Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் : ACJU

with one comment

ACJUமுஸ்லிம்களுக்கு எதிராக பல தீயசக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தேர்தல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவோர் தூய எண்ணம், தக்வா, அமானிதம் பேணுதல், தூர நோக்கு, நீதி, நேர்மை போன்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட முன்மாதிரியானவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்தோடு தமது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக, அரசியல் வாழ்க்கையிலும் இஸ்லாம் கூறும் ஹலால், ஹராம் வரையறைகளைப் பேணுவதில் விழிப்போடிருத்தல் வேண்டும்.

அறிக்கை

முஸ்லிம்களுக்கு எதிராக பல தீயசக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தேர்தல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கட்சிப் பேதங்களை ஓரங்கட்டி, பிறரை கேவலப்படுத்துவதை தவிர்த்து பொது இலக்குகளை நோக்கி பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் விடுத்துள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது செயல்களின் பெறுமானம், அரசியல் செயற்பாடுகள் உட்பட அனைத்தையும் எந்தளவு தூய்மையுடன் இறை திருப்தியை நாடிச் செய்கின்றோம் என்பதிலேயே தங்கியிருக்கிறது. இவ்வகையில் அரசியல்வாதிகள் தமது அரசியல் பயணத்தில் பெயர், புகழ், பிரபல்யம், பதவி, உலக சுகபோகங்கள் முதலான உளத்தூய்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்த நிலையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள முழு முயற்சி செய்தல் வேண்டும். அவ்வாறெனில் தான் எமது அரசியல் சார்ந்த செயற்பாடுகள் எமக்கு நன்மை பெற்றுத்தரும்.

முஸ்லிம்கள் நாம் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவோர் தூய எண்ணம், தக்வா, அமானிதம் பேணுதல், தூர நோக்கு, நீதி, நேர்மை போன்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட முன்மாதிரியானவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்தோடு தமது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக, அரசியல் வாழ்க்கையிலும் இஸ்லாம் கூறும் ஹலால், ஹராம் வரையறைகளைப் பேணுவதில் விழிப்போடிருத்தல் வேண்டும்.

அல்குர்ஆன் வசனங்களை பிழையாக மேற்கோள் காட்டுதல், அவற்றை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதிலிருந்தும் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களை தேர்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதிலிருந்தும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 15, 2015 இல் 5:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. சரியான மார்க்க அறிவோ, உலக அறிவோ அற்ற பாமரர்களிடம் தலைமைத்துவத்தை கொடுத்தல் இப்படிதான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இரண்டும் கேட்டான் நிலைமை. உ. அமைப்பின் அறிக்கையை இப்பொது யாரும் கனகெடுபதில்லை. முதலில் காங்கரஸ் பெயரில் உள்ள ஒரு கட்சி “லா ஹி லா ஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்” பொறிக்கப்பட்டுள்ள ஒரு கொடியை பயன்படுத்துகிறது. அது சரியாய் அல்லது பிழையா என்று சொல்லுங்கள்.

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 17, 2015 at 3:27 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: