Lankamuslim.org

One World One Ummah

அளுத்கம வன்முறையை விசாரிக்க ஆணைக்கு­ழு அமைக்க உதவுமாறு கோருகிறது முஸ்லிம் கவுன்சில் !!

leave a comment »

mcslசோபித தேரரிடம் முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்: அளுத்­க­மையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக மேற்கொள்­ளப்­பட்ட வன் செயல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்வதற்கும் அதற்காக ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கும் ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கு­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலைவர் சோபித தேர­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

நேற்­றுக்­காலை சோபித தேரரை கோட்டை நாக விகா­ரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தலை­மையில் சந்­தித்த பிர­தி­நி­திகள் இவ்­வேண்­டு­கோளை விடுத்­துள்­ளனர்.

இச்­சந்­திப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் எதிர்­கா­லத்தில் அளுத்­க­மயில் நடை­பெற்­றது போன்ற இனத்­துக்­கெ­தி­ரான வன்மு­றைகள் இடம்­பெ­றக்­கூ­டாது என்று நாம் கரு­துகிறோம்.

இந்த வன்­மு­றை­களின் பின்­னணி என்ன? இவ்­வா­றான இன­வன்­மு­றைகள் இடம்­பெ­றா­ம­லி­ருப்­பதை எவ்வாறு தடுக்­கலாம் என்ற சிபார்­சு­களைச் செய்­வ­தற்­கா­கவே ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கும்­படி கோரி­யுள்ளோம்.

இந்த ஆணைக்­குழு சிபார்­சு­களின் மூலம் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­பது எமது நோக்கமல்ல. இதன் மூலம் இன­வா­தத்தை தூண்டும் பேச்­சுகள் போன்­ற­வற்றை எவ்­வாறு தடுக்­கலாம் எனும் பரிந்­து­ரை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

இதே­வேளை அளுத்­க­மயில் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­க­ளுக்கு காரணமான பொதுபலசேனா அமைப்பும் இது தொடர்பாக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2015 இல் 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: