Lankamuslim.org

One World One Ummah

நல்லாட்சியில் இனவாதத்துக்கு இடமில்லை: பேருவளையில் பிரதமர் ரணில்

leave a comment »

ranilஇந்நாட்டில் வாழும் சகல இனமக்களையும் ஒன்றிணைத்தே நாம் ஆட்சி செய்கின்றோம். நல்லாட்சியில் இனவாதத்துக்கு இடமில்லை. சகல இன மக்களையும் அரவணைத்து புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவதே எமது முக்கிய இலக்காகும். எனவே சக்தி மிக்க அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து நாட்டைத் துரிதமாக முன்னேற்ற ஐ.தே.கட்சிக்கு வாக்களியுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பேருவளை பீச் திடலில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிராசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

களுத்தறை மாவட்டத்தில் ஐ.தே.க.முன்னணி சார்பில் போட்டியிடும் ராஜித்த சேனாரத்ன, எம்.எஸ்.எம்.அஸ்லம், இப்திகார் ஜெமீல், ஜயந்த் அபே குணவர்த்தன ஆகியோரை ஆதரித்து இக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மேலும் கூறியதாவது நாட்டையும் மக்களையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் மாபெரும் வேலைத்திட்டமொன்றை ஆகஸ்ட் 18 ஆம் திகதி அமையவுள்ள -ஐ.தே.கட்சியின் ஆட்சியில் ஏற்படுத்துவோம். நாட்டை கட்டியெழுப்ப 60 மாதங்களே தேவை அதற்காக என்னிடம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

அளுத்கமை பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் சிறுபான்மை இன மக்களுக்கு பெரும் பீதியும் அச்சமும் இருந்தது. தமக்கு எதிர்காலம் இல்லை என்றும் இந்த நாட்டில் தொடர்ந்து வாழலாமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறுபான்மை இன மக்கள் மத்தியில் இருந்த அந்த சந்தோகம் நீங்கியுள்ளது.

நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாகவே நாடு முன்னேற்றம் அடையும். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ கடைசி நேரத்தில் இனவாதத்தை கக்கிவிடக் கூடிய சூழ்நி நிலை உள்ளதால் இனவாதத்தை தோற்கடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்நாட்டில் பிறந்து வளர்ந்த சிங்கள தமிழ் முஸ்லிம் பறங்கியர் இலங்கையர் என்ற வகையில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. நாட்டின் இனங்களுக்கிடையே -ஐக்கியம் மூலமே நாடு முன்னேறும். நல்லாட்சியின் கீழ் இன ஒற்றுமை சக்தி பெற்றுள்ளது. களுத்தறை அவிசாவளை பிரதேசங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தி வலயம் ஆரம்பிக்கப்படுவதுடன். பேருவளை அளுத்கமை பகுதிகளை உள்ளடக்கிய பெந்தொட்ட முதல் மிரிஸ்ஸ வரையான பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி  செய்யப்படும்.

களுத்தறை மாவட்டத்தில் சிறிய அளவிலான பொருளாதார வலயங்கள் 4 அல்லது 5 அமைக்கப்படும். இதன் மூலம் இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும். இதற்கான செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சக்தி மிக்க அரசாங்கமென்றை ஏற்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய அளவில் முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்வார்கள். எனவே நாட்டினதும் எமது எதிர்கால சந்ததியினரினதும் நன்மை கருதி சக்தி மிக்க ஐ.தே.கட்சி அரசாங்கத்தை உருவாக்குங்கள்.

மேல் மாகாணத்தை நாம் நகரமயமாக்கி புரட்சிகரமாக முன்னேறுவோம். அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் வீடமைப்புத் திட்டங்களை அமைத்தல் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பேருவளையில் மட்டுமல்லாது முழு களுத்துறை மாவட்டத்தையும் -ஐ.தே.கட்சிக்கு பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் நாட்டில் பலமான அரசொன்றை ஏற்படுத்த வாய்ப்புக் கிட்டும். உங்களது வேட்பாளர் இப்திகார் ஜெமீலுக்கும் விருப்பு வாக்கொன்றை கொடுங்கள். ஜயந்த அபேகுணவர்த்தன ராஜித சேனாரத்ன ஆகியோருக்கும் விருப்பு வாக்களியுங்கள். ஏனைய விருப்பமானவர்களுக்கும் வாக்களியுங்கள். ஐ.தே.கட்சி பட்டியலில் திறமை மிக்க குழுவொன்று இம் முறை போட்டியிடுகிறது.

ஸ்ரீ.ல.சு.கட்சி இன்று சின்னாபின்னமடைந்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷ குழு அடுத்த குழு என இரு குழுக்கள் இயங்குகின்றன. பிரசாரக் கூட்ட மேடைகளில் கூக்குரல் சத்தம் கேட்கிறது. வேட்பாளர்கள் மஹிந்த பங்கு பற்றும் கூட்டங்களை பகிஷ்கரிக்கும் நிலையும்  ஸ்ரீ.ல.சு.கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களித்தால் நாட்டின் எதிர் காலம் என்னவாகும் ஆகஸ்ட் 17 உங்களினதும் எதிர் கால சந்ததியினரினதும் முன்னேற்றம் கருதியே வாக்களியுங்கள். பொருளாதாரத் துறையை முன்னேற்றி தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பது கல்வி சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்தல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் முதலீட்டு வலயங்களை அமைத்தல் இளைஞர் யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் எமது நோக்கமாகும்.

மஹிந்தவிடம் எந்த திட்டங்களும் இல்லை. இந்த நிலையில் நாட்டின் நிர்வாகத்தை எப்படி அவரிடம் ஒப்படைக்க முடியும் ஜனவரி 8ஆம் திகதி அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் கூறினார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 6, 2015 இல் 7:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: