Lankamuslim.org

One World One Ummah

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப் பட்டமைக்கு எதிர்ப்பு வலுக்கிறது

leave a comment »

1ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் காத்தான்குடிக்கு விஜயம். நேற்று ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்கு  இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது .

ஹிஸ்புல்லாஹ் தேசிய பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லாஹ்வகுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் தேசிய பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்கக் கூடாது என கோரியும் அவரின் ஆதரவாளர்களின் வன்முறையை கண்டித்தும் கொழும்பிலும் ,காத்தான்குடியிலும் இன்று  ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது

இந்த சூழ்நிலையில் அங்கு விஜயம் செய்துள்ள ரவூப்  ஹக்கீம் தாக்குதல்கள் தொடர்பிலும் அங்குள்ள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார் இதன்போது தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காரியாலயத்திற்கும் விஜயம் செய்து   .நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர்களுடன் உரையாடியுள்ளார்

தேர்தலில் ஐ.ம. சு.முன்னனி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தோல்வியடைந்திருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசியப் பட்டியலின் மூலம் அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானதாக  செய்தி வெளியானபோது, அவரது ஆதரவாளர்கள் பிரதான சாலைகளிலும் வீதிகளிலும் இறங்கி பட்டாசுகளை கொளுத்தியும் பேரணிகளை நடத்தியும் ஆரவாரம் செய்தனர்.

இதன்போது தமது ஆதரவாளர்களின் வீடுகளுக்குள் புகுந்தும், வீதியால் சென்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீதும் வன்முறைகளில் ஈடுபட்டதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி , தவ்ஹீத் ஜமாஅத்  ஆகிய தரப்பினால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதை தொடர்ந்து தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் தேசிய பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் நல்லாட்சிக்கு எதிராக செயல்பட்டவருக்கு நல்லாட்சி அதிகாரம் எப்படி தேசியபட்டியல் வழங்க முடியும் என விசனம் வெளியிடப்பட்டு வருகிறது ஹிஸ்புல்லாஹ்வகுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் தேசிய பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்கக் கூடாது என கோரியும் அவரின் ஆதரவாளர்களின் வன்முறையை கண்டித்தும் கொழும்பிலும் ,காத்தான்குடியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இந்த பின்னணியில் ஹக்கீமின் விஜயமும் இடம்பெற்றுள்ளது

1 2 3

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 22, 2015 இல் 6:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: