Lankamuslim.org

One World One Ummah

வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து பொலிஸில் புகார்

leave a comment »

Nizamகல்­முனை நகரில் அமைக்­கப்­பட்­டி­ருந்த, கேட் முத­லியார் எம்.எஸ். காரி­யப்பர் வீதிக்­கான நினை­வுக்கல் அடித்து நொறுக்­கப்­பட்­டமை குறித்து, கல்­முனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளதாக , கல்­முனை மாந­கர மேயரும், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்தார்.

சட்­ட­வி­ரோ­த­மான காரி­ய­மொன்­றினைச் செய்­வ­தற்­காக ஒன்று கூடி­யமை, அரச சொத்­துக்குச் சேதம் விளை­வித்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். இந்த முறைப்­பாடு தொடர்பில், பொலிஸ் மா அதி­ப­ருக்கு கல்­முனை பொலிஸார் அறி­வித்­துள்­ள­தா­கவும் நிஸாம் காரி­யப்பர் சுட்­டிக்­காட்­டினார். கல்­முனை நகர் பகு­தியில் வீதி­யொன்­றுக்கு, எம்.எஸ்.காரி­யப்பர் வீதி எனும் பெயர் சூட்­டப்­பட்டு, அதற்­கான நினை­வுக்கல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட வேட்­பா­ளர்கள் சிலரும் அவர்­க­ளுடன் வந்த ஆத­ர­வா­ளர்­களும், குறித்த நினை­வுக்­கல்­லினை அடித்து நொறுக்கி விட்டுச் சென்­றி­ருந்­தனர்.

குறித்த வீதிக்கு, சட்­ட­வி­ரோ­த­மான வகையில் இர­வோ­டி­ர­வாக பெயர் வைக்­கப்­பட்டு, நினை­வுக்கல் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்தே, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள், அந்த நினைவுக் கல்­லினை அடித்து நொறுக்­கி­ய­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பான புகைப்­ப­டங்­களும், வீடி­யோக்­களும் சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் ஊட­கங்­களில் பர­வி­யுள்ள நிலை­யி­லேயே, மேற்­படி குற்றச் செயலைப் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக, பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கல்­முனை மாந­கர மேயர் நிஸாம் காரி­யப்பர் இது­கு­றித்து மேலும் கூறு­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்­முனை நக­ருக்கு வருகை தர­வி­ருந்த நிலையில், பிர­த­மரின் வரு­கை­யினைத் தடுக்கும் நோக்­குடன், குறிப்­பிட்ட நபர்கள் இந்தக் குற்றச் செயலில் ஈடு­பட்­டார்­க­ளா என்­கிற கோணத்­திலும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளது.

குற்றச் செயலில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்தால், அவர்­களின் தரப்­பினர் பெரும் ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை நடத்தி, கல்­முனை நகரில் பதற்ற­மா­ன­தொரு சூழ்­நி­லை­யினை ஏற்­ப­டுத்­து­வ­த­னூ­டாக, பிரதமரின் வருகையினைத் தடுப்பதற்கான திட்டங்கள் இருந்ததும் எமக்குத் தெரியவந்தது. எவ்வாறாயினும், இக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என, தான் நம்புவதாகவும் மேயர் நிஸாம் காரியப்பர் கூறினார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 7:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: