Lankamuslim.org

One World One Ummah

இறுதி முடிவு: ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 106, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95

leave a comment »

 unpபாராளுமன்ற இறுதி முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 13 போனஸ் ஆசனங்கள் அடங்களாக  106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 95 (இணைப்பு) ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 6  ஆசனங்களையும்,தமிழ் அரசுக் கட்சி 2   போனஸ் ஆசனங்கள் அடங்களாக 16 ஆசனங்களையும், மட்டு மாவட்டத்தில் தனித்து போட்டியிட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனத்தையும்  EPDP ஒரு ஆசனத்தையும் பெற்று கொண்டுள்ளன

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, இலங்கையில் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 5,098,927 வாக்குகளைப் பெற்று 93 இடங்களை வென்றிருக்கிறது. 45.7 சதவீத வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 8 தேர்தல் மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 47,32,669 வாக்குகளைப் பெற்று 83 இடங்களை வென்றிருக்கிறது. 42.4 சதவீத வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 5,15,963 வாக்குகளைப் பெற்று 14 இடங்களை அது வென்றிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்ட எந்த மாவட்டத்திலும் வெற்றிபெறாவிட்டாலும் 5,43,944 வாக்குகளைப் பெற்று நான்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் 4.9 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலில் அதிக உறுப்பினர்களை வென்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணிக்கு தனித்து  ஆட்சியமைப்பதற்குத்தேவையான அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்களான 113 பேர் கிடைக்கவில்லையென்றாலும், ரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிக்க ஜனகதிபதி மைத்திரியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னனி , தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய வற்றின் துணை இருப்பதால் ஆட்சி அமைப்பதில் பெரிய சிக்கல்கள் ஏதும் ஏற்படாது என அறிய முடிகிறது

Written by lankamuslim

ஓகஸ்ட் 18, 2015 இல் 8:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: