Lankamuslim.org

One World One Ummah

ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானதாகும் என்பதை ஏற்றுகொண்டவனாக சத்தியமிடுகிறேன்

leave a comment »

eng-abdurrahumanவிபரம் இணைப்பு: “அல்லாஹ் பொறுப்புகளை, கடமைகளை அதற்குத் தகுதியானவர்களிடம் அல்லது அதற்கு உரியவர்களிடம் கொடுத்து விடுமாறு கட்டளை இடுகிறான். மக்களிடையே தீர்ப்புச் சொன்னால் நீதியாகச் சொல்லுமாறும் கட்டளை இடுகிறான்” (சூரத்துன் நிஸா: 58)

என்ற இறை வசனத்தை மனதிற் கொண்டவனாகவும் “இனில் ஹுக்ம இல்லாலில்லாஹ்” ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானதாகும் என்ற அல்குர்ஆனின் வழிகாட்டலை ஏற்றுக்கொண்டவனாகவும் ஆகஸ்ட் 17ம் திகதி நடக்கவிருக்கின்ற தேர்தலில் மக்கள் வழங்கும் ஆணைக்கேற்ப பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் எனக்கு வழங்கப்படும் பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றி மக்களிடையிலான சகல செயற்பாடுகளிலும் எவ்வித தன்னலமும் இன்றி நீதியாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வேன் என இறைவனின் பெயரால் இந்தச் சத்தியப்பிரமாணத்தினை இங்கு கூடியுள்ள உலமாக்கள், சமூகத் தலைவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் இம்முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் முன்னால் மேற்கொள்கின்றேன்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒழுக்க விதிமுறைகளுக்கமைய தமது சத்தியப் பிரமாணத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி    ஆகியவற்றின் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேற்கொண்டார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்போதும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இதேபோல் ஒரு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 சத்திபிரமாணம் PDF வடிவத்தினை கீழே  க்ளிக் பண்ணுவதன்மூலம் காணலாம்.

சத்திபிரமாணம்

Written by lankamuslim

ஓகஸ்ட் 16, 2015 இல் 12:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: