Lankamuslim.org

One World One Ummah

மஹிந்த பிரஜாவுரிமையையும் ,சொத்தையும் இழக்க நேரிடும்: சம்பிக்க

leave a comment »

sampikkaமஹிந்த ராஜபக் ஷ விடு­தலைப் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­ததை உறு­திப்­ப­டுத்தும் சகல ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளன. நாட்­டுக்குள் புதிய இராச்­சி­யத்தை உரு­வாக்க முயன்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் மிகக்­கு­று­கிய காலத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­ஜா­வு­ரி­மையும், அவ­ரது சொத்­து­க்களும் பறி­முதல் செய்­யப்­படும் என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரிவித்தார்.

நான் முன்­வைக்கும் கார­ணங்­களை மறுப்­ப­தானால் மஹிந்த என்­னுடன் நேரடி விவா­தத்­துக்கு வரவேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வினால் நேற்று நடத்­தப்­பட்ட விசேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

விடு­தலைப் புலிகள் இயக்­கத்­திற்கு நிதி வழங்­கி­ய­தாக நான் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மஹிந்த தரப்­பினர் கருத்து தெரி­வித்­துள்­ளனர். அதிலும் தான் நிர­ப­ராதி எனவும் நான் புலி­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­தா­கவும் மஹிந்த தரப்பினர் கூறு­கின்­றனர். ஆகவே உண்மை என்­ன­வென்­பதை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்த வேண்­டிய தேவை எனக்கு ஏற்­பட்­டுள்­ளது.

நான் குறிப்­பிட்ட இந்த சம்பவம் 2005ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் முன்னர் டிரான் அலஸின் கோரிக்­கைக்கு அமை­யவே நடந்­துள்­ளது. புலி­க­ளுடன் ஏதேனும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் வடக்கின் தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்­பதே இவர்­களின் திட்­ட­மாக இருந்­தது. அந்த காலத்தில் டிரான் அடஸ் சி.பி.இ எனும் நிறு­வனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறு­வ­னத்தின் மூலம் ஒரு சில தொலை­பேசி நிறு­வனங்­க­ளுடன் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கில் அவர்­க­ளது தொலைத்­தொ­டர்பு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்தார். ஆகவே இந்த செயற்­பா­டு­களின் மூலமே புலி­க­ளுடன் அவர் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அவரிடம் 2007.02.12 அன்று பெற்­றுக்­கொண்ட வாக்கு மூலத்தில் இவை தெளி­வாக பெறப்­பட்­டுள்­ளது. அதில் பசில் மற்றும் எமில்­காந்தன் ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­த­தா­கவும் அவர் ஒப்புக் கொண்­டுள்ளார். இது மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக இருந்த காலகட்டமாகும். டிரான் அலசின் வீட்­டுக்கு குண்டுத் தாக்­குதல் நடத்­தி­ய­வுடன் அவரும் மங்கள சமரவீரவும் இணைந்து ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பில் இவை அனைத்­தையும் தெரி­வித்­தனர். இந்த குற்றச்சாட்­டுக்களை அதா­வது விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்கு பணம் கொடுத்­த­தாக கூறப்­படும் குற்றச்­சாட்டை மஹிந்­தவோ அல்­லது பசில் ராஜபக் ஷவோ மறுக்கவில்லை.

பிர­பா­கரன் 2005 நவம்பர் மாதம் தனது மாவீரர் உரையில் மஹிந்த ராஜபக் ஷ யதார்த்த பூர்­வ­மான தலைவர் என குறி­பிட்­டுள்ளார். ஆனால் மஹிந்த எனும் நபர் எப்­போதும் இரண்டு முகங்­களை கொண்டவ­ராவார். அவர் வெளியில் சொல்­வதை அப்­ப­டியே செய்­பவர் அல்ல. மஹிந்த அப்­போ­தைய கால­கட்­டத்தில் தனது அமைச்சின் கீழ் ராடா எனும் நிறு­வ­னத்தை இயக்­கினார். ஜனா­தி­பதி செய­ல­கத்தின் கீழ் டிரான் அலஸ் தலை­மையில் ஒரு சிலரின் ஒத்­து­ழைப்­புடன் இந்த ராடா நிறு­வ­னத்தை நடத்தி வந்தனர். 2005 ஆம் ஆண்டு டிரான் அலஸ் மற்றும் சிலர் கிளி­நொச்­சியில் புலி­களின் முக்­கிய உறுப்பினரான கூவண்ணன் என்­ப­வரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இதன்­போது சுனாமி நிவாரண வேலைத்­திட்டம் ஒன்று தொடர்பில் பேசி­யுள்­ளனர்.

சுனாமி நிவா­ரண வேலைத்­திட்டம் முழு­மை­யாக புலி­களை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் என்­பது அனை­வ­ருக்கும் நன்­றா­கவே தெரியும். இந்த திட்­டத்தின் மூலம் நிதி வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை ராடா நிறு­வனம் செய்­ய­வேண்டும் என மஹிந்த ராஜபக் ஷ கட்­ட­ளை­யிட்­டுள்ளார்.

அதேபோல் இந்த வேலைத்­திட்டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆரம்ப நிதி­யா­னது எண்­ணூறு மில்­லியன் ரூபாய்­க­ளாகும். ஆனால் இந்த செயற்­பாட்டை அமைச்­ச­ர­வையில் முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தாது வீட்டத் திட்டம் என்ற பெயரில் அமைச்­ச­ரவை குறிப்­பாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இது அமைச்ச்சரவியின் அனு­ம­தியை பெற­வில்லை.

மேலும் 2006 ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இருந்து நான்கு தட­வைகள் பகுதி பகு­தி­யாக பணம் அனுப்பப்பட்டுள்­ளது. இந்த நேரத்தில் மாவி­லாறு போராட்டம் ஆரம்­பித்து விட்­டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்­திலும் புலி­க­ளுடன் மஹிந்த தொடர்பு வைத்­தி­ருந்தார். நாம் இப்­போது நடத்­தி­யி­ருக்கும் விசாரணை­களின் படி இப்­போ­தைக்கு 169 மில்­லியன் ரூபாய்கள் மட்­டுமே புலி­க­ளுக்கு பகி­ரப்­பட்­டுள்­ள­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 157ஆம் சரத்தின் படி இலங்­கைக்குள் வேறு இராச்­சி­யத்தை உரு­வாக்க நினைக்கும், அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும், அதற்­கான நிதி உத­வி­களை வழங்கும் யாராக இருந்­தாலும் அவர்கள் உயர் நீதி­மன்­றத்தின் மூலம் குற்­ற­வா­ளி­யென நிரூபிக்கப்பட்டால் ஏழு வருடங்களுக்கு பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­படும்.

தமது சொத்­துகள் அனைத்தும் பறி­முதல் செய்­யப்­படும். ஆகவே மஹிந்த ராஜபக் ஷ மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் தாம் செய்த குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் நன்­றாக தெரிந்­தி­ருந்­தனர்.

அதேபோல் வட­மா­காணத்தில் வாக்களிப்பை புறக்­க­ணிக்­கவே மஹிந்த புலி­க­ளுக்கு பணம் கொடுத்­ததார். அத்­தோடு தம்­மீது குண்­டு­தாக்­குதல் மேற்­கொள்­ளா­தி­ரு­க்கவே இரண்­டா­வது தடவை பணம் கொடுத்­துள்ளார்.

அதா­வது கோத்­தா­பய ராஜபக் ஷ மீது குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய பின்னர் புலி­க­ளுக்கு எந்­த­வொரு பணப் பரி­மாற்­றலும் நடை­பெ­ற­வில்லை. அதேபோல் இந்த சம்­ப­வத்தின் பின்னர் குறுகிய காலத்­துக்குள் மஹிந்த ராஜபக் ஷ டிரான் அலஸை கைது செய்து பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டை முன்­வைத்தார். அதேபோல் டிரான் அலஸ் புலி­க­ளுக்கு வேலை செய்­வ­தாக குற்றம் சுமத்­தினார். புலி­க­ளுக்கு பணம் வழங்க பயன்­ப­டுத்­திய நிறு­வ­னங்­களின் தலை­வர்­களும் டிரான் அலஸும் நடந்த உண்­மை­களை வாக்­கு­மூலம் மூலம் தெரி­வித்­துள்­ளனர். ஆகவே நாட்­டுக்குள் புதிய இராச்­சி­யத்தை உரு­வாக்க முயன்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் மஹிந்த ராஜபக்ஷ விசா­ர­ணைக்கு முகம்­கொ­டுக்க வேண்­டி­வரும். இந்த விசா­ர­ணையின் மூலம் மிகக்­கு­று­கிய காலத்தில் நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையை இழக்க வேண்டி வரும் அத்துடன், அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். மஹிந்தவுக்கு உதவிசெய்த பாவத்துக்காக டிரான் அலசுக்கும் இந்த நிலைமை ஏற்படும்.

இந்த நாட்டு மக்களையும் இராணுவத்தையும் விடுதலைப் புலிகளுக்கு காவு கொடுத்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் இந்த விடயங்கள் தொடர்பில் என்னுடன் விவாதத்துக்கு வரவேண்டும் என நான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சவால் விடுக்கின்றேன். அவர் புலிகளுடன் முன்னெடுத்த வியாபாரம் மற்றும் அவை தொடர்பிலான ஆதாரங்கள் இப்போது எம்மிடம் உள்ளது என்றார்.-vk

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 8:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: