை பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    ஆனால் இன்றோ நடப்பது அனைத்தும் தலைகீழாக இருக்கின்றன.

    நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதிதான் தேர்ந்தெடுக்கின்றார். அமைச்சரவையையும் அவர்தான் முடிவு செய்கின்றார். அதுவும் போதாதற்கு எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்தான் தீர்மானிக்க முயல்கின்றார்.

    இது ஒரு அரசியல் கோமாளித்தனம். அத்துடன் இதன் மூலம் இலங்கையின் பல்கட்சி ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு நசுக்கப்பட்டுவிடும்.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்கக் கோருபவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் டொலர் பொதிகளுக்கு ஆசைப்பட்டு குரல் கொடுக்கின்றார்கள். அது குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுதந்திரக் கட்சிக்கே உரியது. ஆனால் அதனை தீர்மானிக்கும் சுதந்திரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது செவ்வியில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

    பௌமி

    ஓகஸ்ட் 30, 2015 at 10:06 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: