Lankamuslim.org

One World One Ummah

ஜனாதிபதி தனது ஆளுமை எப்படியானது என்பதை செயலில் காட்டியிருக்கிறார் : ஹக்கீம்

with 2 comments

hakeemஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அச­காயசூரர் என்­பதை அவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச­வுக்கு எழு­திய கடி­தத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பிலும் பொறுப்­பு­வாய்ந்த பத­வி­களை வகித்த இரு­வரை செய­லி­ழக்கச் செய்­ததன் மூலமும் நிரூ­பித்துக் காட்­டி­யி­ருக்­கிறார்.

அவர் மேற்­கொண்ட இந்த அதி­ரடி நட­வ­டிக்­கையின் விளை­வாக மஹிந்த ராஜ­ப­க்வும், அவ­ருக்கு ஆதரவாக செயல்­படும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் இப்­பொ­ழுது செய்­வ­த­றி­யாது திக்­கு­முக்­காடிப் போயிருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி தமது ஆளுமை எத்­த­கை­யது என்­பதை உரிய முறையில் செயலில் காட்­டி­யி­ருக்­கின்றார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­சரும், கண்டி மாவட்ட ஐ.தே.முன்­ன­ணியின் வேட்பா­ள­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

உடு­நு­வரைத் தொகு­தியில் கெலி­ஓய நகரில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற இறுதி தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாடு பற்­றியும் நாட்டு எல்­லை­களின் ஸ்திரத்­தன்மை பற்­றியும், நாட்டின் இறைமை பற்­றியும் போதிய புரிந்­து­ணர்­வின்றி செயல்­பட்­ட­வர்­க­ளா­கவே முன்னாள் ஜனா­தி­ப­தி­யையும், அவரது ஆத­ர­வா­ளர்­க­ளையும் நாம் காண்­கின்றோம்.

அப்­பாவி நாட்­டுப்­புற சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் இன­வாதக் கருத்­துக்­களை விதைத்து அவர்­களை உசுப்­பேற்றி இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­திற்கு ஊறுவிளை­விக்­கவே முன்னாள் ஜனாதிபதி இன்­னமும் எத்­த­னித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

ஜன­வரி 8ம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட யுகப் புரட்­சிக்கு வழி­கோ­லி­ய­வர்­களை மறக்­காது, அதனை பாது­காக்க உத­விய தரப்­பி­ன­ருக்கு தாம் ஒரு­போதும் துரோகம் செய்­யப் ­போ­வ­தில்­லை­யென்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க்சவுக்கு அனுப்­பிய கடி­தத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­களின் மூலமும் உணர்த்­தி­யுள்ளார்.

தற்­பொ­ழுது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கணிப்­பு­க­ளின்­படி ஐக்­கிய தேசிய முன்­னணி தேர்­தலில் 120 ஆச­னங்­களை வெற்றி கொள்­ளக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ளன. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு தோல்வியைத் தழு­வு­வது நிச்­ச­ய­மாகி விட்­டது.

ஆட்சி மாற்­றத்­திற்கு உதவிய, மக்கள் இந்தத் தேர்­தலில் தூர நோக்­குடன் நாட்டின் அபி­வி­ருத்­தியை நோக்­க­மாகக் கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணங்கிச் செல்லும் ரணில் விக்கிரமசிங்­கவை மீண்டும் பிர­த­ம­ராக்­கு­வதில் முனைப்பாக இருக்கின்றனர்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 15, 2015 இல் 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. அரசியல் அனாதைகளுக்கு ரணில் வந்தால் என்ன மகிந்த வந்தால் என்ன…தான் உண்டு தனது குடும்பம் உண்டு என்று இருப்பார்கள்…..ஹகீம் ஒரு அரசியல் வியாபாரி.

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 15, 2015 at 5:18 பிப

  2. உனக்கு வெட்கமில்லையா தலைவா… (மைத்திரியிடம் சேஷ்டை விட முடியாது என தெரிந்தவுடன்) மைத்திரியின் ஆளுமை பற்றி பேசவும், (முன்னர் மகிந்தவின் சால்வையில் தொங்கிக்கொண்டிருந்தபோது) மகிந்தவின் ஆளுமை (தனது கொந்தராத்து முதலாளியான) ரணில் ஆளுமை பற்றி பேசவும், (தனது சமூகத்திற்காக வீரமாய் முழங்கும்) சம்பந்தன் ஆளுமை பற்றி பேசவும், அவ்வாறே தேர்தல்கள் வரும்போது மட்டும் மறைந்த உண்மையான தலைவர், அஷ்ரபின் ஆளுமை பற்றி பேசவும்??? ….. உம்மையும் அவ்வாறுதானே எதிர்பார்த்து “தேசிய??” தலைவராக்கினோம்?? ஆனால் நீர்மட்டும், “புதிய, புதிய வியூகங்கள் அமைத்து “பின் கதவால்” பேரம் பேசி, உமதும் உமது கூட்டத்தினதும் பொக்கட்டுகளை மாத்திரம் நிறைத்து கொள்கிறீரே?? கொஞ்சமாவது, வெட்கம்,சுரணை வரக்கூடாதா, “நாமும் ஒரு கட்சியின் தலைவர்தானே, அந்தக்கட்சியின் (உருவாக்கப்பட்ட உண்மையான நோக்கத்திற்காக) கொஞ்சமாவது ஆளுமையாய் இருந்து பார்ப்போமே” என்று? கேவலமாய் இருக்குதைய்யா… உம்மை பார்க்க… வேதனை தாங்க முடியலைய்யா?

    Risniy

    ஓகஸ்ட் 16, 2015 at 10:29 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: