Lankamuslim.org

One World One Ummah

ஓட்டமாவடி துப்பாக்கிச் சூடு: குடும்ப பிரச்சினையால் இடம்பெற்றது- ஆரம்ப விசாரணை

leave a comment »

gunfireமட்டக்களப்பு, வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது ஒரு அரசியல் பிரச்சினையாக காட்டப்பட்டாலும் இந்த சூட்டு சம்பவம் குடும்ப பிரச்சினையால் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 15ம் திகதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓட்டமாவடி பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (37 வயது) என்பவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடாத்துவதற்கு உதவியதாக தெரிவிக்கப்படும் நபர் இன்று பிற்பகல் எஸ்.எம்.ஜி.ஹாஜியார் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கியும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வி.ஏ.அர்ஜுனவின் தலைமையில் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறை சார்ஜன்ட் எம்.டி.எம்.தாகா ஆகியோர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது ஒரு அரசியல் பிரச்சினையாக காட்டப்பட்டாலும் இந்த சூட்டு சம்பவம் குடும்ப பிரச்சினையால் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2015 இல் 12:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: