Lankamuslim.org

One World One Ummah

யுத்தத்தினால் நாடு கண்ட பின்னடைவை 5 வருடங்களில் சீர் செய்ய முடியும் : பிரதமர்

leave a comment »

higஇந்து சமுத்திரத்தின் பிரதான வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாகவும்   60 மாதங்களில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு அம்சமாக நேற்று மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த பிரதமர் ரணில் விகிரமசிங்க யுத்தத்தினால் நாடு கண்ட பின்னடைவை 5 வருடங்களில் சீர் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

புதிய நகரங்கள், வர்த்தக வலயங்கள் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான செயற்திட்டங்கள் என 60 மாதங்களில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்திட்டம் தொடரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.கடவத்தையில் நேற்று நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

கடவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம். மன்னர்கள் காலத்திலும் ஆங்கிலேயரின் ஆட்சியிலும் இப்பிரதேசம் வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு பிரசித்தமாக விளங்கியுள்ளது.

கண்டிக்கு அதிவேக பாதை அவசியம் என்ற தீர்மானம் 2001 இல் மேற்கொள்ளப் பட்டது. நாம் அதற்காக இரண்டு மாற்றுத்திட்டங்களை வைத்திருந்தோம் எனினும் அதற்கிடையில் அரசாங்கம் மாற்றமடைந்து விட்டது.

அதன் பின் வடக்கிற்கான அதிவேக பாதை சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டது. இதன் போது வடக்கு மக்கள் தமக்கு அதிவேக நெடுஞ்சாலையை விட முக்கிய மான வேறு அபிவிருத்திகளின் தேவை உள்ளதாகத் தெரிவித்தனர். தமக்கு சிறந்த பஸ் போக்குவரத்து சேவை, ரயில் சேவையைப் பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் விமான சேவை வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் கலந்துரையாடி இந்த மத்திய அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கு முடிவு செய்தோம்.

மத்திய அதிவேக பாதை கண்டிக்குச் செல்கிறது. கண்டியிலிருந்து தம்புள்ளைக்குச் சென்று பின்னர் அநுராதபுரம், திருகோண மலைக்கும் மன்னாருக்கும், யாழ்ப்பாணத் திற்கும் இந்தப் பாதை நீளும். அதனை அடிப்படையாகக் கொண்டே இன்று இந்தப் பாதை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப் படுகின்றன.

இப்பாதை நிர்மாணம் தொடர்பில் ஏற்கனவே சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எனினும் நாம் புதிதாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம் இதனால் மிகக் குறைந்த செலவில் இதனை மேற்கொள்ள எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இப்போது பொறுப்பேற் றுள்ள புதிய சீன நிறுவனம் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை விட 50 வீதம் குறைவான நிதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதில் பெருமளவு நிதியை எம்மால் மீதப்படுத்த முடிந்துள்ளது.

இத்திட்டம் 60 மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களின் ஒரு அம்சமாகும். கடவத்தை யிலிருந்து இதை ஆரம்பிப்பதில் எனக்கும் தொடர்பு உள்ளது.

1977 இல் நான் பியகம தேர்தல் தொகுதியில் தேர்தலில் நின்று பாராளு மன்றம் சென்றேன். அப்போது இப் பிரதேசங்கள் முன்னேறியிருக்கவில்லை. கம்பஹா மாவட்டமும் கூட அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்பட்டது. நாம் இந்த நிலையை மாற்ற பல செயற்திட்டங்களை மேற்கொண்டோம். இதன் போது கிரிபத்கொட, கடவத்தை பகுதிகள் சிறு கடைத்தொகுதிகளாக உருவெடுத்தன.

அதனைத் தொடர்ந்து நாம் நெடுஞ் சாலைகளை நிர்மாணித்தோம். பாராளு மன்றத்திற்கும் பெலும் மஹரவுக்குமான நெடுஞ்சாலையை நிர்மாணித்தோம். கடுவெல பாலம் பியகம சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பல கைத்தொழில் பேட்டைகளையும் எம்மால் உருவாக்க முடிந்தது. இதனால் இப்பிரதேசங்கள் பெரும் முன்னேற்றம் கண்டன.

கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலையே எமது பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது. அது இப்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் கணேமுல்லையில் மேம்பாலம் ஒன்றையும் நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இதனூடாக மேல் மாகாணத்தின் நகர அபிவிருத்தியின் முக்கிய கேந்திரமாக கிரிபத்கொடை, கடவத்தை பகுதிகள் விளங்குகின்றன. அதேபோன்று இளைஞர்க ளுக்குத் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமும் இதனோடு ஆரம்பமாவதையும் குறிப்பிட முடியும். இந்த நெடுஞ்சாலையோடு மேலும் மூன்று கட்டப் பணிகள் இடம்பெறும் அப்போது இப்பகுதியில் பாரிய நகரங்கள் உருவாகும்.

இப்பகுதிக்கு மேலும் சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக தொழில்நுட்பவியல் கல்லூரி ஒன்றை இங்கு அமைத்துக் கொடுக்கவும் தீர்மானித்துள்ளோம். அதேபோன்று பியகம வர்த்தக வலயத்தின் மூன்றாம் கட்டமும் தொம்பேயில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நடுத்தர மக்களுக்கு ஐந்து இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இங்கும் வீடுகள் மற்றும் பாடசாலைகளும் உருவாக்கப்படவுள்ளன.

சீன அரசாங்கமே மேற்படி மத்திய அதிவேக பாதைக்கு நிதியுதவி வழங்கு கின்றது. சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் 1948 இலிருந்து தொடர்கின்றன. மாவோ சேதுங் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற தலைவர்களால் கட்டியெழுப் பப்பட்ட உறவு இது.

ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதோடு சீனாவிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. எனினும் சீனாவுக்கு இதன் மூலம் பெரும் அதிஷ்டம் ஏற்பட்டது. சீனாவில் யுத்தம் இருக்கவில்லை. எமக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

சீனா போன்று இந்து சமுத்திரத்தின் பிரதான வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை கட்டியெழுப்பப்படும். சீனா எமக்குப் பல செயற்திட்டங்களில் உதவி வருகிறது. அம்பாந்தோட்டையிலும் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு சீனா எமக்கு உதவுவதையிட்டு நாம் இலங்கையின் சார்பில் சீனாவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 4, 2015 இல் 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: