Lankamuslim.org

One World One Ummah

அளுத்கம மற்றும் தர்கா நகர் பொது பல சேனாவின் கூட்டத்தில்

leave a comment »

BOOOபொதுபலசேனா அமைப்பின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறுகிறது , தர்கா டவுனில் இடம்பெற்ற கூட்டத்தில் சில பத்து பேர்களே கலந்து கொண்டுள்ளனர்

குறித்த  பிரதேசத்தில் பலத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் அளுத்கம பஸ் நிலையத்திற்கு முன்பாகவும், தர்கா நகர் – அதிகாரிகொட சந்தி ஆகியவற்றிலேயே இந்தக் கூட்டங்கள் நடைபெறுகின்றன

நாகபாம்பு சின்னத்தில் பொது ஜன பெரமுனவில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாகவே இந்தக் கூட்டம் இடம்பெறுகிறது

அதேவேளை நேற்று இரவு 8:30 மணியளவில் பேருவளை காங்கானெகட பகுதியில் ஞானசார தேரர் கலந்துகொண்ட கூட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டமை குறிப்பிடத் தக்கது

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வை ஞானசார தேரரை முஸ்லிம்கள் சுற்றிவளைப்பு செய்தாக சில சிங்கள இனையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்தியில் அளுத்கம பிரதேசத்தில் நேற்று ஞானசார தேரரை சுமார் ஐநூறு முஸ்லிம்கள் சுற்றிவளைப்பு செய்தாகவும் அவர்களால் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் இருந்தாகவும் பொலிஸ்  மற்றும் விஷேட அதிரடிப்படை தலையிட்டு ஞான சார தேரரை பாதுகாப்பாக மீட்டதாக சில சிங்கள இனையதளங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

கடந்த வருடம் ஜுன் 15ஆம் திகதி அளுத்கம பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் கூட்டத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்ட உரையினை அடுத்தே தர்கா நகர் பிரதேசத்தில் பாரிய கலவரமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2015 இல் 4:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: