Lankamuslim.org

One World One Ummah

எமது இலக்கு மற்றும் கொள்கையை சிங்கள பௌத்தர்களிடம் கொண்டுசெல்ல ஆர்வமாக உள்ளோம் :BJP

leave a comment »

boM.ரிஸ்னி முஹம்மட் : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலமாக தாம் பெற்ற வாக்குகள் தாம் ஒரு கட்சி என்றவகையில் சிங்கள பெளத்த எழுச்சி கோட்பாட்டை மக்கள் முன் கொண்டுள்ள செல்ல கூடிய பலத்தை நிரூபித்துள்ளதாகவும் அதன் காரணமாக தாம்  பெற்றகொண்ட  பெறுபேறுகள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாகவும் பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனயின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .

”எமது பிரதான இலக்கு சிங்கள   பெளத்தர்கள் மத்தியில் பெளத்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும்  எழுச்சி பெறச்செய்வதுமாகும் ,நாங்கள் எங்கள் கட்சியின் கொள்கை மற்றும் இலக்கை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல மிக ஆர்வமாக உள்ளோம் ,தேர்தலில் நாம் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஊக்குவிப்பதாக அமைத்துள்ளது” என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .

பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன பல மாவட்டங்களில் போட்டியிட்டது அதில்  களுத்துறை மாவட்டத்தில் அதன் தலைவர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் களமிறங்கினர் அதில் அதன் தலைவர் மாவட்ட ரீதியாக 5752 வாக்குகளை பெற்றுக்கொண்டனர் ,ஏனைய சில மாவட்டங்களில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை அக்கட்சி பெற்றுகொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது,

இதேவேளை நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் பாராளுமன்றிற்கு தெரிவாகக் கூடிய வாக்குகளை பெற்றுக்கொள்ள வில்லை என தெரிவிக்கப்படுகிறது ஆனாலும் தேர்தல் சிலரின் முடிவுகளை அவதானிக்கும்போது அவர்கள்  கணிசமான வாக்குகளை பெற்றுகொண்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது   .ஒரு பொதுவான  அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவர் பெரும் கூடுதலான வாக்குகளுக்கும் , தீவிரவாத கருத்துகள் கொண்ட ஒரு சிந்தனையை முன்வைப்பதன்  மூலம் ஒரு வேட்பாளர்  பெற்றுக்கொள்ளும் குறைவான வாக்குகளுக்கும் இடையிலான நிறை மற்றும் அதன் தாக்கம் தொடர்பில் வேறுபாடு உண்டு என்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் , இத்தகைவர்கள் பெறுவது  குறைவான ஆதரவு என்றாலும் அதற்கு சமூகத்தில் பெரிய தாக்கம் உண்டு என்பது அவதானிக்கப்படல் வேண்டும் ,

பாராளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் ஊடாக சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிட்டனர் என தகவல்கள் தெரிவித்தன .பொதுபல சேனா அமைப்பு இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன என்னும் பெயரில் போட்டியிட்டது.குறைந்தபட்சம் பத்து ஆசனங்களை வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், ஒப்பிட்டளவில் மிகவும் சொற்ப அளவிலான வாக்குகளையே நாடு முழுவதிலும் பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக்கொண்டது இதன் மூலம் பெளத்த சிங்கள மக்கள் அவர்களை நிராகரிதுள்ளார்கள் என்று கொள்ள முடியும் ஆனாலும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் அபாயத்தை உணர்த்துவதாகவே உள்ளது

அதேவேளை யுத்தத்தை வழிநடாத்திய   பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி அதன் தலைவர்   சரத் பொன்சேகா பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும்  ஞானசார தேரர் கூடுதலான வாக்குகளை  பெற்றுக்கொண்டுள்ளார் என்பது சுட்டிகாட்டத்தக்கது

இதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் மற்றும் அதுரலிய ரதன தேரர் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளனர். ஜாதிக ஹெல உறுமய கட்சி தனது பழைய பாதையில் இருந்து விலகி  ஒரு முற்போக்கான பாதையில் பயணிக்கப் போவதாக தெரிவித்து வருகிறது என்பது கவனிக்த்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: