Lankamuslim.org

One World One Ummah

UNP அவர்­களின் ஆட்சிக்­கா­லத்தில் நடந்த மர்­ம­மான கொலைகள் தொடர்பில் மௌனம் காப்­பது ஏன் ?

with one comment

dilanஅதிக போதையின் கார­ணத்­தி­னா­லேயே ரக்பி வீரர் தாஜுதீன் மர­ணித்தார். அவரை திட்டமிட்டு கொல்லவேண்­டிய அவ­சியம் இல்லை என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினர் தெரி­வித்­தனர். தாஜு­தீனின் சட­லத்தை தோண்டி எடுத்­தேனும் மஹிந்­த­வையும் அவ­ரது குடும்­பத்­தையும் கொலைகாரர்கள் என குற்றம் சுமத்­தவே ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் முயற்­சிப்­ப­தா­கவும் அவர்கள் குறிப்பிட்­டனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற போதே அக் கட்­சி­யின் முக்கிய தலைவர்கள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா கூறு­கையில்,

நிதிக்­குற்ற புல­னாய்வு பிரிவு எனும் பெயரில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் சட்­டத்­துக்கு முர­ணான வகையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். பிர­தமர் ரணில் தலை­மையில் விசேட குழு­வினை நிய­மித்து ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­களை விசா­ரித்து வரு­கின்­றனர். இவர்­க­ளது இலக்கு மஹிந்த குடும்­பத்தின் மீதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மீதுமே உள்­ளது. எனினும் இவர்கள் தேர்தலை இலக்கு வைத்து இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேறகொள்­கின்­றனர் என்­பது எமக்கு நன்­றாக விளங்­கு­கின்­றது. ஆகவே இந்த விட­யங்கள் தொடர்பில் நாம் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளோம்.

தேர்தல் முடி­வ­டையும் வரையில் தனிப்­பட்ட முறையில் எவ­ரையும் விசா­ரிக்கக் கூடாது என்ற கோரிக்கை­யினை நாம் முன்­வைத்­துள்ளோம். அதற்கு இணங்­கு­வ­தா­கவும், தேர்தல் காலம் முடிவடையும் வரையில் விசா­ரணை செயற்­பா­டு­களை ­ஒத்திவைக்குமாறு அர­சாங்­கத்­திடம் தெரிவிப்பதா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் இப்­போது பிணங்­களை தோண்டி அதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ குடும்­பத்தினரை கொலையாளிகள் என குற்றம் சுமத்தும் செயற்­பா­டு­களை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர். முழு­மை­யாக அர­சியல் சுய­நல செயற்­பா­டா­கவே நாம் இதை பார்க்­கின்றோம். றக்பி வீரர் தாஜுதீன் மர­ணத்தை வைத்து உண்­மையை கண்­ட­றியும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அவர்­களின் ஆட்சிக்­கா­லத்தில் நடந்த மர்­ம­மான கொலைகள் தொடர்பில் மௌனம் காப்­பது ஏன்? சன்ன விஜய சூரிய, சாக­ரிகா ஹோமஸ், சொய்சா, விஜ­ய­தாச லிய­னா­ராச்சி, ரேவிஸ் குருகே ஆகி­யோரின் கொலை­களை கண்­ட­றி­யா­தது ஏன்? அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் கணவர் விஜய குமா­ர­துங்­கவை கொலை செய்­தது யார்? ஐக்­கிய தேசியக் கட்­சியே விஜய குமா­ர­துங்­கவை கொலை செய்­தது என சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆரம்­பத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அதேபோல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் ரோஹன விஜ­ய­வீ­ரவை கொலை­செய்­தது யார்? இந்த விட­யத்தில் அனு­ர­கு­மார திசா­நா­யக்­கவும், சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் தொடர்ந்தும் மௌனம் காப்­பார்­களா அல்­லது இப்­போ­தா­வது மௌனம் கலை­வார்­களா? இந்த கேள்­வி­க­ளுக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி விடை கூற வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் வதை முகாம் தொடர்பில் எமக்கு நன்­றா­கவே தெரியும். இளை­ஞர்­களை கொண்டு குவித்­தமை, உயி­ரோடு எரித்­தமை எல்லாம் ஆதார பூர்­வ­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் மங்­கள சம­ர­வீ­ரவே தெரி­வித்­துள்ளார். ரணிலின் போதைக்கு இளை­ஞர்­களின் மண்­டை­யோ­டுகள் உண­வா­க்கப்­பட்­டது என்­பதை யாரும் மறந்­து­விடக் கூடாது.

வெறு­மனே தாஜு­தீனின் மர­ணத்தை வைத்து மஹிந்த குடும்­பத்தை கொலை­யா­ளி­யாக்க ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிப்­பதை கைவிட வேண்டும். எனவே, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தோல்­வியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மஹிந்த அணி­யி­ன­ருக்கு மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்றார்.

செய்­தி­யாளர் சந்­திப்பில் உதய கம்­மன்­பில கூறு­கையில்,

கடந்த காலத்தில் மஹிந்­தவை திருடர் என்று விமர்­சித்து வந்­த­வர்கள் இப்­போது மஹிந்­தவை கொலை­காரன் என வர்­ணிக்க ஆரம்­பித்­துள்­ளனர். தாஜு­தீனின் சட­லத்தை தோண்டி எடுத்­தேனும் மஹிந்­த­வையும் அவ­ரது குடும்­பத்­தையும் கொலை­கா­ரர்கள் என குற்றம் சுமத்­தவே இவர்கள் அனை­வரும் முயற்­சிக்­கின்­றனர்.

எனினும் தாஜுதீன் அதிக போதையின் கார­ணத்­தி­னா­லேயே இறந்தார். அவர் விபத்­துக்­குள்­ளா­கிய தினம் அவ­ரது நண்­பர்­க­ளுடன் மது அருந்­தி­யுள்ளார். அதனை அடுத்து தனது காரில் அவ­ரது இரண்டு நண்­பர்­களை ஏற்­றி­வந்து அவர்­க­ளது வீட்டில் இறக்­கி­விடும் போது நேரம் 11.55 ஆகும். அடுத்த ஐந்து நிமி­டத்தில் தான் அவ­ரது கார் விபத்­துக்­குள்­ளாகி அவர் இறந்­துள்ளார். அந்த சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­தாக இரண்­டு பேர் வாக்­கு­மூலம் கொடுத்­துள்­ளனர்.

தேர்தல் காலத்தில் இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தா­னது தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவே தவிர வேறு எதற்­கா­கவும் அல்ல. அமெ­ரிக்கா போன்ற நாடு­களே இந்த செயற்­பாட்டின் பின்­ன­ணியில் இயங்­கு­கின்­றன. அதா­வது அமெ­ரிக்­காவில் தான் ஒரு பல­மான தலை­வரை வீழ்த்தும் நோக்­கத்தில் அவர் மீதான பொய் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து மக்கள் மத்­தியில் எதிர்ப்பு அலை­யினை ஏற்­ப­டுத்­துவர். அந்த முறை­மை­யி­னையே இப்­போது இலங்­கை­யிலும் கையா­ளு­கின்­றனர் என்றார்.

செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த விமல் வீர­வன்ச,

தாஜு­தீனின் கொலை­யினை அர­சியல் வியா­பா­ர­மா­கவே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது. விபத்தை கொலை­யென சித்­த­ரித்து மஹிந்த ராஜபக் ஷவையும் அவரது குடும்பத்தையும் மக்களிடம் இருந்து பிரிக்கவே ரணில் முயற்சிக்கின்றார். தாஜுதீன் மீது அக்கறை உள்ளதெனின் நல்லாட்சியில் உண்மையை கண்டறிய வேண்டுமாயின் இந்த எட்டு மாதகாலத்தில் ஆரம்பத்திலேயே விசாரணை

களை மேற்கொண்டிருக்க முடியும். அல் லது தேர்தல் காலத்தில் இவற்றை கிளறாது தேர்தலின் பின்னர் செய்திருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் மஹிந்தவை சிறையில் அடைப்பதேயாகும். அதற்காகவே தாஜுதீனின் உடலை தோண்டி எடுத்து மக்களுக்கு படம் காட்டுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.-vk

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 6:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. வடி கட்டிய முட்டாள் டிலான், …… இவ்வளவு கேவலாக மகிந்தவுக்கு கூஜா தூக்குவாய் என்று யாரும் நினைக்கவில்லை. …….. ஏற்கனவே பொதுபலசெனவோடு முரண்பட்டபோது ……. நியாயமாக நடக்கிறாய் என்று நினைத்தோம்… இப்போது உம்போன்ற சுயநல காடை அரசியல்வாதிகளின் ஆடைகள் விலகும்போது உண்மைகள் தெரிகின்றன! …. அதிலும்… …… உனது எஜமானனை காப்பாற்றுவதற்காக அப்பாவியை, ஒரு திறமையான தேசிய விளையாட்டு வீரனை இவ்வளவு கேவலப்படுத்துவது படு அநியாயம்!

    Risniy

    ஓகஸ்ட் 12, 2015 at 1:19 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: