Lankamuslim.org

One World One Ummah

கோத்தபாயவிடம் சுமார் 6 மணிநேரம் விசாரணை

leave a comment »

gotaமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கும் ஆணைக்குழுவில் கோத்தபாய ராஜபக்ச இன்று ஆஜராகினார்.விசாரணைகளின் பின்னர், அங்கிருந்து வெளியேறிய அவரிடம் எது குறித்து விசாரணை நடத்தப்பட்ட என ஊடகவியலாளர்கள் கேட்டனர்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.ரக்னா லங்கா நிறுவனம் ஓய்வுபெற்ற மற்றும் இராணுவத்தில் இருந்து விலகியவர்களை கொண்ட ஒரு நிறுவனமாகும். தற்போது உங்களுக்கு செய்திகள் இல்லைதானே எனவும் கோத்தபாய கூறினார்.

விசாரணைகளில் நீங்கள் என்ன கூறினீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டனர். அவற்றை கூறுவது சரியல்ல. அவை தேவையில்லை எனக் கூறிக்கொண்ட கோத்தபாய தனது வாகனத்தை நோக்கி நடந்து சென்றார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2015 இல் 6:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: