Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் எதிர்கட்சியில் அமர தீர்மானம் !!

leave a comment »

mahinda_team_001முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இம்முறை பாராளுமன்றிற்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது எதிர்க்கட்சியில் அமர்வது குறித்த ஆவணமொன்றில் இந்த உறுப்பினர்கள் நேற்று கையொப்பமிட்டனர்.

இந்த ஆவணம் ஜனாதிபதி மற்றும் புதிய சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை.இதனால் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளோம்.

இந்தக் குழுவின் தலைவரான மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்றம் கூடியதன் பின்னர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோர உள்ளதாக வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 21, 2015 இல் 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: