Lankamuslim.org

One World One Ummah

இது சத்தியம் மக்களுக்கான சேவை இன்ஷா அல்லாஹ் இப்படிதான் அமையும் : டாக்டர் ஸாஹிர்

leave a comment »

drமூதூர் முறாசில்:பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் டாக்டர் ஸாஹிரின் சத்தயப் பிரமாண நிகழ்வு (படங்கள்) செவ்வாய்க்கிழமை இரவு மூதூரில் இடம்பெற்றது.

மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லாரி சந்திக் கருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹூர் ,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் உள்ளிட்ட முன்னணியின் முக்கியஸ்தர்களோடு நூற்றுக் கணக்கான மக்களும்  கலந்து கொண்டனர்.

வேட்பாளர் டாக்டர் ஸாஹிரினால் செய்யப்பட்ட சத்தியப் பிரமாணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சியில் 4ஆம் இலக்க வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் களமிறங்கியுள்ள கச்சு முஹம்மது ஸாஹிர்  ஆகிய நான் இன்ஷா  அல்லாஹ் எதிர் வரும் தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை பொறுப்பேற்கின்ற போது பின்வரும் உறுதி மொழிகளின் அடிப்படையில் செயற்படுவேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.

“ அல்லாஹ் பொறுப்புக்களை,கடமைகளை அதற்குத் தகுதியானவர்களிடம் அல்லது அதற்கு உரியவர்களிடம் கொடுத்து விடுமாறு கட்டளை இடுகின்றான். மக்களிடம் தீர்ப்புச் சொன்னால் நீதியாகச் சொல்லுமாறும் கட்டளையிடுகின்றான்” (சூரத்துன் நிஸா: 58) இந்த இறைவசனத்தை மனதிற் கொண்டவனாகவும் “இனில் ஹுக்கு  இல்லாலில்லாஹ்” என்னும் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானதாகும் என்ற அல்குர்ஆனின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்டவனாகவும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடக்கவிருக்கின்ற தேர்தலில் மக்கள் வழங்கும் ஆணைக்கேற்ப பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் எனக்கு வழங்கப்படும் பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றி மக்களிடையிலான சகல செயற்பாடுகளிலும் எவ்வித தன்னலமும் இன்றி நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வேன் என இறைவனின் பெயரால் இந்தச் சத்தியப் பிரமாணத்தினை
இங்கு கூடிள்ள பொதுமக்கள்,இம்முன்னணியிள் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னால் மேற்கொள்கின்றேன்.

மக்கள் சார்பாக எனக்கு வழங்கப்படும் இப்பொறுப்பினை இறைவனைச் சாட்சியாகக் கொண்டு அமானிதமாகச் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன். இந்த அமானிதத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தீர்மானத்திற்கு அமைவாகவும் மக்கள் பிரதிநிதி ஒருவருக்கான 19 அம்சங்களை உள்ளடக்கிய ஒழுக்கக் கோவைப் பிரமானத்திற்கு அமைவாகவும் இறுதிவரை முழுமையாகக் கட்டுப்பட்டு நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குக் கிடைக்கும் பரதிநிதித்துவ வாய்ப்பினை எச்சூழ்நிலையிலும் எனது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன் எனவும் உறுதியளிக்கின்றேன்.

மக்கள் வழங்கிய ஆணைமூலம் கிடைக்கப்பெற்ற இவ்வதிகாரமானது மக்களுக்கே சொந்தமானது என்ற
அமானிதத்தோடு இறுதிவரைக் கடமையாற்றுவேன் எனவும் எப்போது இப்பதவி இன்னொரு பொருத்தமானவருக்கு கையளிக்கப்படவேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைமையிலான அரசியற் கூட்டமைப்பின் தலைமைத்துவசபை தீர்மானிக்கின்றதோ அவ்வேளை எவ்வித இழுத்தடிப்புக்ளும் இன்றி இப்பதவியை இராஜினாமா செய்ய முழுமையாக உடன்படுகின்றேன் என இத்தால் உறுதியளிக்கின்றேன்.

அத்தோடு இப்பதவிக்காலத்தில் இப்பதவி வழியாக எவ்வித அதிகார துஸ்பிரயோகங்களையோ அல்லது ஊழல் மோசடிகளையோ அல்லது ஏனைய சமூக விரோத செயல்களையோ செய்யமாட்டேன்
என்றும் இப்பதவி வழிமூலமாக சகல நடவடிக்கைகளிலும் தலைமைத்துவ சபைக்கு கட்டுபட்டவனாக முழுமையான
வெளிப்படைத் தன்மையைப் பேணி நடப்பேன் எனவும் உறுதி கூறுகின்றேன்.

மேலும் இப்பதவி வழிமூலமாக கிடைக்கும் சகல கொடுப்பனவுகளையும் தலைத்துவசபையின் தீர்மானங்களுக்கு அமைவாக செலவிடுவேன் என்றும் இத்தால் உறுதி கூறுகின்றேன்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும்  பட்சத்தில் நான் இப்பதவியினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தி கொந்தராத்து வேலைகளிலோ அல்லது சபை நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஏனைய கொடுக்கல் வாங்கள்களிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலாபம் ஈட்டும் நோக்கில் ஈடுபடமாட்டேன் என்றும் மேலும் வேறு எந்த நேரடி அல்லது மறைமுக வழிமுறைகள் மூலம் தனிப்பட்ட இலாபம் சம்பாதிப்பதற்கு முனைய மாட்டேன் எனவும் இத்தால் உறுதி கூறுகின்றேன்.

மேலும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் சமூக நலன்களுக்கு முரணாக அமைகின்றபோது நான் அதற்கெதிராக குரல் கொடுப்பேன் என்றும் அவற்றைத் தடுத்துநிறுத்துவதற்கு பாடுபடுவேன் என்றும்  பாராளுமன்ற நிர்வாகம்  என்பது மக்கள் நலன்களையும் நல்லாட்சி விழுமியங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற நிர்வாகமாக நிலைநிறுத்துவதற்கு என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும்
மேற்கொள்வேன் என்றும் இத்தால் உறுதிகூறுகின்றேன்.

இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் உரிமை,கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காகவும் எப்போதும் குரல் கொடுப்பேன் என்றும் மக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் இன.மத, கலாசார, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் எனது சேவையினை வழங்குவேன் எனவும் உறுதியளிக்கின்றேன்.

எனது சம்பளம், வாகனக்கோட்டா உட்பட அனைத்தையும் எமது முன்னணியின் ஆலோசனைகளுக்கு ஏற்ப  பயன்படுத்துவேன் என உறுதியளிக்கின்றேன்.

நாட்டிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அதன் இயற்கை வளம்,எழில்,சுற்றுச்சூழல் என்பவற்றைப் பேணிப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அர்ப்பணிபுடன் செயற்படுவேன். மக்களின் அடிப்படைத் தேவையாகிய உறைவிடம், தொழில்வாய்ப்பு, கல்விääசுகாதாரம், சமூகவாழ்வு என்பவற்றை உறதிப்படுத்துவதிலும்  மேம்படுத்துவதிலும் எனது செயற்றிட்டங்களில் முன்னுரிமைப்படுத்துவேன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

சமூகத்தின் விசேட தேவையுடையவர்கள், விளிம்பு நிலையில் வசிப்பவர்கள் போன்றோரின் சேம நலனுக்காகவும் வேலைத்திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவேன். என்னால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்திப் பணிக்கும் நடவடிக்கைகளுக்கும் வெளிப்படையானதாகவும் நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் மக்களின் தேவையை மாத்திரம் முன்னிறுத்தியதாகவும் அமையும் என்பதை உறுதியளிக்கின்றேன்.

மேலே சொன்ன உறுதிமொழிகளை அல்லாஹ்வை முன்னிறுத்தியவனாக,அல்லாஹ்மீது சத்தியம் செய்தவனாக இச்சபை முன்னாள் வழங்குகின்றேன்.

dr nfgg 1 nfgg4 nfgg 2 nfgg5 nfgg 3

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 11:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: