Lankamuslim.org

One World One Ummah

தொலைக்காட்சி ஒன்று எமக்கெதிராக கடும் பிரச்சாரங்களை செய்து வருகிறது : றிசாத்

leave a comment »

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்: குடும்பச் சண்டையினை வைத்து தழிருக்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று எமக்கெதிராக கடும் பிரச்சாரங்களை செய்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் என்னையும்,எமது அரசியல் பயணத்தையும் அழிக்கும் கொன்தாராத்து காரர் ஒருவர் என்னிடம் 4 கோடி ரூபாய்கள் பணம் கேட்டது தொடர்பில் இரகசிய பொலீஸார் மற்றும் தேர்தல்  ஆணையாளரிடத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாகவும் கூறினார்.

இன்று கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வில்பத்துக்குள் மக்கள் குடியேற்றம் செய்ததாக மேல் நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த வழககு தொடர்பில் செப்டம்பர் 17 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதி மன்றம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

இன்று இடம் றெ்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –

நான் வில்பத்து காட்டை அழித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.நாம் நீதிமன்றத்தின் நியாயத்தை கோறுவோம்.

1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.அவ்வாறு அம்மகள் வெளியேற்றப்பட்டார்கள் என்றால் அவர்கள் வாழ்ந்த பூமி இருந்திருக்க வேண்டும்.அது போல் பிரதேச சபை பிரதி நிதித்துவம் அந்த மண்ணில் இருந்திருக்கின்றது.வாக்காளர்கள் பதிவும் உள்ளது.ஆனால் சில இனவாத சக்திகள் இங்குள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி என்கின்ற கிராமங்கள் இல்லையென்றே சொல்லுகின்றனர்.

இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் 22 வருடங்கள் கழிந்த பின்னர் மீண்டும் மீள்குடியேற்றத்திற்கு சென்ற போது அக்கிராமங்கள் காடுகளாக காட்சியளித்தன.அவறந்றை துப்பரவு செய்த போது வில்பத்து காடுகளை அழெிப்பதாக குற்றம் சுமத்திவருகின்றனர்.

இவற்றை விளக்கப்படுதிய போதும்,அதறகு எதிராக சிங்கள கடும் போக்கு சக்திகள் என்னை இனவாதியாக காண்பிக்கின்றனர்.அத்தோடு மட்டுமல்லாமல் ஒரு தமிழருக்கு சொந்தமான ஊடகமொன்றினை வைத்துக் கொண்டு பெரும் அநியாயங்களை செய்கின்றனர்.குடும்பச் சண்டை,கோழிச்சண்டைகளுக்கெல்லாம் இந்த தொலைக்காட்சி முக்கியத்துவமளித்து செயற்படுவதை காணமுடிகின்றது.தாக்கப்படாதவர்களை பலவந்தமாக அழைதை்துச் சென்று அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் தாக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் எமக்கு எதிரான செயற்பாடுகள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இந்த சவால்களை  சந்தித்து எமது மக்களின் விமோசனத்திற்காக நாம் பாடுபடுவோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

மறிச்சுக்கட்டி கிராமத்தில் 1980 ஆம் ஆண்டு ஆர் பிரேமதாச வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்து.அதே போல் 1906 ஆம் ஆண்டு கொண்ட காணி உறுதிகள் இந்த மக்களிடம் இருக்கின்றது.

எமக்கு ஒரு சந்தர்ப்பம் உண்மையினை வெளிப்படுத்த கிடைக்காத என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த நீதி மன்ற அழைப்பு எமக்கு வந்துள்ளது.அதற்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம்.எமது தரப்பு நியாயங்களையும் நாங்கள் முன் வைக்க ஆயத்தமாக இருக்கின்றோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

கடந்த மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட மன்னாரை சேர்ந்த கொய்தர் கான் என்பவர் எனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டினை செய்திருந்தார்.இதனை துரிதமாக விசாரிக்குமாறு நான் ஆணைக்குழுவிடம் கோறியிருந்தேன்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 5, 2015 இல் 12:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: