Lankamuslim.org

One World One Ummah

தேசிய அரசாங்கத்தை உருவாக்க SLFP இணக்கம், UPFA மஹிந்த முகாம் எதிர்ப்பு

leave a comment »

SLFPதேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (20) கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கியுள்ளார் .

சுசில் பிரேமஜயந்த கலந்தகொள்ளாத மஹிந்த முகாமின் கூட்டம்

UPFA மஹிந்த முகாமில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய குழுவினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாகவும், கலந்துரையாடலில் இணைந்து கொண்டு உறுப்பினர்களிடம் இருந்து தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொள்ளவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 20, 2015 இல் 1:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: