Lankamuslim.org

One World One Ummah

வெற்றிலைக்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்க புதிய அணி உருவாக்க முயற்சி

with one comment

mahiஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் மஹிந்த முகாமுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில்  தனியான  எதிர் அணியொன்றை அமைக்க நகர்வுகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் உள்ள பல பெரும்பான்மை கட்சிகள் இணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானத்துள்ளமையினால் இவ் அறிகுறிகள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகும் புதிய முன்னணி,பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா கமியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட பல கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

வெற்றிலைக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிறைவேற்ற வில்லை என்றால் அக் கடமையை நிறைவேற்றுவதற்காக புதிய அரசியல் முன்னணியை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 25, 2015 இல் 6:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. ராஜபக்ச தரப்பினர் பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக இனவாதம் என்ற கொடிய ஆயுதத்தை மிக தந்திரமாகவும் சிறப்பான முறையிலும் அதி உச்ச அளவில் பயன்படுத்தினர்.

  நாட்டின் ஒருமைப்பாடடும் சுதந்திரமும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக பிரச்சாரம் செய்தனர்.

  தான் யுத்தம் செய்து தோற்கடித்து அழித்து ஒழித்த தமிழ் புலிப் பிரிவினைவாதிகள் தலைதூக்கி முன்னேறி வருவதாகவும் கூறினர்.

  இனவாதத் தீயை பற்ற வைக்க இனவாதக் கருத்துக்களை சொல்வதுடன் நின்றுவிடாமல் இதற்கு முன்னர் இனவாதத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட கருத்துக்களையும் பயன்படுத்தினர்.
  இவர்களின் இனவாத பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் மிகப் பலமாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட போதும் நாடு முன்னேற்றப்பாதையை நோக்கி முன்னேறி செல்லும் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

  ஆனாலும் ஒன்றை ஒன்று சலைக்காத இரு தரப்பினதும் தேர்தல் போட்டியின் பெறுபேறுகளை பார்க்கும் போது நாட்டில் இனவாதப் போக்கில் சிந்திப்போரின் அளவு குறைவடையவில்லை என்றே தெரிகிறது.

  இனவாதமாக சிந்திப்போர் சரி பாதியாக நாட்டில் உள்ளார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும் நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கு நிகராக இப்படியான மனநிலையுடையோரே இருப்பதாக தோன்றுகிறது.
  இதிலிருந்து தெரியவருவதாவது எல்லாவற்றுக்கும்

  முதலான பணியாக நாட்டு மக்களை இனவாதமாக சிந்திக்காமல்,

  முற்போக்குள்ள சிந்தனையுடயைவர்களாக,

  தர்க்கரீதியாக சிந்திகக்கூயடிவர்களாக மாற்றுவதனை இலக்காக கொண்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நாட்டுக்கு உடனடியாக தேவைப்படுகிறது.

  (ராவய விக்டர்அய்வன் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி மொழிமாற்றம் செய்யப்ட்டது)

  mufahir

  ஓகஸ்ட் 25, 2015 at 7:29 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: