Lankamuslim.org

One World One Ummah

இலங்கை மனித உரிமை மீறல்கள்: உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு

with one comment

USAஇலங்கையில் நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதை அமெரிக்கா ஆதரிக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்தார் என ஏஎஃப்பி மற்றும் ஏபி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் நடக்கும் கூட்டத்தில் இப்படியானதொரு திட்டத்தை ஆதரித்து அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டுவரவிருப்பதாகவும் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பும், மற்ற நாடுகளின் ஒத்துழைப்பையும் பெறப்போவதாகவும் அமெரிக்க அரசின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் கூறியுள்ளார் என ஏஎஃப்பி, ஏ பி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு சென்றுள்ள நிஷா பிஸ்வால் கொழும்பு நகரில் இன்று புதன் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம்பகத்தன்மையுள்ள உள்நாட்டு விசாரணை ஒன்றுக்கான முயற்சிகளை நாங்கள் ஆதரிப்போம்” என்று அப்போது அவர் தெரிவித்தார்.

“இது தொடர்பான தோல்வியடைந்த கடந்த கால முயற்சிகள் நினைவில் இருக்கிறது. ஆகவேதான் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

இதற்கு முன்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் மூன்று தீர்மானங்களை அமெரிக்க கொண்டுவந்திருந்தது. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென கடந்த ஆண்டில் ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டுவந்திருந்தது.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து நல்லிணக்கம் குறித்து புதிய நம்பிக்கை இலங்கையில் ஏற்பட்டிருப்பதாக நிஷா பிஸ்வால் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கும் மாநாட்டில் புதிய தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக மனித உரிமைகளுக்கான துணை அமைச்சர் டாம் மலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.-BBC

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2015 இல் 8:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    இச்சந்திப்பின்போது, தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தமிழ்மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

    அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் யுத்தக்குற்ற அறிக்கை வெளியிடப்ப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    Mursith

    ஓகஸ்ட் 26, 2015 at 9:25 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: