Lankamuslim.org

One World One Ummah

தேர்தல் முடிவுகள் இலங்கையில் மனித உரிமை மேன்பாட்டுக்கு உந்துதல் அளிக்கும்!- பிரான்ஸ்

leave a comment »

fraஇலங்கையில் மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில், வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் உந்துதலை அளிக்கும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் மேலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும் என பிரான்ஸ் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 17ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கைத் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமை மேம்பாடு மற்றும் இன நல்லிணக்க முனைப்புக்களில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும்  மிகவும் அமைதியானதும் சுமூகமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.

மேலும்  இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும்  பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 5:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: