Lankamuslim.org

One World One Ummah

றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் மர்ம மரணம் : நடந்தது , நடப்பது ,நடக்கப்போவது !! ஒரு முழுமையான பார்வை

leave a comment »

vasimகுற்றம் என்றும் மறைக்கப் படமுடியாத ஒன்று ,  என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்­போது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் குறித்த சம்­ப­வமும் வந்­தி­ருக்­கின்­றது.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த சம்பவத்தை நாம் நோக்கலாம். அது கடந்த 2012, ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி. 119 பொலிஸ் அவசர தொலைபேசி மத்திய நிலையம் ஊடாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் ஒன்று பரிமாறப்படுகின்றது. ஆம், நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் சாலிகா மைதானத்துக்கு அருகே வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி தீப் பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளதாகவே அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் தான் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்ற பொலிஸ் குழு அங்கு ஒரு வாகனம் எரிந்து தணல் பறக்கும் நிலையில் இருந்ததை அவதானித்துள்ளதுடன் உள்ளே யாரோ ஒருவர் தீயில் கருகியிருந்ததை அவதானித்துள்ளனர்.

இந் நிலையில் தான் பொலிஸாரின் கண்களுக்கு அந்த இடத்தில் கீழே விழுந்திருந்த டப்ளியூ.பி. கே.கிவ். 6543 என்ற இலக்கத் தகடு தட்டுப்பட்டுள்ளது. உடனடியாக அந்த இலக்கத் தகட்டை மையப்படுத்தி விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் அதிகாலை (2012.05.17) 2.00 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முருகன் பிளேஸ் வீதியில் இருந்த அந்த வீட்டுக் கதவைத் தட்டி குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனம் பற்றி விசாரித்துள்ளனர். அதன்போது தான், அந்த கார் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனுக்கு சொந்தமானது என தெரியவந்தது. ஆம், பொலிஸார் தட்டியது வஸீம் தாஜுதீனின் வீட்டுக்கதவைத் தான்.

vasimவஸீம் தாஜுதீன் கொள்ளுப்பிட்டி சென். தோமஸ் கல்­லூ­ரியில் தனது கல்­வியை ஆரம்­பித்­தவர். தாய் தந்தையுடன் ஒரு சகோதரர் ஒரு சகோதரி கொண்ட சிறிய குடும்பத்தின் நேசத்துக்குரியவர். ஆரம்ப கல்வியின் பின்னர் கல்­கிஸை சென். தோமஸ் கல்­லூ­ரியில் கல்­வியை தொடர்ந்­தவர். பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் சென்.தோமஸ் கல்­லூ­ரியின் றக்பி அணியின் உப தலை­வ­ராக 2003 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் விளை­யா­டி­யவர். அத்­துடன் 19 வய­துக்கு கீழ்ப் பட்­டோ­ருக்­கான பாட­சாலை அணியில் அதே ஆண்டு விளை­யா­டி­யவர். இவற்­றுடன் அவர் இலங்கை தேசிய அணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி விளை­யா­டி­யவர். அத்­துடன் 2008 ஆம் ஆண்டு ஹொங்கொங் செவன் றக்பி அணிக்­கா­கவும் விளை­யா­டி­யவர். இந் நிலை­யி­லேயே அவர் 2008 ஆம் ஆண்டில் ‘ஜன­ரஞ்­ச­க­மான றக்பி வீரர்’ என்ற விரு­தினை வெற்­றி­கொண்­டி­ருந்தார். இந் நிலையில் ஹெவலொக் கழக அணியின் தலை­வ­ராக 2009 ஆம் ஆண்டு தெரி­வானார். அதன் பின்னர் தாஜுதீன் காயத்­துக்கு உள்­ளா­கினார். இதனால் அவரின் காலில் சத்­திர சிகிச்சை ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. அதனால் அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டே றக்பி களத்­துக்கு வந்தார். இந் நிலை­யில்தான் இந்த துர­திஷ்­ட­வ­ச­மான சம்­பவம் குறித்து கடந்த 2012, ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலையில் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந் நிலையில் அப்போது முதல் வஸீமின் மரணத்தை பல தரப்பினரும் மர்மம் நிறைந்ததாகவே பார்த்தனர். எவரும் அதனை சாதாரண விபத்தாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை எனலாம். அதற்கு பல காரணங்கள் இருந்தன. எனினும் சில பொலிஸார் அதனை விபத்தாக வஸீமின் குடும்பத்தாரிடம் சித்திரிக்க முயற்சித்துள்ளமை தொடர்பிலும் தகவல் இல்லாமல் இல்லை.

எனினும் பொலிஸார் இந்த சம்பவத்தின் பின்னர் புதுக்கடை மூன்றாம் இலக்க நீதிவானுக்கு தாக்கல்செய்துள்ள பீ அறிக்கைகளில் இதனை விபத்து என குறிப்பிடவில்லை. மாற்றமாக வஸீமின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகிக்கத் தக்க பல்வேறு விடயங்களை அந்த பீ அறிக்கைகள் ஊடாக பொலிஸார் அப்போதே வெளிப்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துகின்றது.

முத­லா­வது பீ அறிக்­கை­யா­னது சடலம் மீட்­கப்­பட்ட 2012.05.17 அன்று பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­கான கோரிக்­கையை முன் வைத்து சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் விப­ர­மான பீ அறிக்­கை­யா­னது கடந்த 2012.05.21 அன்று மன்­றுக்கு சமர்­ப்பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த 2 ஆவது பீ அறிக்கையில் சுமார் 7 வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த பீ அறிக்கையானது வஸீமின் சடலத்தை அவரது சகோதரியான விமானப்படையின் மருத்துவர் ஆய்ஷா தாஜுதீன் அடையாளம் காட்ட குறிப்பிட்டிருந்த, 2009.06.21 ஆம் திகதி கொழும்பு நவலோக வைத்தியசாலையில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சையின் போது அவரது காலில் வைக்கப்பட்டு தைக்கப்பட்டிருந்த உலோகத் துண்டு தொடர்பிலான உறுதியினை பெற்றுக் கொள்ளும் விதமாக குறித்த தனியார் வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க கோரும் நோக்குடனேயே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது வஸீம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் ஊகங்களை அன்றே வெளிப்படுத்தத் தக்க பல விடயங்களை பொலிஸார் அன்றைய பீ அறிக்கையிலேயே சாட்சியங்களின் வாக்குமூலம் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். பொலிஸாரின் பீ அறிக்கை படி, வஸீம் தாஜுதீனின் தாயார் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் பிரகாரம் வஸீம் தாஜுதீன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி வெள்ளவத்தை முருகன் வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து மொஹம்மட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பருடன் பிறிதொரு நண்பரை சந்திக்க தனது கே.கிவ்.6543 என்ற காரில் சென்றுள்ளார். போகும் போது தான் திரும்பி வர நள்ளிரவு 12.30 மணியை தாண்டும் என கூறியே வஸீம் சென்றுள்ளதாக அந்த பீ அறிக்கையில் தகவல் உள்ளது.

இந் நிலையில் தான் எரிந்­து­கொண்­டி­ருந்த காருக்குள் இருந்து 2012 ஆம் ஆண்டு மே, 17 அதி­காலை வேளையில் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ரினால் வஸீம் தாஜுதீன் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். தாஜுதீன் பய­ணித்த வாகனம் சாலிகா மைதா­னத்­துக்கு அருகில் உள்ள மதில் ஒன்­றுடன் மோதிய நிலையில் தீயில் எரிந்­து­கொண்­டி­ருந்­தது.

அந்த வாக­னத்தின் உள்­ளேயே வஸீம் தாஜு­தீனின் சடலம் இருந்­தது. இந் நிலையில் மேலோட்­ட­மாக பார்க்கும் எவரும் அதனை விபத்து என்றே அனு­மா­னித்­தனர்.

எனினும் பொலிஸார் அப்போது மன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கைகளில் சந்தேகிக்கத் தக்க சில விடயங்கள் தொடர்பில் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஊடாக தெரியப்படுத்திய போதும் அது தொடர்பில் ஆழமான விசரணைகளை நடத்தவில்லை என்றே தோன்றுகின்றது.

ஏனெனில் சம்பவத்தை முதலில் கண்ணுற்றுள்ள அல்லது சம்பவ இடத்துக்கு முதலில் வந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில்,

தான் உறங்கிக்கொண்டிருந்த போது பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும், வெளியே வந்து பார்த்த போது கார் ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்ததாகவும், உடனே தான் அவ்விடத்துக்கு வந்த போது எரிந்து கொண்டிருந்த காருக்கு மேலதிகமாக அப்பிரதேசத்தில் மேலும் இரு கார்கள் நின்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எரிந்துகொன்டிருந்த கார் அருகே தான் செல்ல முற்பட்ட வேளை அங்கு நின்றிருந்த ஏனைய கார்களில் இருந்தவர்கள் தன்னை அவ்விடத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியதாகவும் அதனையடுத்தே தான் 119 இலக்கத்தை அழைத்து விடயத்தை தெரிவித்ததாகவும் பொலிஸாருடன் கதைத்துவிட்டு பார்க்கும் போது அவ்விரண்டு கார்களையும் அங்கு காணமுடியவில்லை எனவும் அந் நபர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மற்றொரு நபரும் சந்தேகிக்கத் தக்க விடயம் ஒன்றினை உள்ளடக்கி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். குறித்த இரவு தனது வீட்டின் அறை ஒன்றில் வேலையில் இருந்த போது பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து வெளியே வந்து பார்த்த போது கார் ஒன்று எரிந்துகொண்டிருந்ததாகவும் தான் அங்கு ஓடிச் சென்றதாகவும் குறிப்பிடும் அந்த நபர், அவ்விடத்துக்கு தான் செல்லும் போது பாதையில் இருவர் நின்றிருந்ததாகவும், நீங்களா இந்த காரில் வந்தீர்கள் என தான் அவர்களிடம் வினவியதாகவும் அதனையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு அப்போதே குறித்த நபர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இவ்விரண்டு வாக்கு மூலங்களின் அடிப்படையில் பார்க்கும் போது வஸீம் தாஜுதீன் காருக்குள் எரிந்துகொன்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான கார், நபர்களின் நடமாட்டம் அவ்விடத்தில் இருந்துள்ளது. அது எத்தனை பேர், எந்த எந்த கார் என்பது தெரியாது. எனினும் அவற்றை உறுதியான ஆழமான விசாரணையொன்றின் ஊடாக வெளிப்படுத்த கண்டிப்பாக முடியும்.

இந் நிலையில் வஸீமின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாத விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே அவருடன் இறுதியாக சென்ற நண்பர் மொஹம்மட். ஏனெனில் இறுதியாக அவருடனேயே வஸீம் வீட்டிலிருந்து வெளியேறியதாக வஸீம் குடும்பத்தாரின் பொலிஸ் வாக்குமூலங்களில் உள்ளது.

இந் நிலையில் வஸீமின் சடலம் மீட்கப்பட்ட போது நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு மொஹம்மட் வழங்கியுள்ள வாக்குமூலம் வஸீமின் கார் குறித்த நேரத்துக்குள் பயணித்த பயணப் பாதைகள் தொடர்பிலான தகவல்களை ஊகிக்க முடியுமானதாக உள்ளது.

மொஹம்மடின் வாக்குமூலத்தின் படி, வஸீம் வீட்டுக்கு சென்றுள்ள மொஹம்மட், அங்கிருந்து வஸீமின் வாகனத்தில் வஸீமுடன் நுகேகொட, விஜேராம வீதியில் உள்ள மதனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு சென்றுள்ளனர். மதனும் வஸீம், மொஹம்மட்டின் நண்பராவார். இந் நிலையில் மதனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேரடியாக அங்கிருந்து மதனின் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது மதனின் காதலி அண்டர்ஸன் பிரதேச தொடர்மாடியொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார்.

இந் நிலையில் மதனின் காதலி வீட்டுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கு வைத்து மது அருந்தியுள்ளனர். இதனை மதனின் காதலி வீட்டாரும் , மதன், மொஹம்மட் ஆகியோரும் தமது வாக்கு மூலங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இரு போத்தல்கள் மதுபானத்தை அவர்கள் அருந்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரவு 11.00 மணியைத் தாண்டிய நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது.

முதலில் மதனை நுகேகொடை, விஜேராம பகுதியில் உள்ள அவனது வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டுள்ள வஸீம் பின்னர் கிருலப்பனைக்கு வந்து அங்கு தனது நண்பன் மொஹம்மட்டையும் இறக்கி விட்டுள்ளார். அதன் பின்னரேயே அவர் மொஹம்மட்டிடம் தான் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதன் பின்னரேயே நாரஹேன்பிட்டி பிரதேசத்தின் சாலிகா மைதானத்துக்கு அருகே மதிலுடன் மோதி எரிந்துகொன்டிருந்தாக கூறப்படும் காரில் இருந்து தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்கூறப்பட்ட சம்பவங்கள் மொஹம்மட், மதன் மற்றும் மதனின் காதலி வீட்டாரின் பொலிஸ் வாக்கு மூலங்களில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

கிருலப்பனையில் தனது நண்பனை இறுதியாக இறக்கி விட்ட வஸீம், தனது வீடு நோக்கி செல்வதாக கூறியே சென்றுள்ளார். அப்படியானால் வெள்ளவத்தை, முருகன் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு செல்ல வஸீம் நாரஹேன்பிட்டி பகுதிக்கு செல்ல வேண்டிய எந்த தேவையும் இல்லை. அப்படியானால் வஸீமின் கார் எப்படி நாரஹேன்பிட்டி சாலிகா மைதான மதிலுடன் மோதியது? அப்படியானால் யாராவது வஸீமை கடத்தினரா போன்ற கேள்விகள் எழுவது யதார்த்தமானதே

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்கடை 3ஆம் இலக்க நீதிவனுக்கு 2012.05.17 அன்று பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­கான கோரிக்­கையை முன் வைத்து பொலிஸாரால் அறிக்கை சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்படி அப்­போ­தைய கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர உள்­ளிட்­ட­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பிரேத பரி­சோ­தனை அறிக்கை பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றது. திறந்த தீர்ப்­பொன்றை அதில் குறிப்­பிட்­டி­ருந்த சட்ட வைத்­திய அதி­காரி, அவ­ரது நுரை­யீ­ர­லுக்குள் காபன் மொனோட்சைட் வாயு நிரம்பி இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் மர­ணத்தில் சந்­தேகம் நிலவுவ­தாக கூறப்­பட்டு அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கும் மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக பாகங்களை அனுப்பு­மாறு அறி­வு­றுத்­தி­யி­ருந்தார்.

எனினும் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களான நிலையில் கடந்த பெப்ரவரி மாதமே பொலிஸாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த அறிக்கையில் தன்னால் அது தொடர்பில் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியவில்லை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இவையனைத்தும் வஸீமின் மர்ம மரணம் குறித்து ஏதோ ஒன்றை துலக்க வேண்டி நிற்பதாகவே கருதச் செய்தது.இதனையடுத்தே இது தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கைமாறியது.

குறிப்பாக சாதாரணமாக இறந்த நபர் ஒருவரின் விடயத்தில் அவரது சடலத்தை கையளிப்பது தொடர்பில் பின்பற்றப்படும் நடை முறைகள் கூட றக்பி வீரர் விடயத்தில் சற்று கடினமாகவே பின்பற்றப்பட்டுள்ளது. அவரது சடலத்தை கையளிக்க விமானப்படை மருத்துவரான சகோதரியிடம் இரு சத்தியக் கடதாசிகள் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் அடையாளம் காட்ட சென்றபோது பல்வேறு அழுத்தங்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டதாக வஸீமுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இவற்றுக்கு மேலாகத் தான் வஸீம் தாஜுதீனின் பணப்பை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் இருந்து நபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பாக வஸீம் குடும்பத்தவர் ஒருவரின் தகவல்களின் பிரகாரம், வஸீமின் சகோதரி பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக வஸீம் தனது பணப்பை இன்றி எங்கும் செல்வதில்லை. அந்த பணப் பையை அவர் ஒரு போதும் காற்சட்டை பைக்குள் இடமாட்டார் என்பதும் அது அவரது கையில் அல்லது காரிலேயே இருக்கும் என்பதும் மேலதிக தகவல். அப்படியானல் வஸீமின் கார் நாரஹேன்பிட்டி சாலிகா மைதான மதிலில் மோதி எரிந்துகொண்டிருக்க பணப்பை மட்டும் கிருலப்பனையில் கைவிடப்பட்டிருந்தது. அப்படியானால் தனது நண்பனான மொஹம்மட்டை இறக்கி விட்ட பின்னர் வஸீம் தாஜுதீன் யாராலாவது கடத்தப்பட்டாரா?, அல்லது வேறு ஏதும் ஆபத்துக்கு முகம் கொடுத்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் அவசியமாகும்.

இந் நிலை­யி­லேயே வஸீம் தாஜு­தீனின் சடலம் தெஹி­வளை ஜும் ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

அப்­போது முதல் வஸீம் தாஜு­தீனின் மரணம் குறித்து நார­ஹேன்­பிட்டி பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்தி வந்­த­துடன் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலி­ஸாரின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இந் நிலையில் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டார் என பலமான வாதங்கள் அல்லது சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், கொலைக்கான காரணங்களாக இரு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதில் முதலாவது காரணம் காதல் விவ­காரம் குறித்­ததா­னது. தற்­போது பர­வ­லாக வெளிப்­பட்­டுள்ள வாய்­மொழி ஆதா­ரங்­களின் பிர­காரம்,

பிர­ப­ல­மான அர­சியல் புள்­ளியின் மகன் ஒருவர் காத­லித்­த­தாக கூறப்­படும் யுவதியை (சினிமா பிர­பலம் ஒரு­வரின் வாரிசு) வஸீம் தாஜுதீன் காத­லிப்­ப­தாக நினைத்து அல்­லது சந்­தேகம் கொண்டு இந்தக் கொலை புரி­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இந்தக் கதை­யா­னது தற்­போது அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள குறித்த யுவ­தியே கூறி­ய­தாக பிர­ப­ல­மான இணை­யத்­த­ள­மொன்று முதலில் தகவல் வெளி­யிட்­டி­ருந்­தது.

தாஜு­தீனை தனது சகாக்­களின் உத­வி­யுடன் (சாரதி, பாது­காப்பு தரப்பை சார்ந்­த­வர்கள் )கொலை செய்து காரில் போட்டு எரித்த சம்­பவம் தொடர்­பான பொலிஸ் விசா­ர­ணையை மூடி­ம­றைக்­கு­மாறு உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு கூறி­யி­ருந்­த­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

எனினும் இது தொடர்பில் தற்­போது கருத்து வெளி­யிடும் குறித்த யுவதி மேலுள்ள அந்த காதல் கதையை முற்­றாக நிரா­க­ரிக்­கின்றார். அவர் தனக்கு தாஜு­தீன் எச்­சந்­தர்ப்­பத்­திலும் அறி­முகமற்றவர் என உறு­தி­யாக கூறும் நிலையில் வஸீம் தாஜுதீன் மர்ம மரணம் குறித்து உரிய விசா­ர­ணைகள் இடம்­பெற்று உண்மை தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும் தெரி­விக்­கின்றார்.

அத்­துடன் மர­ணித்த அப்­பாவி ஒரு­வ­ருடன் தன்னை இணைத்து அவ­ரது நற்­பெ­ய­ருக்கும், எனது நடத்தை தொடர்­பிலும் பொய்­யான பிர­சா­ரங்­களை செய்­வ­தையும் கைவிட வேண்டும் எனவும் யசாரா தற்­போது வாய் திறந்­துள்ளார்.

அத்துடன் வஸீம் தாஜுதீன் எந்த விடயமாக இருந்தாலும் தனது சகோதரியுடன் பகிர்ந்துகொள்ள மறப்பதில்லை. அதன்படி யுவதிகள் தனக்கு விடும் பார்வைகளில் இருந்து அனைத்தையும் சகோதரிக்கு தெரியப்படுத்தும் வஸீம் யுவதி தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறி இருக்கவில்லை என அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார். இந் நிலையில் காதல் விவகாரம் என்ற காரணம் தொடர்பில் உறுதியான சான்றுகள் இல்லை என்லாம்.

தற்போது வஸீம் தாஜுதீன் விவகாரத்தை கையாளும் குற்றப் புல­னாய்வுப் பிரிவோ விசா­ரணை அதி­கா­ரி­களோ இது காதல் விவ­கா­ரத்தின் பிர­தி­ப­ல­னாக ஏற்­பட்ட கொலை என மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பிக்­காத நிலையில் அதனை உறு­தி­யான கார­ண­மாக நம்­பு­வது முட்டாள் தன­மா­னது.

அதே போன்று தான் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தால் அது தொடர்பில் அனு­மா­னிக்கத் தக்க இன்­னொரு காரணம் உள்­ளது. அது றக்பி விளையாட்டுடன் தொடர்புடையது.

அதா­வது தாஜுதீன் ஒரு கழ­கத்­துக்­காக விளை­யா­டிய நிலையில் ஜன­ரஞ்­ச­க­மான அவரை தமது அணி சார்பில் விளை­யாட அர­சியல் புள்­ளியின் மகன் வற்­பு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் அதற்கு அவர் மறுப்புப் தெரி­வித்­ததன் விளைவே அவ­ரது மரணம் எனவும் கூறப்­ப­டு­கின்­றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பார்க் கழக அணியில் இணைந்த தாஜுதீன் ஆண்டின் சிறந்த ரக்பி வீர­ரா­கவும் தெரி­வானார். இந் நிலையில் அவ­ருக்கும் றக்பி விளை­யாட்டு தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பிர­பல்யம் பெற்­றி­ருந்த அர­சியல் வாதி ஒரு­வரின் மகன்­மா­ருக்கும் இடையில் அறி­முகம் இருந்­தது.

அவர்கள் அனை­வரும் ஒன்­றாக விளை­யா­டி­ய­வர்கள். இந் நிலையில் ஹெவ்லொக் கழ­கத்தின் வீர­ரான தாஜு­தீ­னுக்கும் குறித்த அர­சியல் வாதியின் மக­னுக்கும் இடையே ஹெவ்லொக் கழ­கத்தில் இருந்து பிறி­தொரு கழ­கத்­துக்கு தாஜு­தீனை விளை யாட கோரி­யமை தொடர்பில் பிரச்­சினை ஏற்­பட்­ட­தாக கூறப்­படும் கதையை அல்­லது சந்­தே­கத்தை முற்­றாக நிரா­க­ரித்து விட முடி­யாது.

கடந்த ஆட்­சியின் போது றக்பி விளை­யாட்டு எந்­த­ளவு தூரம் பிர­ப­ல­மா­னது, அத­னுடன் இணைந்து இருந்­த­வர்கள் யார் என்­ப­தெல்லாம் ஒன்றும் ரக­சியம் இல்லை. அதன் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போதும் அதே அர­சியல் புள்­ளியின் மகனே சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்றார்.

‘வஸீம் எது­வாக இருந்­தாலும் அவ­ரது சகோ­த­ரி­யிடம் சொல்வார். இந்த சம்­ப­வத்தின் பின்னர் இந்த வதந்­திகள் குறித்து நான் அவ­ளிடம் கேட்டேன். வஸீம் சிறந்த றக்பி வீரர் என்ற ரீதியில் அவரை வேறு கழ­கங்­க­ளுக்கு விளை­யாட தொடர்ச்­சி­யாக அழைப்­புக்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. வெளிப்­ப­டை­யாக சொல்­வ­தென்றால் சீ.எஸ்.என். இவரை ஹெவலொக் கழ­கத்தில் இருந்து எடுத்து இன்­னொரு கழ­கத்­துக்கு விளை­யாட வைக்க முயற்­சித்­துள்­ளது. அதனால் வஸீம் சீ.எஸ்.என். க்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக கருத்­துக்­களை முன் வைத்­துள்ளார். அதனால் சில சின்ன முரண்­பா­டுகள் தோன்­றி­ய­தாக அவர் அப்­போது தனது சகோ­த­ரி­யிடம் தெரி­வித்­துள்ளார்.

எங்­க­ளது மகன் திட­காத்­தி­ர­மா­னவன். அத்­துடன் பிர­பல்­ய­மான றக்பி வீரர். பல யுவ­திகள் அவர் மீது நாட்டம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தி­ருப்பர். இது தான் இன்று இளை­ஞர்­க­ளுக்கு நடப்­பது. இது தொடர்பில் வஸீம் அவ­னது சகோ­த­ரி­யிடம் கருத்துக்களை பரிமாறியுள்ளார். எனினும் அவர் ஒரு போதும் தனக்கும் குறித்த பேசப்படும் யுவதிக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக குறிப்பிட்டிருக்கவில்லை. முகப் புத்தகம் முதல் எங்குமே குறித்த யுவதியின் புகைப்படத்துடன் கூட வஸீமை நாம் காணவில்லை. எனினும் நீங்கள் குறிப்பிடும் அந்த யுவதி சீ.எஸ்.என்.இல் வேலை செய்யும் போது ஒரு முறை விளையாட்டு நடவடிக்கை ஒன்று தொடர்பில் வஸீமை தொடர்புகொண்டுள்ளார். எனினும் வஸீம் அதனை நிராகரித்ததாக நான் அறிகின்றேன். நாம் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கின்றோம்.’ என வஸீமின் மாம உறவு முறையிலான மொஹம்மட் பயாஸ் லத்தீப் என்பவர் தெரிவிக்கும் கருத்துக்களும் அவதானத்தில் கொள்ளப்படவேண்டியதே.

எனினும் இது­வரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் குறித்த அர­சியல் புள்­ளியின் மகனை சந்­தேக நப­ராக பெய­ரி­டாத நிலையில் இந்த விடயம் தொடர்பில் நீண்ட விசா­ர­ணைகள் அவ­சியம் என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

வஸீம் தாஜு­தீனின் மரணம் விபத்தா?, கொலையா என இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­டாத நிலையில் சந்­தேக நபர்கள் என சிலரை பெய­ரி­டு­வது உண்­மையில் பொருத்­த­மாக அமை­யாது.

எனினும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில், குற்றப் புல­னாவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அப்­பி­ரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுகத் நக­ஹ­முல்ல ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­ர­ம­சே­கர தலைமையிலான பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் தாஜு­தீனின் மரணம் கொலை­யாக இருக்­கலாம் என சந்­தே­கிக்கத் தக்க பல விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு அது தொடர்பில் புதுக் கடை மூன்றாம் இலக்க நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறிக்­கை­ ச­மர்­ப்பிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் தாஜு­தீனின் பற்கள் உடைக்கப் பட்டு, முது­கெ­லும்பு முறிக்­கப்­பட்டு, குதி கால் பகு­தியில் உள்ள எலும்பும் உடைக்­கப்­பட்டு, கூரிய ஆயு­தத்தால் கழுத்தில் குத்­தியும், தட்­டை­யான ஆயுதம் ஒன்­றினால் தாக்­கியும் உள்­ள­மைக்­கான சான்­று­களை முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர , இர­சா­யன பகுப்­பாய்­வாளர் ரொஷான் பெர்­ணான்டோ ஆகி­யோரை அவர்­க­ளது அறிக்­கையில் காணப்­பட்ட பரஸ்­பர வேறு­ப­டுகள் குறித்து விசா­ரித்த போது தெரிந்­து­கொண்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஏற்­க­னவே புல­னாய்வுப் பிரி­வினர் மன்­றுக்கு அறிக்கை தாக்கல் செய்து தாஜு­தீனின் தொலை­பேசி இலக்கம் ஊடாக தக­வல்­களை வெளிப்­ப­டுத்த முயன்ற போதும், தனியார் தொலை­பேசி சேவை வழங்கும் நிறு­வனம் ஒன்று கடந்த மாதங்­களில் மன்­றுக்கு சத்­தியக் கட­தாசி ஒன்­றினை முன்­னி­றுத்தி தம்­மிடம் அந்த தர­வுகள் இல்லை என குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

தம்­மிடம் மூன்று மாதங்­க­ளுக்கு உட்­பட்ட தக­வல்­களே பதிவில் உள்­ள­தாக இதன் போது குறிப்­பிட்ட குறித்த சேவை வழங்கும் நிறு­வ­னத்துக்கு எந்த வகை­யி­லேனும் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­க­ளுக்கு உத­வு­மாறும் உத்­த­ர­விட்­டி­ருந்தனர்.

இந்த விவ­காரம் தொடர்பில் இது வரை 27 இற்கும் மேற்­பட்ட வாக்கு மூலங்­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பதிவு செய்­துள்­ளனர். அதில் வஸீம் தாஜு­தீனின் குடும்­பத்­தினர், றக்பி வீரர்கள் மற்றும் தாஜு­தீனின் சட­லத்தை முதன் முத­லாக அவ­தா­னித்­த­வர்கள் என பலர் அடங்­கு­வ­தாக புல­னாய்வுப் பிரிவுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந் நிலை­யி­லேயே கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி தெஹி­வளை மைய­வா­டியில் இருந்து, தாஜு­தீனின் மூத்த சகோ­தரி ஆய்ஷா தாஜுதீன், சகோ­தரன் அஸ்பான் தாஜுதீன் உள்­ளிட்ட உற­வினர்கள், மைய­வாடி நிர்­வா­கத்­தி­னரின் சாட்­சி­யத்­துக்கு அமைய சடலம் தோண்டி எடுக்­கப்­பட்­டது.

கல்­கிசை மேல­திக நீதிவான் பிரி­ஹர்ஷா ரண­சிங்க முன்­னி­லையில் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் தலை­மையில் கொழும்பு மேல­திக விஷேட சட்ட வைத்­திய நிபுணர் எச்.டீ.என்.ஹேவகே, கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சட்ட வைத்­தியத் துறை தொடர்­பி­லான விஷேட விரி­வு­ரை­யாளர் ஜீவா பெரேரா ஆகியோர் கொண்ட விஷேட சட்ட வைத்­திய நிபு­ணர்கள் குழு­வி­னரால் இவ்­வாறு தோண்டி எடுக்­கப்­பட்ட சடலம் தற்­போது கொழும்பு சட்ட வைத்­திய மற்றும் உடற் கூற்று நிலை­யத்தில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது.

குறிப்­பாக கொழும்பு மூன்றாம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வரும் தாஜு­தீனின் மரண விச­ார­ணை­களில், தீர்ப்பை வழங்க நீதி­வா­னுக்கு அவ­சி­ய­மா­கி­யுள்ள, தாஜு­தீனின் உடலில் உள்ள சந்­தே­கிக்கத் தக்க காயங்கள் மற்றும் மேல­திக தக­வல்­களை உள்­ள­டக்­கி­ய­தாக சட்ட வைத்­திய அதி­கா­ரி­யிடம் கோரப்­பட்­டுள்ள கேள்­வி­க­ளுக்கு பதிலைப் பெற்றுக் கொள்ள இந்த பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

பெரும்­பாலும் இந்த பரி­சோ­தனை அறிக்­கை­யா­னது எதிர்­வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி அல்­லது அதற்குப் பிறகு மன்றில் தாக்கல் செய்­யப்­படும் என எதிர்பார்க்கப்படு­கின்­றது.

இதனை விட தற்­போது புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­களில் தாஜுதீன் கடத்­தப்­பட்­ட­தா­கவும் அதற்கு டிபண்டர் ரக வாகனம் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­த­கவும் அந்த வாகனம் செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மனைவி ஷிரந்தி ராஜ­ப­க்ஷவின் சிரி­லிய அமைப்­புக்கு வழங்­கப்­பட்­ட­தா­கவும் அது தொடர்பில் செஞ்­சி­லுவை சங்­கத்தின் தலை­வ­ரிடம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

எனினும் இது தொடர்பில் ஒரு வார்த்­தை­யேனும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பிக்­க­வில்லை. பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­க­ரவின் தக­வல்­களின் அமை­வாக செஞ்­சி­லுவை சங்­கத்தின் தலைவர் வி­சா­ரிக்­கப்­பட்­ட­மை­யா­னது உண்மை எனவும் எனினும் வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பில் அவர் விசாரிக்கப்படவில்லை எனவும் வேறு ஒரு வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே விசாரிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

இந் நிலையில் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக அடித்துக் கூறும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன அதனுடன் ஜனாதிபதி பதுகாப்புப் பிரிவினரில் மூவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தற்போது அரசியல் இலாபம் கருதி பல்வேறு வகையில் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் வஸீம் தாஜுதீனின் கே.கிவ்.6543 என்ற வாகனம் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை நீதிமன்றம் டொயாட்டோ லங்கா நிறுவனத்திடம் கோரியுள்ளது. 10 கேள்விகளை கொடுத்துள்ள நீதிமன்றம் அதற்கான பதிலாக அந்த அறிக்கையை கோரியுள்ளது. வஸீமின் கார் விபத்துக்கு உள்ளாகியதா? அதற்கான சாத்தியம் உள்ளதா போன்றவற்றை அரியவே இந்த விஷேட ஆய்வறிக்கை கோரப்பட்டுள்ளது. டொயடோ லங்க தலைமையகத்தின் தொழில் நுட்ப ஆலோசகர் டப்ளியூ.எல்.வில்சன் பெரேராவிடம் கோரப்பட்டுள்ள இந்த அறிக்கையை மேலதிக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க, மோட்டார் வாகன போக்கு வரத்து ஆணையாளர் அலுவலகத்தின் உதவி ஆணையாளர் (தொழில் நுட்பம்) ஜெ.எஸ்.ஏ.ஜயவீர ஆகியோரின் முன்னிலையில் மேறகொண்டு தயாரிக்க வெண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன் அறிக்கையும் மன்றுக்கு சமர்பிக்கப்படவுள்ளதுடன் அதன் ஒரு பிரதி புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக பொலிஸ் தடயவியல் பிரிவினரால் சம்பவம் இடம் பெற்ற வேளை எடுக்கப்பட்ட படங்கள் வீடியோக்கள் என்பனவும் பயன்படுத்தப்படவுள்ளன.

எனவே வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் பொறுப்பு வாய்ந்த ஆழமான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகர தலைமையிலான பொலிஸ் குழு விரையில், பொதிந்துள்ள மர்மங்களை துலக்கி சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. மட்டுமன்றி வஸீம் விவகாரத்தில் அவரது குடும்பத்தார் எதிர்ப்பார்ப்பது எல்லாம் நீதியை மட்டும் தான். அந்த நீதி கிடைக்கும் வரை விசாரணைத் தொடர்பில் கேசரி தொடர்ந்தும் அவதானத்துடன்…

எம்.எப்.எம்.பஸீர்

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2015 இல் 5:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: