Lankamuslim.org

One World One Ummah

வீதியின் நினைவுப் படிகம் தரைமட்டம்: த.தே.கூ.வேட்பாளர்கள் அட்டகாசம்

with one comment

1அம்பாறை , கல்முனை நகரிலுள்ள பொதுச்சந்தை வீதிக்கு எம்.எஸ்.காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் அவ்வீதியின் நினைவுப்படிகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ்.காரியப்பர் வீதி என பெயரிட்டு நினைவுப்படிகமும் நிர்மானிக்கப்பட்டது.

இந்த நினைவுப்படிகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கவிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாநகரசபை கட்டளைச் சட்டத்தை மீறி இரவோடு இரவாக குறித்த வீதிக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, மாநகர சபை மேயருக்கு எதிராக கல்முனை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்பாட்டத்தின் பின்னரே குறித்த வீதியின் நினைவுப்படிகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.-TM

1 2 3 4

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2015 இல் 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. உலகில் தரம்கெட்ட அரசியல்வாதிகளில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலிடம் வகிக்கக்கூடியவர்கள். “இவர்கள் ஒரே நேரத்தில் எதிர்மாறாக நடக்கவும், பேசவும் தேர்ச்சி பெற்றவர்கள். சொல்வதொன்று, செய்வதொன்றே இவர்களது கலை”. தலைவர் “உதட்டளவில்” முஸ்லிம், தமிழ் ஒற்றுமை பற்றி பேசுவதும், அதேநேரம் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் முஸ்லிம், தமிழ் ஒற்றுமையை சீர்குலைக்கும் இனவெறி ஆட்டங்களில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. வடக்கிலும், கிழக்கில் கல்முனை, மற்றும் மட்டக்களப்பிலும் இவர்களது துவேசம் மேலோங்கியுள்ளது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அடிக்கடி வெளிப்படுகிறது.

  அவ்வாறே த.தே. கூ(த்த)மைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடைக்கிடை “தமிழ் பேசும்” என்று (நயவஞ்சகத்தனமாக)குறிப்பிட்டிருந்தாலும், முக்கியமான இடங்களில் எல்லாம் தமிழர் விடுதலை, தமிழர் ஆட்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்களது இரட்டை முகத்தை மீண்டும் மீண்டும் காட்டுகிறது.

  இந்நிலையில்தான், அவர்களது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் திட்டத்துக்கு “முஸ்லிம் காங்கிரஸ்” ஆதவளிப்பதாக அண்மையில் அதன் செயலாளர், திருவாளர் ஹசன் அலி சொல்லியிருந்தார். அவர் எண்ணிக்கொண்டாரா, கிழக்கு என்பது அவர் உம்மாவீட்டு சொத்து என்று, அல்லது ஹக்கீமின் கொன்றக்கில் கிடைத்ததென்று?..

  உண்மையான சமூகபற்றுமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வடக்கும், கிழக்கும் இணைப்பதை எதிர்த்து உயிரைக்கொடுத்தாவது போராடவேண்டும். இதுவே களநிலவரத்தின்படி தேவையான நடவடிக்கையாகும். தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளை நம்புவதைவிட நமது கழுத்தை நாமே அறுப்பதுமேல்!

  இதுவே இற்றைவரையான யதார்த்தங்களின் அடிப்படையிலான உண்மையிலும் உண்மை!

  Risniy

  ஓகஸ்ட் 11, 2015 at 10:45 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: