Lankamuslim.org

One World One Ummah

சம்பிக்க அன்று வெளியீட்ட பதிப்புக்களை இப்போது கிழிக்கும் அஸ்வர் !!!

leave a comment »

aswarஅமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அடிப்படை வாதிகளாகச் சித்திரித்து எழுதிய அல்–ஜிஹாத் அல்–கைதா எனும் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்புத்தகத்தை ஜனாதிபதி தடைசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார் என செய்திகள் குறிப்பிடுகின்றன.

சம்பிக்க ரணவக்க குறித்த புத்தகத்தை  2003 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார் . அதன் பின்னர் அந்த நூலில்  மேலும் பல விபரங்கள் சேர்க்கப்பட்டு புதிய பதிப்பாக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டார், அப்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் சம்பிக்க  மற்றும் மகிந்தவுடன் நிகழ்வை பார்த்துகொண்டு மௌனமாகத்தான் இருந்தார்.

வெளியிட்டிருந்த பதிப்புக்களுக்கு   . முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட  அன்று மௌனியாக இருந்த அஸ்வர் இன்று தீடீர் என அந்த புத்தகத்தை எரித்தமை வேடிக்கையாக பார்க்கப்படுகிறது

நேற்று திங்கட்கிழமை காலை பம்பலப்பிட்டியிலுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஸ்வர்  மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார் .

அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுதிய அல்–ஜிஹாத், அல்–கைதா என்ற புத்தகத்தில் இலங்கையில் குர்ஆன் மதரசாக்களும் அரபு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் இஸ்லாமிய பீடங்களும் இஸ்லாமிய தீவிரவாதத்தை போதிப்பதாகவும் இவ் விடயங்களிலிருந்து தான் முஸ்லிம் அடிப்படைவாதம் பரப்பப்படுவதாகவும் கூறிருந்தமை குறிப்பிடத்தக்கது .

எமது முந்திய பதிவு:

அல்ஜிஹாத் அல்கைதா என்ற தனது நூலின் புதிய பதிப்பை வெளியிட்டார் சம்பிக்க

.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 11, 2015 இல் 7:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: