Lankamuslim.org

One World One Ummah

பதவி விலகுகிறேன் அசாத் சாலி !!

with one comment

asad-saliமத்­திய மாகாண சபை உறுப்­பினர் பத­வியி­லி­ருந்து வில­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அசாத் சாலி தெரிவித்தார். சர்வாதிகார ஆட்­சி­யி­லி­ருந்து நாட்டை விடுவித்து நல்­லாட்­சியை ஸ்தாபிக்க தொடர்ந்து முன்­நின்ற எமது முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் மறந்து இன்று ஐக்­கிய தேசியக் கட்சி செயற்­ப­டு­வ­தா­னது மிகவும் வருந்தத்தக்­கது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்­கத்­தினால் கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

கடந்த ஜனா­தி­பதிதேர்தல் மற்றும் நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்தலில் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த நாம் பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். அவ்­வா­றான நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்­றுக்­காக நாம் முன்­னெ­டுத்த செயற்­றிட்­டங்­களில் நம்­பிக்கை வைத்து அனைத்து முஸ்லிம் சமூ­கமும் நல்­லாட்­சியை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­க ஆதரவளித்தது. அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சர்­வா­தி­கார மிக்க குடும்ப ஆட்­சிக்கும் மஹிந்­தவின் அர­சியல் மீளப்­பி­ர­வே­சத்­திற்கும் முற்­றுப்­புள்ளி வைக்க துணை­நின்­றனர்.

கடந்த ஜன­வரி மாதம் வென்­றெ­டுக்­கப்­பட்ட நல்­லாட்­சியை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்ல மக்கள் மீண்டும் வாய்ப்பு வழங்­கி­ய­மைக்கு நாம் எனது நன்­றி­யினை தெரி­வித்து கொள்­கின்றோம்.

பாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வ­டைந்­துள்ள இந்­நி­லையில் கட்­சி­க­ளி­ன் தேசியல் பட்­டி­யலின் கீழ் உள்­வாங்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்கள் தொடர்பில் மக்­க­ளி­டையே பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்கள்தெரிவிக்­கப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் இன்று பிர­தான கட்­சி­க­ளி­ன் தேசி­யப்­பட்­டியலில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­களை நோக்­கினால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் கீழ் மூன்று முஸ்லிம் உறுப்­பி­னர்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் தனிப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் நாம் எத­னையும் குறிப்­பிட விரும்­ப­வில்லை. இருந்த போதிலும் முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் நன்­மை­க­ருதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூன்று உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டி­யலின் கீழ் கொண்­டு­வந்­த­மைக்கு நான் தனிப்­பட்ட ரீதியில் ஜனா­தி­ப­திக்கு நன்­றி­யினை தெரிவித்து கொள்­கின்றேன்.

மறு­புறம் நல்­லாட்­சியை ஸ்தாபிக்க தொடர்ச்­சி­யாக முன்­நின்ற முஸ்லிம் சமூகம் சார்பில் ஐக்­கிய தேசிய கட்­சியில் ஒரு­வ­ரேனும் தேசி­யப்­பட்­டி­யலின் கீழ் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் இந்த செயற்­பா­டா­னது மிகவும் வருந்­த­தக்­கது. முஸ்லிம் சமூகம் தொடர்பில் கட்­சி­யா­னது தொடர்ச்­சி­யாக அக்­க­றை­யற்ற முறை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்தலின் போது நான் ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் சார்பில் கண்டி மாவட்­டத்தில் போட்­டி­யிட முற்­பட்ட போது கட்­சியின் வாக்­குகள் சித­ற­டிக்­க­படும் என்றும் என்னை மட்­ட­க­ளப்பில் போட்­டி­யி­டு­மாறு வலி­யு­றுத்­தி­னார்கள். இவ்­வா­றான நிலையில் பிர­த­மரும் கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட­ளா­விய ரீதியில் கட்­சியின் பிர­சார பணி­களை மேற்­கொள்­ளு­மாறும் என்னை தேசி­யப்­பட்­டியல் மூலம் உள்­வாங்க தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தெரிவித்தார். அத்துடன் தேசி­யப்­பட்­டியல் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­தற்­கான கடிதம் ஒன்­றையும் எனக்கு அனுப்­பி­வைத்­தார்கள்.

எனினும் தேசி­யப்­பட்­டியல் தொடர்­பி­லான பெயர் விப­ரங்கள் வெளியி­டப்­பட்ட தினத்­திற்கு முந்­திய தினம் கூட என்­னு­டைய பெயர் 07 ஆவது இடத்தில் இருப்­ப­தாக ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரிவித்தார். ஏனைய சில அமைச்­சர்­களும் இதனை உறு­திப்­ப­டுத்­தினர். இருந்­த­போ­திலும் தேசி­யப்­பட்­டியல் பெயர் விபரம் வெளியிடப்பட்ட குறித்த தினத்தில் என்­னு­டைய பெயர் நீக்­கப்­ப­ட­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் தொடர்பில் நான் கவலை கொள்­ள­வில்லை. காரணம் நான் அமைச்­ச­ராக இருந்­தாலும் இல்லை என்­றாலும் மக்­க­ளுக்­கான அனைத்து சேவை­க­ளையும் முன்­னெ­டுக்க தயா­ரா­க­வுள்ளேன். கடந்த மாகாணசபை தேர்லில் நான் கண்டி மாவட்­டத்தில் 57500 வாக்­கு­களை பெற்றே.ன் இந்த தேர்தலில் நான் போட்­டி­யிட்­டி­ருந்தால் நிச்­ச­ய­மாக அதி­க­ப­டி­யான விருப்பு வாக்கு வித்­தி­யா­ச­யத்தில் நான் தேர்தலில் வெற்­றி­யீட்­டி­ருப்பேன். நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்தலில் எனது பிர­சார முயற்­சியின் கார­ண­மாக அம்­பாறை உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் கட்­சியின் வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெற வைத்­துள்ளேன்.

எனது சேவை மக்கள் மனதில் என்றுமே உள்ளது. அந்தவகையில் ஐக்கிய தேசியகட்சியின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நான் ஒரு போதும் வருத்தப்படவில்லை. இருந்த போதிலும் தொடர்ச்சியாக கட்சியின் வெற்றிக்காக முன்நிற்கின்ற முஸ்லிம் சமூகத்தை புறக்கணித்தே கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அந்தவகையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதிவியிலிருந்து விலகுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில் கட்சியின் செயலாளர் கபிர் ஹசீமுடன் கலந்தாலோசிக்கவும் முடிவெடுத்துள்ளேன்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 26, 2015 இல் 8:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. அஸாத் என்ற………….
  ==+++============
  கட்சிமாறி விபச்சார அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகளுக்கு ரணில் வைத்த ஆப்பு “Conditional signature”. இன்று மீண்டும் SLFP இல் சரணடைந்த அஸாத்சாலி. முஸ்லீம் மக்களை ரணிலுக்கு எதிராக திசைதிருப்பும் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றாவிட்டாலும் 50000கு மேற்பட்ட வாக்குகள் எடுத்த 10கு மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றும் இம்தியாஸ் உற்பட எத்தனையோ கட்சிக்காரர்கள் உள்ளனர். இவரை Colombo Urban councilல் உறுப்பினர், பிரதிமேயர் மற்றும் central provincialல் உறுப்பினர் என அங்கீகாரம் வழங்கியது UNP.
  கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் SLMC இல் 6500 வாக்குகளை பெற்று தொல்விகண்டவர்,,மத்தியமாகாணசபையில் பல்லாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றது UNP வாக்குகளே தவிர இவரது சொந்தவாக்கல்ல. இவர் கொழும்பில் இருந்து Containerல் கொண்டுபோன வாக்குகள் அல்ல.இவரை வெற்றிபெறச் செய்வதற்காக கண்டியில் இரு UNP செல்வாக்கு முஸ்லீம்களுக்கு ரணில் கடந்த மாகாணசபைத் தேர்தலில் இடம் வழங்கவில்லை.
  முஸ்லீம்களுக்காக குரல்கொடுத்தது ஏற்றுக் கொள்ள வேண்டியது. அதற்காக தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென வீதி இறங்கி போராடுவது அநாகரிகமானது. போதாக்குறைக்கு வெளிநாட்டில் இருந்துவந்த வால்கள் மற்றும் கொழும்பில் உள்ளவர்களை பௌத்த தேரரிடம் அனுப்பி கண்டிவாழ் மக்கள் என படம்காட்டியது !!!!!! சமூகத்துக்காக குரல் கொடுப்பதற்கு பதவி மறறும் பட்டம் என்பது உண்மையானவர்களுக்கு அற்பமான ஒன்றாகும்.
  பல்லின சமூகம் வாழ்கின்ற நாட்டில் முஸ்லீம்களை தொடர்ந்து பிரச்சனைக்குரியவர்களாக காட்டி அல்லது உருவாக்கி அரசியல் நடாத்த முடியாது. முஸ்லீம்களின் உணர்ச்சிகளை வைத்து UNP ஆட்சியில் சதுரங்க விளையாட்டு ஆடமுடியாது.

  இவற்றையெல்லாம் விட அல்லாஹ்வின் தான் நாடியவர்களுக்கே பதவிகளை வழங்குவான். அதேநேரம் அந்த பதவியை வைத்தே தண்டிக்கவும் கூடும்.

  முஸ்லீம்களுக்கான பிரச்சனையில் தலைநகரில் குரல் எழுப்பியது உண்மையில் வரவேற்கக் கூடியதே. அதற்காக தேடியப்பட்டியல் என்றால் SLTJ றஸ்மிக்கும் கொடுக்க வேண்டும்.

  முஸ்லீம்கள் ராஜபக்ச மற்றும் ஞானதேரர் ஆகியோரின் அழுத்தம் மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக மூச்சுவிட முன்பே,,ரணிலிடம் முஸ்லீம்களை மீண்டும் மோதிவிடும் சால்வையை இவர் தோலில் எடுத்துள்ளார்.

  பௌமி முஹம்மது

  பௌமி முஹம்மது

  ஓகஸ்ட் 27, 2015 at 11:23 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: