Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது முதல் மாற்றம் இப்போது இரண்டாவது மாற்றத்துக்காக தயாராகவேண்டும்

leave a comment »

டாக்டர் கே.எம்.ஸாஹிர்நேர்காணல்: யார் வந்தாலும் வராவிட்டாலும் எமக்கு மாற்றம் தேவை என்று கூறி ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி ஜனாதிபதி  மைத்திரிக்குப் பின்னால் அணிசேர்ந்தோம். முதலாவது மாற்றத்தை ஏற்படுத்த நாம் பங்காற்றினோம். அது நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது எமது மாவட்டத்தின் தலைமைத்துவத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வந்திருக்கின்றது. நல்லவர்களை,  வல்லவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்ற சந்தர்ப்பமே இது. இந்த வாய்ப்பை நாம் மிக நன்றாகப் பயன்படுத்த வேண்டும்,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு என்னை இணைத்துக்கொண்டிருக்கிறேன்இவ்வாறான ஒரு கட்சி எனக்கு அறிமுகமாகியிருக்காவிட்டால் நான் அரசியலுக்குள் நுழைந்திருக்க மாட்டேன்.  திருகோணமலை   மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் களமிறங்கியுள்ள சமூக  சேவையாளர் டாக்டர் கே.எம்.ஸாஹிருடனான நேர்காணல்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு என்னை இணைத்துக்கொண்டிருக்கிறேன்இவ்வாறான ஒரு கட்சி எனக்கு அறிமுகமாகியிருக்காவிட்டால் நான் அரசியலுக்குள் நுழைந்திருக்க மாட்டேன்.  திருகோணமலை   மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் களமிறங்கியுள்ள சமூக  சேவையாளர் டாக்டர் கே.எம்.ஸாஹிருடனான நேர்காணல்.

நேர்கண்டவர்: மூதூர் முறாசில்

முறாசில்: இலங்கை அரசியலில் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் நீங்கள் ஒரு மருத்துவ அதிகாரி என்ற நிலையில் இருந்து உங்களது அரசியல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது? அதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

டாக்டர் ஸாஹிர்: என்னுடைய மருத்துவத்;துறை என்னை அரசியலுக்குக் கொண்டுவந்து சேர்த்தது என்று சொல்லமுடியாதுää மாறாக சிறுபராயம் முதல் என்னுடைய  சமூக உணர்வு என்னை மருத்துவனாக வரச்செய்தது, அதே சமூக உணர்வு இன்று என்னை அரசியல்வாதி என்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது.

எனது தந்தையார் எம்.எம்.கே முஹம்மத் திருகோணமலைப் பிரதேசத்திலே நன்கு அறியப்பட்ட ஒரு கல்விமான் ஆவார்.     ஒரு ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரியாக, சமூக விழிப்புணர்வாளனாக இருந்து அவர் செய்த பங்களிப்புகள் ஏராளம். அவர் எங்களுக்கு கல்வியை, நல்லொழுக்கத்தை, சமூகஉணர்வை வளர்த்துவிடுவதில் அதீத ஆர்வம் காட்டினார். அவரிடமிருந்தே சமூகம் சார்ந்த உணர்வுகள் எமக்குள் வேர்விட்டன.

சிறு சிறு சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்தோம். குறிப்பாக எமது கிராமத்தில் காணப்பட்ட கல்வியின் மீதான ஆர்வமற்ற தன்மையைப் போக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம் அதில்குறிப்பிடத்தக்களவில் வெற்றியும் கண்டோம்.

1993களில் மூதூர்-திருகோணமலை கடல்வழிப் பாதையில் பாதாளமலை என்னும் இடத்தில் பயணிகள்  படகு விபத்துக்குள்ளான போதும்   மூதூர் பிரதேசத்தில் கடலரிப்பு அபாயம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களின் போதும் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதில் முன்னின்று உழைத்திருக்கின்றேன். அதேபோல பிரதேசத்தின் வறுமையொழிப்பு தொடர்பில், இராணூவ ஆக்கிரமிப்பு மற்றும் விடுதலைப்புலிகளின் அடாவடித்தனங்கள் நிகழ்ந்தேறிய சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் அவற்றுக்கானதீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில்  உதவியிருக்கின்றேன். திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் விவகாரகளை ஜப்பானிய தூதுவர் யசு10சு அகாஸியிடம்  முன்வைக்கும்சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

‘சமூக அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு நிலையம்’ என்கின்ற ஒரு அரச சார்பில்லா சமூக நிறுவம் ஒன்றினை ஸ்தாபித்து (COORDINATING  CENTRE FOR COMMUNITY DEVELOPMENT (3CD) )அதனூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை கடந்த 13 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றோம். துமாத்திரமன்றி மாவட்ட வைத்திய சேவையிலே என்னால் முடியுமான பங்களிப்புகளை நல்கியிருக்கின்றேன். இந்த வகையில் அரசியலையும் ஒரு சமூகச் செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

இதற்கு முன்னரும் பல கட்சிகள் அந்த வாய்ப்பை எனக்குத் தரமுன்வந்தன, ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்கு பூரண உடன்பாடு இருக்கவில்லை,அத்தகைய கட்சிகளின் கொள்கைகள், வழிமுறைகளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லைää எனவே நான் அவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்துவந்தேன்.

இப்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு என்னை இணைத்துக்கொண்டிருக்கிறேன். இது எனக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருகின்றது. ஒரு கொள்கை சார்ந்த கட்சியோடுää விழுமியங்களின் அடிப்படையில் அரசியல் செய்கின்ற கட்சியோடு என்னை இணைத்துக்கொண்டிருப்பது எனக்கு கூடுதல் பலத்தைத் தருகின்றது.

இவ்வாறான ஒரு கட்சி எனக்கு அறிமுகமாகியிருக்காவிட்டால் நான் அரசியலுக்குள் நுழைந்திருக்க மாட்டேன்.எனவே ஒரு சீரான வழிமுறைகளில் செயற்படவேண்டும் என்பதில் உறுதியாகவிருந்த எனக்கு இப்போது அரசியலுக்கான அறிமுகம் கிடைத்திருக்கின்றது. இதனூடாக மக்களுக்கு விசுவாசமான அரசியலை முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன்.

முறாசில்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்தவரான நீங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கின்றீர்கள் இது குறித்து?

டாக்டர் ஸாஹிர்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் தேர்தல்கால உடன்பாடொன்று ஏற்பட்டிருக்கின்றது. அதன் ஒரு அம்சமாகவே நான் திருகோணமலை மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியிலே போட்டியிடுகின்றேன்.

இதனை ஒரு அரசியல் உடன்பாடாகவே நாம் கருதுகின்றோம்ää இது எமது வெற்றி வாய்ப்பையும்,  முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடு. இதனை நாம் சாதகமாகவே நோக்குகின்றோம், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அமைப்புகளிடையே ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகின்றது, அதுமாத்திரமன்றி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் ஒரு பலமான வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இத்தகைய அரசியல் செயற்பாடுகள் வழிசமைத்துக்கொடுத்துள்ளது.

முறாசில்:   திருகோணமலை மாவட்டத்திலே போட்டியிடுகின்ற நீங்கள் மூதூர் பிரதேசத்தைச் சார்ந்தவர்,மூதூரிலே அரசியல் தலைமைத்துவம் இல்லாத சு10ழ்நிலை நிலவுவதாக பலரும் அபிப்பிராயப்படுகின்ற  சந்தர்ப்பத்தில் உங்களுடைய அரசியல் பிராவேசம் நிகழ்ந்திருக்கின்றது. இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

டாக்டர் ஸாஹிர்: மூதூருக்கு மாத்திரமல்ல பொதுவாக திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. உதாரணமாக புல்மோட்டை மக்களுக்கான அரசியல் தலைமைத்துவம் என்ன? முள்ளிப்பொத்தானை மக்களுக்கு, குச்சவெளி நிலாவெளிää ஜமாலியா கந்தளாய் தோப்பூர் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் இருக்கின்றதா? ஏன் கிண்ணியா மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவம் இருக்கின்றதா? அரசியல்வாதிகள்   இருக்கின்றார்கள் என்பது அரசியல் தலைமைத்துவம் இருப்பதாக கொள்ளமுடியாது.

எனவே,எம்முடைய பணி திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கான அரசியல்  தலைமைத்துவத்தை வழங்குவதாகும், ஒரு சீரான கொள்கை சார்ந்த அரசியல் முறைமையை அறிமுகம் செய்வதாகும், உணர்ச்சிபூர்வமான அரசியலை விட அறிவுபூர்வமான அரசியலை அறிமுகம் செய்யவேண்டும். மக்கள் தீர்மானம் எடுப்பதில் மிகவும் சுதந்திரமானவர்கள்ää அந்த சுதந்திரத்தை பிரதேச வாதம், குடும்பவாதம்ää கட்சி வாதங்களினூடாக அடிமைப்படுத்த முயற்சிக்கின்றார்கள். காசு கொடுத்து, தொழில் கொடுத்து விலைக்கு வாங்க முயல்கின்றார்கள், மக்களுக்கு இருக்கின்ற வாக்குரிமைச் சுதந்திரத்தை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும், வன்முறைகள் இல்லாத சட்டவிரோதமற்ற, பண்பான, அறிவுபூர்வமான அரசியல் கலாசாரத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

எனவே, எம்முடைய நோக்கம் இத்தகைய் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். இதுவே எமது மக்களுக்கான தீர்வாக அமையப்போகின்றது. இவ்வாறான பரந்த நோக்கிலே செயற்படுகின்றபோது திருகோணமலை மாவட்டத்தின் எல்லா முஸ்லிம் கிராமங்களும் நன்மையடையும், அந்த வரிசையிலே மூதூர் மக்களும், கிராமமும் முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள். மாறாக மூதூர் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்றினை நாங்கள் வரவேற்கவில்லை.

முறாசில்:  திருகோணமலை மாவட்டத்திலே அரசியல் ரீதியாக நீங்கள் எதனைச் சாதிக்க விரும்புகிவ்ன்றீர்கள்?

டாக்டர் ஸாஹிர்: இதுவரை காலமும் திருகோணமலை மாவட்டத்திலே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்ää அமைச்சர்கள்,  பிரதி அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்ää மாகாண முதலமைச்சர் என பல பதவிகளை திருமலை மாவட்ட முஸ்லிம்கள் வகித்தார்கள்.

இருந்த போதும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் தன்னிறைவான அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. அல்லது இருப்பு சார்ந்து உறுதியான நிலைகளை அடையவில்லை ஒருவிதமான மிதக்கும் சமூகமாகவே எமது சமூகம் இன்றுவரை இருக்கின்றது. இதற்கான காரணத்தைத் தேடுகின்றபோது பல்வேறு உண்மைகள் எமக்குப் புலப்படுகின்றன.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பட்டியலிட்டால் காணிப்பிரச்சினை முதன்மையான பிரச்சினையாக இருக்கின்றது. புல்மோட்டை தொடங்கி ஈச்சிலம்பற்று வரை கிண்ணியா தொடங்கி கந்தளாய் வரை காணிப்பிரச்சினை ஒரு பூதாகரமான பிரச்சினையாக மாறியிருக்கின்றது. அதேபோல சீரற்ற வாழ்வாதாரம் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கின்றது, எம்மில் பெரும்பாலனவர்கள் விவசாயிகள்,  மீன்பிடித்தொழிலாளிகள் இவர்களுடைய வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதில் பாரிய சவால்கள் இருக்கின்றன. இதன் காரணமாக வறுமை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது, வெளிநாடுகளுக்குச் செல்லும் தாய்மார்களின் பெண்களின் அளவு அதிகரித்திருக்கின்றது. இதற்கு உடனடித் தீர்வு அவசியப்படுகின்றது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்   உள்ளூர் வீதிகள், நீர்விநியோகம்ää வடிகாலமைப்பு,போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவும் வேண்டியிருக்கின்றது. கல்வி, சுகாதாரம் என்பன முக்கிய பிரச்சினைகளாக மாறியிருக்கின்றது. இவ்வாறு ஏராளமான விடயங்கள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இவற்றை தீர்ப்பதற்கு ஒரு முறையான திட்டமிடல் அவசியபப்டுகின்றது.அதற்கான முயற்சிகளிலே நாம் களமிறங்குவோம். இதுவே எமது அரசியல் பணியாக இருக்கும். இதனை உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, சமூகநீதி என்கின்ற அடிப்படையில் நாம் முன்னெடுப்போம். தேவையுள்ளவனுக்கே அபிவிருத்தி,தகைமையுள்ளவனுக்கே தொழில்வாய்ப்பு என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் அமையும்.

முறாசில்: தோப்பூர் பிரதேசத்திற்கு தனியான பிரதேச செயலகம் அமையவேண்டும் என்ற கோரிக்க முன்வைக்கப்படுகின்றதே இதிலே உங்களது நிலைப்பாடு என்ன?

டாக்டர் ஸாஹிர்: இது சம்பந்தமாக ஏற்கெனவே ஒரு சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, தனியான பிரதேச செயலகம் கொண்டிருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் பெற்றுக்கொடுக்க நான் இன்ஷா அல்லாஹ் முயற்சிப்பேன்.

முறாசில்:   திருமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழிவாய்ப்பினைப் பெற்றுத்தரும் திட்டங்கள் ஏதேனும் உங்களிடம் இருக்கின்றதா?

டாக்டர் ஸாஹிர்: நிச்சயமாக இதுவிடயத்தில் நாம் கவனம் செலுத்துவோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துகின்ற விடயத்திலே கவனம் செலுத்திவருகின்றார், அதிலே எமது மாவட்ட மக்களும் உள்வாங்கப்படுவார்கள். அரச துறையிலும் தனியார் துறையிலும் இத்தகைய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதிலே எமது இளைஞர் யுவதிகளுக்கு மிகப்பொருத்தமான சந்தர்ப்பமும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும.;

முறாசில்:    நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நோக்கபப்டுகின்றது.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

டாக்டர் ஸாஹிர்: 2010 முதல் 2014ன் இறுதிவரையான காலப்பகுதி இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல்வேறு  இன்னல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியிருந்தோம். ஹலால் விவகாரம் ஹிஜாப் விவகாரம், என்று தொடங்கிய அச்சுறுத்தல்கள்,  கிறீஸ் பூதங்களாக வெளிவந்தன. தம்புள்ளை பள்ளிவாசல் தொடங்கி கரிமலையூற்றுப் பள்ளிவாசல் வரை நீண்டு   வியாபித்தன. பொதுபலசேனா ராவண பலய உள்ளிட்ட  இனவாத இயக்கங்கள் உருவெடுத்தன. இறுதியாக அளுத்கமையில் முஸ்லிம்களின் உயிர்களையும் உடைமைகளையும் துவசம் செய்த  இனவாதிகளின்  அரகேற்றமும் இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லோரும் அங்கலாய்த்தோம். எமக்காகப் பேசுகின்றவர்கள் எவருமே இல்லையா என்று தவியாய்த் தவித்தோம். நாம் வாக்களித்து தெரிவுசெய்து அனுப்பிய எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே மௌனிகளாக இருக்கக் கண்டோம். எமக்கென இருந்த தலைமைத்துவங்கள் பேசாமல் இருக்கக் கண்டோம். எமது பிரதிநிதிகளின் மீது  நாமே விரக்தியுற்று இவர்களால் எமது சமுதாயம் விடிவுகாணாது என்று தீர்மானித்தோம்.

யார் வந்தாலும் வராவிட்டாலும் எமக்கு மாற்றம் தேவை என்று கூறி ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி ஜனாதிபதி  மைத்திரிக்குப் பின்னால் அணிசேர்ந்தோம். முதலாவது மாற்றத்தை ஏற்படுத்த நாம் பங்காற்றினோம். அது நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது எமது மாவட்டத்தின் தலைமைத்துவத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வந்திருக்கின்றது. நல்லவர்களை,  வல்லவர்களை எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்ற சந்தர்ப்பமே இது. இந்த வாய்ப்பை நாம் மிக நன்றாகப் பயன்படுத்த வேண்டும்,  இந்த வாய்ப்பினை நாம் சரியாக சிந்தித்து முறையாகப் பயன்படுத்தத் தவறுவோமாக இருந்தால், அடுத்துவரும் 6வருடங்களுக்கு மீண்டுமொருமுறை எமது தலைவிதியை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியேதும் இருக்காது. நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் எனக்கு  ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களின் குரலாக நல்லாட்சியின் குரலாக  நான் பாராளுமன்றில் இன்ஷா அல்லாஹ் செயற்படுவேன்.மக்களுக்கு விசுவாசமானவனாக நான் இருப்பேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 10, 2015 இல் 5:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: