Lankamuslim.org

One World One Ummah

கிடைத்த ஆசனங்களை கொண்டு முடிந்த அளவு நாட்டிற்கு நல்லதை செய்வோம்: JVP

leave a comment »

anura kumaraபொதுத் தேர்தலில் குறைந்தது 30 ஆசனங்களையாவது கைப்பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை  என தெரிவிக்கப்படுகிறது

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் அந்த கட்சியின் வெற்றிக்காக பாரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் அந்தக் கட்சி மேற்கொண்ட பிரசாரம் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த பிரசாரத்தின் மூலம் முழுமையான  பலன் கி்டைக்காத நிலையை , முடிவுகள் காட்டுகின்றன்.  மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தல் முடிவுகளின்படி6 ஆசனங்களே கிடைக்கப் பெற்றுள்ளது

அதேவேளை இம்முறை பொது தேர்தலில் இதனை விட சிறப்பான முடிவினை எதிர்பார்த்தோம் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்த முடிவினை விடவும் அதிகமான ஒரு தேர்தல் முடிவினை நாங்கள் எதிர்பார்த்தோம் எனினும் நாங்கள் எதிர்பார்த்தவை எங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.எனினும் கிடைத்த ஆசனங்களை கொண்டு முடிந்த அளவு நாட்டிற்கு நல்லதை  செய்வோம்  என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2015 இல் 5:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: