Lankamuslim.org

One World One Ummah

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் உத்தரவு

leave a comment »

Boதேர்தல் சட்டங்களை மீறியமை, பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லா­ளரும் பொது ஜன பெர­முன கட்­சியின் களுத்­துறை மாவட்ட வேட்பாள­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்த மத்­து­கம பிரதான நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

தேர்தல் சட்­டத்தை மீறி­யமை, பொலிஸ் கட்­டளைச் சட்டம் மற்றும் தண்­டனைச் சட்டக் கோவையின் கீழ் குற்­ற­மாக கரு­தப்­படும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டமை தொடர்­பி­லேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பெரும்­பாலும் தேர்­த­லுக்குப் பின்­னரே அவரைக் கைது செய்ய வாய்ப்­புள்­ள­தா­க  பொலிஸ் தகவல் மூலம் அறிய முடிகிறது

கடந்த 8ம் திகதியன்று வெலிப்பன பொலிஸ் பகுதியில் பொலிஸ் நாகபாம்பு சின்னத்தில் போட்டிடும் பொது பல சேனாவின் அரசியல் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் , பொலிஸாரின் அனுமதியின்றி விஹாரணி  ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது .

இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டிய போது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 12:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: