Lankamuslim.org

One World One Ummah

ஹெம்மாதகமை: முதல் தடவையாக பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனம் 2015

leave a comment »

PDA 4Mohammed Rizmy:ஹெம்மாதகமையில் வரலாற்றில் முதல் தடவையாக பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனம் – 2015 வெளியீட்டுநிகழ்வு முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ‘பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனம்” வெளியிடும் நிகழ்வொன்று 2015.08.09 ம் திகதி ஹெம்மாதகமையில் இடம்பெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொருவிடயமாக அமையக்கூடிய இந்நிகழ்வினை அபிவிருத்திக்கான முற்போக்கு அமையம் (Pனுயு) ஏற்பாடுசெய்திருந்தது. ஹெம்மாதகமை பிரதேசத்தின் முக்கியமான சிவில் தலைமைத்துவ அமைப்புகள், புத்திஜீவிகள்,பௌத்த மதகுருமார்கள் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

ஹெம்மாதகமை பௌத்த-இஸ்லாமிய நட்புறவுச் சங்கம் சார்பாக அதன் இணைத்தலைவர் யு.ஊ.ஆ.அஸ்ஹர் அதிபர் அவர்களும் மெதிலிய ரஜமஹ விகாரை விகாராதிபத pஞானானந்த ஹிமிபௌத்தமதகுருவும், ஹெம்மாதகமை பள்ளிவாயல் சம்மேளனதலைவர் ஓய்வுபெற்றஅதிபர் யூசுப் அவர்களும், ஹெம்மாதகமை வணிகசம்மேளனத்தின் தலைவர் சுமனசிரிவீரசேகர அவர்களும் கப்புரக்கவிகாரை விகாராதிபதி ஹப்புவிடநாரத ஹிமி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் ஹெம்மாதகமையைச் சேர்ந்த அமைப்புக்கள்ää சங்கங்களின் பரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தியின் முன் நகர்வு-2015 பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனமானது ஹெம்மாதகமையின் அபிவிருத்த pதொடர்பானமுதன்மைக் காரணிகள் 3 ஐ உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. முலையக-கொழும்பு மாற்றுப்பாதையாக ஹெம்மாதகமையூடான கம்பளை-மாவனல்லை பாதையை விருத்திசெய்தல், ஹெம்மாதகமைக் கானதனியான பிரதேசசெயலகம், ஹெம்மாதகமை வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக(டீயளந hழளிவையட-டீ) தரமுயர்த்தல் என்பனவே பிரதானகோரிக்கைகளாகும். இவை அடுத்த பாராளுமன்ற காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இக் கோரிக்கைகள் ஹெம்மாதகமை பிரதேசவாசிகளி நீண்டகாலகோரிக்கைகளாகும் என்பதுடன் இவை விரைவாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் மக்களின் ஏகோபித்த கருத்தாகும்.

இந்நிகழ்வில் பிரஜைகள் விஞ்ஞாபனம் பற்றியகருத்துரை அபிவிருத்திக்கான முற்போக்கு அமையத்தின் தலைவர் மருத்துவர் இர்ஷாத் அவர்களாலும் பிரஜைகள் விஞ்ஞாபனம் பற்றிய அறிமுகஉரை அமையத்தின் செயலாளர் அஸ்லான் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.

இங்குபௌத்த-இஸ்லாம் நட்புறவுச் சங்கம் சார்பாகஉரையாற்றிய  pஞானானந்த ஹிமிபௌத்தமதகுரு அவர்கள் ஹெம்மாதகமைஅபிவிருத்தியில் பின் தங்கியுள்ளதுஎனவும் இங்குகுறிப்பிடப்பட்டுள்ள மூன்று இலக்குகளையும் பிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனமாகவெளியிட்டுள்ளமைமிகமுக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்டார். பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவர் உரையாற்றுகையில் இவ்விலக்குகளை அடைந்துகொள்வதுகட்டாயமானதாகும் என கூறியதுடன் அதற்குஅனைத்துஅமைப்புகளும் ஒன்றாகவும் உறுதியாகவும் செயற்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார். அஸ்ஹர் அதிபர் அவர்கள் தனதுஉரையில் ஹெம்மாதகமையில் சிங்கள-முஸ்லிம் சகவாழ்வுபற்றிஎடுத்துக் கூறியதுடன் எமதுபிரதேசத்தின் முக்கியதேவைப்பாடுகளைபுள்ளிவிபரங்களுடன் தர்க்கரீதியாக இவ்வாவணம் முன்வைப்பதாக கூறினார். இவ்வைபவத்தில் உரையாற்றியவணிகசம்மேளனத்தின் தலைவர் சுமனசிரிவீரசேகரஅவர்கள் கருத்துதெரிவிக்கும் போது இவ்விலக்குகளைஎந்தசந்தேகமுமின்றிஏற்க கூடியதாகவுள்ளதுஎனவும் அதிலும் ஹெம்மாதகமைபாதைமிகமுக்கியமானதுஎனவும் குறிப்பிட்டார்.

இங்குசமூகமளித்திருந்தஎல்லாசிவில் தலைவர்களும்ääசமூகஆவலர்களும் இம் மூன்று இலக்குகளையும் ஏற்றுஉறுதிப்படுத்தியதுடன் அதனைநிறைவேற்றித் தருமாறுஅரசியல் தலைமைத்துவத்தைவேண்டிநின்றனர். சிவில் சமூகஅரசியலைவலுப்படுத்தும்ääபங்கேற்பு ஜனநாயகத்தைஉறுதிப்படுத்தும் இம்முயற்சியைகட்சிதாண்டியஅரசியலின் முதல் நகர்வாககொள்ளலாம். இவ்வகையில் முற்போக்கானஅரசியல் கலாச்சாரத்திற்கானஆரம்பப் புள்ளியாகபிரஜைகள் தேர்தல் விஞ்ஞாபனவெளியீடுமுக்கியம் பெறுவதுடன் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒருமைல்கல்லாகஅமையப் போகிறதுஎன்பதில் சந்தேகமில்லை. மென்மேலும் இது போன்றமுயற்சிகளைமுன்னெடுக்கவல்ல இறைவன் அருள் புரிவானாக.

PDA 1 PDA 2 PDA 6 PDA 5 PDA 4 PDA 3

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 16, 2015 இல் 5:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: