Lankamuslim.org

One World One Ummah

நாகபாம்புக்கு தேர்தல் ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையா ??

leave a comment »

thesapriyaதேர்தல் பிரச்சாரத்தின் பொது சில அர­சியல் கட்­சிகள் மதத் தையும், இனங்­க­ளையும் அவமதிக்கும் வகையில்  பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தனக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்துள்ள  தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்பிரிய  இதன்­பின்பு அவ்­வா­றான முறைப்­பா­டுகள் கிடைத்தால் சம்­பந்­தப்­பட்ட கட்­சி­யையும்,அதன் வேட்பாளர்களையும் தடை­செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பதாகக் எச்சரிக்கை விதுள்ளதாக அறிய முடிகிறது

அர­சியல் கட்­சி­களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணை­யா­ள­ருக்­கு­மி­டையில் கலந்துரையா­ட­லொன்று நேற்று  இடம்­பெற்­றபோதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்

எந்­த­வொரு அர­சியல் கட்­சியோ, அபேட்­ச­கரோ எந்­த­ மதத்­தையோ இனத்தையோ அவ­ம­தித்து தேர்தல் பிர­சாரம் செய்­வது கண்­டிக்­கத்­தக்­க­தாகும் எனவும் .வேட்பாளர்கள்  தமிழர், முஸ்லிம், சிங்­க­ளவர் என வேறு­ப­டுத்த முடி­யாது.  தேர்தல் மீறினால் அதற்­கு­ரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாகபாம்பை அதன் சின்னமாக கொண்ட  பொது­ஜன பெர­முன எனற பொதுபல­சே­னாவின் அர­சியல் கட்சியின் அனுராதபுர வேட்பாளர்  ஒருவர் அல்­குர்­ஆ­னையும், முஸ்லிம்களையும் அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்கள் தெரி­வித்து வரு­வ­தாக ஆர்.ஆர்.டி.அமைப்பின் உறுப்­பி­னர்கள் தேர்தல் ஆணையாள­ரி­டமும், பொலிஸ்மா அதி­ப­ரி­டமும் முறைப்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்பி­டத்­தக்­கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 4, 2015 இல் 9:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: