Lankamuslim.org

One World One Ummah

மஹிந்­தவை பிர­த­ம­ராக நிய­மித்­தே­யா­க­வேண்டும்: .மஹிந்த முகாம் தலை­வர்கள்

leave a comment »

mahiஎதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்றிபெற்றதும் மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி மைத்­ தி­ரி­பால சிறி­சேன பிரதமராக நிய­மித்­தே­யா­க­ வேண்டும். அவரை ஜனாதி­பதி பிர­த­ம­ராக நிய­மிப்பார். விருப்­ப­மின்­றி­யா­வது மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால நிய­மிப்பார் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வர்கள் தெரி­வித்­தனர்.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெறும் என்று கடிதம் மூலம் உறு­தி­ப­டுத்­தி­ய­மைக்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம்
என்றும் ஐ.ம. சு. மு. வின் தலை­வர்கள் குறிப்­பிட்­டனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் மாநாடு 14 கொழும்பில் உள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட பங்­காளிக் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு கூறினர்.

சுசில் பிரேம்­ஜ­யந்த

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் சுசில் பிரேம்­ஜ­யந்த குறிப்­பி­டு­கையில்

கடி­தங்­களை அனுப்­பு­வதன் மூலம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை யாரும் தட்­டிப்­ப­றிக்க முடி­யாது. மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் காணப்­ப­டு­கின்ற தனிப்­பட்ட விட­யங்­களை நாங்கள் கவ­னத்­திற்­கொள்­ள­வில்லை. மாறாக அதில் உள்ள அர­சியல் விட­யங்­களை பார்க்­கின்றோம். அதில் இரண்டு விட­யங்கள் உள்­ளன. முத­லா­வ­தாக எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெறும் என்­பது உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதனை வலி­யு­றுத்­தி­ய­மைக்­காக ஜனா­தி­ப­திக்கு நன்றி கூறு­கின்றோம்.

மஹிந்த பிர­த­ம­ராக வருவார்

இரண்­டா­வது விட­ய­மாக பிர­தமர் பதவி விவ­காரம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்டும் என்ற எமது கோரிக்­கை­யிலும் அழுத்­தத்­திலும் எந்த மாற்­றமும் இல்லை. மஹிந்­தவை ஜனா­தி­பதி சிறி­சேன பிர­த­ம­ராக்­கியே தீர­வேண்டும். அவர் அதனை செய்வார். குறிப்­பாக தற்­போ­தைய நிலை­மைக்கு எவ்­வா­றான தலைவர் தேவை என்­ப­தனை சிந்­திக்­க­வேண்டும்.

நெருக்­க­டியில் நாடு

தற்­போது எமது நாடு முகம்­கொ­டுத்­துள்ள நெருக்­கடி நிலையை பார்க்­கும்­போது நிச்­ச­ய­மாக மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்­றே­யா­க­வேண்டும். வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இது­போன்ற ஆபத்­தான நிலையே நாட்டில் உள்­ளது. எனவே இவற்றை சமா­ளிக்கும் வகை­யி­லான சிறந்த தலை­மைத்­துவம் நாட்­டுக்கு தேவை­யாகும். அதற்கு மஹிந்த ராஜ­ப­க்ஷவே பொருத்­த­மா­ன­வ­ராவார். இந்த நாட்­டுக்கு யுத்­தத்தை முடித்து சமா­தா­னத்தை மஹிந்­தவே கொண்டு வந்தார் என்றார்.

ஜோன் சென­வி­ரட்ன

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலைவர் ஜோன் சென­வி­ரட்ன செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யி­டு­கையில்

ஜனா­தி­பதி மைத­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தின் மூலம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை உறு­தி­ப­டு­த­தி­யுள்ளார். அந்­த­வ­கையில் எமது வெற்றி உறு­தி­யா­கி­விட்­டது. இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெற்­றதும் மஹிந்­த­வுக்கு பதி­லாக வேறு யாரை­யா­வது பிர­த­ம­ராக நிய­மிக்க முடி­யுமா என்று ஜனா­தி­பதி கடி­தத்தில் கோரி­யுள்ளார்.

எனக்கு பிர­தமர் பதவி வேண்டாம்

அவர் எனது பெயர் உள்­ளிட்ட ஏழு பேரின் பெயர்­களை முன்­மொ­ழிந்­துள்ளார். அந்த ஏழு­பேரின் சார்­பா­கவும் நான் ஒரு விட­யத்தை இங்கு கூறு­கின்றேன். நாங்கள் ஏழு பேரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­கவே விரும்­பு­கின்றோம். தற்­போ­தைய நிலை­மையில் அவரே பொருத்­த­மான தலைவர். எனவே மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­ப­தியை கோரு­கின்றோம். நாங்கள் பிர­தமர் பத­வியை ஏற்­ப­தற்கு தயா­ராக இல்லை. அதற்கு தகு­தி­யா­னவர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆவார் என்றார்.( அந்த ஏழு  பேரில் ஒருவரான அமைச்சர் பௌசி இந்த கருத்துடன் முரண்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது )

தினேஷ் குண­வர்த்­தன

செய்­தி­யாளர் சந்­திப்பில் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன கருத்து வெளி­யி­டு­கையில்

மக்கள் வழங்­கு­கின்ற ஆணையை யாராலும் மாற்ற முடி­யாது. மக்கள் மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக தெரிவு செய்­வ­தற்கு தயா­ரா­கி­விட்­டனர். எனவே மக்­களின் ஆணையை அனை­வரும் மதிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 1994 ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி டி.பி. விஜே­துங்க சந்­தி­ரி­காவை பிர­த­ம­ராக நிய­மித்­த­த­தைப்­போன்றும் 2001 ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்­த­ததைப் போன்று இம்­முறை மஹிந்­தவை பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்த கலா­சாரம் பின்­பற்­றப்­ப­ட­வேண்டும். மக்­களின் ஆணையை மதி­யுங்கள் என்றார்.

வாசு­தேவ நாண­யக்­கார

செய்­தி­யாளர் சந்­திப்பில் புதிய இட­து­சாரி முன்­ன­ணியின் தலைவர் வாசு­தேவ நாண­யக்­கார குறிப்­பி­டு­கையில்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தீர்­மா­னத்­துக்கு மாறாக கருத்து வெளி­யிட்­டுள்ளார். மக்­களின் ஜன­நா­யக உரி­மையில் எவரும் கைவைக்க முடி­யாது. திருட்டுப் பாகையில் வந்த ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மிக்க முடி­யு­மாயின் ஏன் மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­படும் மஹிந்த ராஜ­ப­க்ஷவை நிய­மிக்க முடி­யாது? என்று கேட்­கின்றோம் என்றார்.

விமல் வீர­வங்ச

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வங்ச செய்­தி­யாளர் மாநாட்டில் குறிப்­பி­டு­கையில்

மண­ம­களின் வீட்­டுக்கு மண­மகன் வசிக்க போனால் மண­ம­களின் வீட்டார் கூறு­வ­தையே செய்­ய­வேண்­டி­யேற்­படும். இதுதான் நிலை­மை­யாகும். ஜனா­தி­பதி மைத­தி­ரி­பால சிறி­சே­னவும் ரணிலின் வீட்­டுக்கு வசிக்கப் போனால் இவ்­வா­றுதான் நடந்­து­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. அவரின் இக்­கட்­டான நிலை எங்­க­ளுக்கு புரி­கின்­றது. ஆனால் அந்த திரு­மணம் எதிர்­வரும் 17 ஆம் திக­தி­யுடன் விவா­க­ரத்துப் பெற்­று­விடும். ஜனா­தி­பதி மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன­ன­ணியின் வீட்­டுக்கு வந்­து­வி­டலாம்.

ரணில் சமஷ்­டி­யையும்

தாண்டிச் செல்வார்

சொந்த அர­சாங்­கத்தை அமைத்து நாட்டை நிர்­வ­கிக்­கலாம். மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை உறு­தி­ப­டுத்­தி­யுள்ளார். மேலும் அடுத்தத் தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்க தெரிவு செய்­யப்­பட்டால் அவர் சமஷ்­டி­யையும் தாண்டிச் செல்வார். சம்­பிக்க ரணவக்கவினால் எதுவும் செய்ய முடியாது. எனவே மக்கள் சிந்திக்கவேண்டும். கடந்த ஜனவரி எட்டாம் திகதி இழைத்த தவறுக்கு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பிரயாசித்தம் தேடவேண்டியுள்ளது என்றார்.

உதய கம்மன்பில

செய்தியாளர் சந்திப்பில் உதய கம்மன்பில குறிப்பிடுகையில்

ஜனாதிபதி அனுபபியுள்ள கடிதத்தில் பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் தேர்தலில் 113 ஆசனங்களை பெறாமல் அதற்கு அருகில் வரும் எண்ணிக்கையை பெற்றால் எஞ்சிய ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை அமைக்க தலையிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் தேர்தலின் பின்னர் உருவாவதை ஜனாதிபதி விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது என்றார்.-vk

Written by lankamuslim

ஓகஸ்ட் 14, 2015 இல் 8:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: