Lankamuslim.org

One World One Ummah

வெற்றிபெற்றதும் ஹட்டனில் முஸ்லிம் பாடசாலை அமைப்பேன் என்கிறார் இராதா கிருஷ்ணன்

leave a comment »

வீ. இராதாகிருஷ்ணன்அட்டன் நகரில் முஸ்லிம் பாட­சா­லை­யொன்று இல்­லாமை பெரும் குறை­யாகக் காணப்படுகின்­றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த முறை முஸ்லிம் மாணவர்களுக்கு தனி­யான பாட­சாலை ஒன்றை அமைக்க நிச்­சயம் நட­வ­டிக்கை எடுப்பேன் என மலை­யக மக்கள் முன்னணி அர­சியல் துறை தலை­வரும், கல்வி இரா­ஜாங்க அமைச்சரும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் நுவ­ரெ­லியா மாவட்ட வேட்­பா­ள­ரு­மான வீ. இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

ஹட்டன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் அதன் தலைவர் ஏ.ஜே.எம். பாமிஸ் தலை­மையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு பேசும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து பேசு­கையில்,

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சிறு­பான்மை தமிழ் மக்கள் அதி­க­மாக இருக்­கின்­றார்கள். சிறு­பான்மை மக்களில் சிறு­பான்­மை­யாக முஸ்லிம் மக்கள் இருக்­கின்­றார்கள். எனவே, அவர்­களின் குறை­களைத் தீர்க்க வேண்­டி­யதும், தேவை­களை நிறை­வேற்ற வேண்­டி­யதும் எமது கட­மை­யாகும். நான் கடந்த பாராளுமன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­போது அட்­டனில் முஸ்லிம் மாண­வர்கள் கல்வி கற்­ப­தற்­காக தனி­யான பாட­சாலை ஒன்றை அமைத்துக் கொடுக்க உறு­தி­ய­ளித்­தி­ருந்தேன், எனினும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பிறகு அர­சியல் ரீதியில் நான் சில முடி­வு­களை எடுக்க வேண்­டிய நிலையில் இருந்­ததால் கொடுத்த வாக்­கு­று­தியை என்னால் நிறை­வேற்ற முடி­யாமல் போய் விட்­டது.

மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பொழுது போக்கு பிரதி அமைச்­ச­ராக நிய­மனம் பெற்று பொழுதைப் போக்க முடிந்­ததே தவிர, எமது மக்­க­ளுக்கு எதையும் செய்ய முடி­யாத நிலை­மையே காணப்­பட்­டது. ஆனால், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால உரு­வாக்­கிய அர­சாங்­கத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ராக என்னை நிய­மித்தார். எந்த வித­மான இடை­யூ­று­மின்றி எனது அமைச்சின் பணி­களை முன்­னெ­டுக்க முடிந்­தது. மலை­ய­கத்தில் விஞ்­ஞானக் கல்­வியை ஊக்­கு­விக்க 25 பாட­சா­லைகள் தரம் உயர்த்­தப்­பட்­டுள்­ளன. தனி­யான பல்­கலைக் கழகம் அமைக்க காணி பெறப்­பட்­டுள்­ளது. விரைவில் பல்­கலைக் கல்­லூரி அமை­ய­வுள்­ளது. நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது உறு­தி­யா­கி­யுள்­ளது. தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை மக்கள் பெரு­ம­ளவில் ஐ.தே.க. வுக்கு வாக்­க­ளிக்கத் தயா­ராக இருக்­கின்­றார்கள். எனவே, தேர்தல் முடிந்த பிறகு அட்டன் நகரில் முஸ்லிம் பாட­சாலை ஒன்றை அமைக்க நட­வ­டிக்கை எடுப்பேன் என்­பதை உறு­தி­யாக தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்றார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 6:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: