Lankamuslim.org

One World One Ummah

UNP-SLFP கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விபரம்

leave a comment »

kabeer 1இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை ஏற்படுத்து­வ­தோடு, ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மை­களை வலுப்ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உருவாக்கப்படும். இதற்­காக முழு பாராளுமன்­றமும் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்றப்­படும் என தேசிய அர­சாங்கம் தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியும் செய்து கொண்­டுள்ள புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் குறிப்பிடப்பட்­டுள்­ளது.

இப்­பு­ரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை 2 வரு­டங்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யா­ன­தா­கவும், அக்­கால எல்­லைக்குள் இரண்டு கட்­சி­களை சேர்ந்­த­வர்கள் கட்சி மாறல்­க­ளுக்கு இரு தரப்­பி­னரும் அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்றும் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது.

இவ் உடன்­ப­டிக்­கையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பதில் பொதுச் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர். இவ் உடன்­ப­டிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள்,

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி

சமூக, சந்தைப் பொரு­ளா­தாரம் அரசின் கட்­டுப்­பாட்­டுக்குள் முன்­னெ­டுப்­ப­­துடன், விலைக்­கட்­டுப்­பாடு, நுகர்வோர் பாது­காப்பு ஊடாக மக்­க­ளுக்கு சலு­கைகள் வழங்­குதல்.

வச­தி­யு­டையோர், வச­தி­யற்றோர் இவர்­க­ளுக்­கி­டை­யி­லான இடை­வெ­ளியை குறைத்து பொரு­ளா­தா­ரத்தில் பல­முள்ள மத்­திய தர சமூகத்தை உரு­வாக்­கு­வ­துடன், அனை­வ­ருக்கும் நியா­ய­மான சமூகப் பெறு­பே­று­களை பெற்றுக்கொடுப்­பதை உறு­திப்­ப­டுத்தல்.

குணாம்சம் பொருந்­திய அபி­வி­ருத்தியை ஏற்­ப­டுத்தி பத்து இலட்சம் வேலை வாய்ப்­புக்களை உரு­வாக்­கு­வ­துடன், வரு­மா னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டத்தை தயா­ரித்தல்.

சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்தல்

நாட்டின் ஜன­நா­ய­கத்தை மேலும் பலப்­ப­டுத்தும் விதத்­திலும் நாட்­டுக்குள் நியா­ய­மான, ஒழுக்­க­முள்ள, அரசின் ஆட்­சியை உறு­திப்­ப­டுத்தும் விதத்­திலும் சட்­டத்தின் நிலை­யான மற்றும் சமத்­து­வத்தை பேணு­த­லுக்­கா­கவும், நல்­லாட்­சிக்­கான மூல உபா­யங்­களை அரச பொறி­மு­றைக்குள் உள்­ஈர்த்து முன்­னெ­டுத்தல்.

19 ஆவது திருத்­தச் ­சட்டத்­திற்­க­மைய சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் காலம் தாழ்த்­தாது நிய­மிக்­கப்­படல்.

பிர­தேச பிர­தி­நிதித்­துவம் பலப்­ப­டுத்­தப்­பட்டு பிர­தேச ரீதி­யான ஏற்­றத்­தாழ்­வு­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான துரி­த­க­தி­யி­லான அபி­வி­ருத்­தியை முன்­னிட்டு அனைத்து இன­மக்­களின் உரி­மை­களை பாது­காக்கும் விதத்தில் இலங்­கையின் தனித்­து­வத்தை உறுதிப்­ப­டுத்தும் விதத்தில் இனங்கள் மற் றும் மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன் அனைத்து இனங்­களின் தனித்­துவம் பேணப்படும் விதத்தில் ஜன ­நா­யக மற்றும் மனித உரி­மை­களை மேலும் பலப்­ப­டுத்தும் விதத்­தி­லான புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல்.

அந்த அர­சி­யல­மைப்பில் அமைச்­சுப்­ ப­த­விகள் மற்றும் தற்­போது இயங்கும் பாரா­ளு­மன்ற செயற்­கு­ழு­விற்கு மேல­தி­க­மாக பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்புக் குழுக்கள் மாவட்ட அபி­வி­ருத்தி சபை­களை உள்­ள­டக்கி, பாரா­ளு­மன்­றத்தில் அனைத்துக் கட்­சி­களும் அர­சுடன் இணைந்து செயற்­படும் விதத்தில் இணக்­கப்­பாட்டு அரசியல் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்தல்.

1978 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக வரை­ய­றுக்­கப்­பட்ட ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்து பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தை மேலும் பலப்­ப­டுத்தல்.

தேர்தல் முறையில் தற்­போ­துள்ள விருப்பு வாக்­கு­முறை ஒழிக்­கப்­படும் விதத்தில் அனைத்துத் தேர்தல் தொகு­தி­க­ளுக்கும் பொறுப்புக் கூறும் எம்.பி. ஒருவர் கிடைக்கும் விதத்தில் அனைத்து இனங்கள் மற்றும் பல்­வேறு அர­சியல் கருத்­துக்­க­ளுக்கு தகு­தி­யான பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும் விதத்தில் தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சார முறை­யி­லான கலப்புத் தேர்தல் முறையை உரு­வாக்­குதல்.

ஊழலை ஒழித்தல்

ஊழல் மோச­டி­களை ஒழிப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபையின் ஊழல் ஒழிப்பு பிர­க­ட­னத்­திற்கு அமைய சட்­டங்கள் மற்றும் நிர்­வாக வரை­ய­றையை உரு­வாக்கு தல். நிதி மோசடி பிரிவு மற்றும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிறு­வ­னங்­களை சட்­ட­ரீ­தி­யாக்­குதல், சர்­வ­தேச ரீதி­யாக ஏற்றுக்கொள்­ளப்­பட்ட ஊழல் மோச­டிகள் எதிர்ப்பு மற்றும் அதனை கட்­டுப்­ப­டுத்தும் சுயா­தீன ஆணைக்­குழு ஒன்றை நிய­மித்தல்.

தேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் மற்றும் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றுதல்.

கல்வி மற்றும் சுகா­தார மேம்­பாடு

இல­வச கல்வி. இல­வச சுகா­தார சேவையை பலப்­ப­டுத்தும் நோக்கில் கல்­விக்கு ஆறு வீத நிதி ஒதுக்­கலும், சுகா­தாரம் தொடர்பில் உள்­நாட்டு உற்­பத்­தி­க­ளுக்கு மூன்று வீதம் நிதி ஒதுக்கல்.

13 ஆம் வகுப்பு வரை தொடர்­கல்வி தொழில்­வாய்ப்­புக்­களை முதன்­மை­ப­டுத்­திய உயர் கல்வி, அதற்­கான அடிப்­படை வச­திகள், நவீன தொழில்நுட்­பத்­து­ட­னான உத்­தி­யோ­கத்தர் குழுவை நிய­மித்தல்.

பல்­வே­று­பட்ட நோய்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள நபர்க­ளுக்­காக அனைத்து வச­தி­க­ளுடன் கிரா­மிய மற்றும் நகர வைத்­தி­ய­சாலை அபி­வி­ருத்தி, நட­மாடும் சேவைகள் மருந்து வகை விநி­யோகம், நோய்த்­த­டுப்பு திட்­டங்கள் அதற்கான வைத்­திய நிபு­ணர்கள், தாதியர் சேவை­களை உறு­திப்­ப­டுத்தல்.

சிறு­நீ­ரக நோய்­களை ஒழிப்­பது தொடர்­பாக நோயா­ளர்­க­ளுக்கு தேவை­யான வச­தி­களை மேம்­ப­டுத்தல்.

வெளி­நாட்டு தொடர்­புகள்

இலங்­கையின் தனித்­து­வத்தை பேணும்­வி­தத்தில் அணி­சேரா வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கடைப்­பி­டிப்­பதன் மூலம் உலகின் அனைத்து நாடு­களின் நட்­பு­றவை பேணி வெளிநாட்டுத் தொடர்­பு ­களை பலப்­ப­டுத்திக் கொள்ளல்.

பெண்கள் மற்றும் சிறுவர் உரி­மைகள்

பெண்­களின் பொரு­ளா­தாரம் மற்றும் சமூக கலா­சார, உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கா­கவும் அவர்­களை பலப்­ப­டுத்தவும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல்.

பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து வேறு­பா­டு­களை கலைப்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் பிர­க­ட­னத்­திற்கு அமைய சட்­டங்­களை ஏற்­ப­டுத்தல்.

சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல்.

உள்­ளூ­ராட்சி சபை­களின் பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 சத­வீ­த­மா­கவும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை 15 வீத­மா­கவும் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக ஒதுக்­குதல்.

கலை மற்றும் கலா­சார அபி­வி­ருத்தி

இளம் படைப்­பா­ளி­களின் திற­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மற்றும் அதனை சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு செல்­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்தல். கலை­ஞர்­க­ளுக்கு அரச அனு­ச­ரணை வழங்கல்.

முதன்­மை­யான அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பான கொள்­கைகள் அதன் நடை­மு­றை­களை அமைச்­ச­ரவை தீர்­மா­னிக்கும்.

2016 ஆம் ஆண்டு இந் நாட்டு அரசில் வர­லாற்றில் தடம் பதிக்கும் டீ.எஸ். சேனா­நா­யக்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஸ்தாபிக்­கப்­பட்டு 70 ஆவது பூர­ணத்­து­வத்­தையும், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நாயக்க தலைமையிலான மாற்றத்தின் 60 ஆம் வருட பூர்த்தியைக் கொண்டாடுவதற்கான வசதியை ஏற்படுத் திக் கொடுத்தல்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு பின் னர் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டு பொது இணக்கப்பாட்டை ஏற்ப டுத்திக் கொள்ளல். இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாவதுடன், இருதரப்பினரும் இணக்கப்பாட்டிற்கமைய அதனை மேலும் நீடித்துக் கொள்ள முடியும்.

இந்த உடன்படிக்கை செயற்படுத்தப் படும் காலகட்டத்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இரண்டு கட்சிகளுக்கிடையே கட்சி மாறல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என இரு தரப் பினரும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2015 இல் 6:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: