சுசில் ,அநுரபதவிகளிலிருந்து நீக்கம், கட்சியின் உறுப்புரிமைக்கும் தடை
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகிய இருவரின் கட்சி உறுப்புரிமைக்கும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு அமைவாக அல்லாமலும் கட்சி மற்றும் அதன் இருப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையால் கட்சி யாப்பில் இருக்கின்ற அதிகாரங்களுக்கு அமைவாக கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இவ்விருவரையும் நீக்குவதாக மைத்திரிபால சிறிசேனவினால் கையெழுத்திட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரின் மத்தியக்குழு உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளதுடன் சுசில் பிரமேஜயந்த வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதங்களின் பிரதிகள் தேர்தல்கள் ஆணையாளர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று சபை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாக செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.-TM
ஜனாதிபதியினால் புதிய செயலர்கள் நியமனம்!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்