Lankamuslim.org

One World One Ummah

மண்டையில் போடச் சொல்கிறார் தேர்தல் ஆணையாளர் !!!!

leave a comment »

gunshot1நாளை நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்­களில் வன்­முறைகளில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொலி­ஸா­ருக் கு கட்­டளை பிறப்­பித்­துள்ளார்.

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலை நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லாக நடத்­து­வது அவசியமாகும். அதற்­கி­ணங்­கவே நாளை நடைபெ­ற­வுள்ள தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலை­யங்­களில் அத்­து­மீறி வன்­ மு­றை­களில் ஈடுபடுபவர்­க­ளுக்­கெ­தி­ராக பாதுகாப்பு பிரிவு உச்­ச­கட்ட அதி­கா­ரத்தைப் பிர­யோ­கித்து தலையில் சுடு­மாறும் தேர்தல் ஆணை­யாளர் பொலிஸாரை வேண்­டி­யுள்ளார்.

தேர்­தலின் போதும் தேர்­தலின் பின்­னரும் நாட்டின் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். அத்­துடன் வாக்­காளர்கள் எது­வித கெடுபிடிகளு­மின்றி வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு சென்று சுதந்­தி­ர­மான முறையில் வாக்­க­ளிக்க வேண்டும். அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து கொடுப்­பது தேர்தல் திணைக்­க­ளத்தின் கட­மை­யாகும். அதற்­கி­ணங்க அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­தி­னூ­டாக ஒதுக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­திற்­க­மைய தேர்தல் திருத்தச் சட்­டங்­களை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. எனவே அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­தி­னூ­டாக வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­திற்­கி­ணங்­கவே வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளேன்.

எனவே வாக்­கா­ளர்கள் எந்­த­வொரு அழுத்­த­மு­மின்றி சுதந்­தி­ர­மாக தாம் விரும்­பிய கட்­சிக்கோ அல்­லது தாம் விரும்­பிய சுயேச்சைக் குழு­வுக்கோ வாக்­க­ளிக்­கலாம். அதற்­கான சகல பாது­காப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன. வன்­முறைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். மேலும் தேவைப்­ப­டு­மி­டத்து பொலிஸார் இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யினை பெறு­வ­தற்­கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வன்முறைகள் இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசேட அதிரடிப்பிரிவினை நடமாடும் சேவையில் ஈடுபடுத்தவும் பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

cartoon

Written by lankamuslim

ஓகஸ்ட் 16, 2015 இல் 8:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: