Lankamuslim.org

One World One Ummah

நான் தவறிழைக்கவில்லை. சிலர் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டதாக பூசி மெழுகிப்பார்க்கின்றார் மஹிந்த

leave a comment »

mahiஇன்னொரு தடவை இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது. இனவாதச் சக்திகளுடன் துணைபோக முடியாது எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 17க்குப் பிறகு இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் இனவாதத்துக்கு இடமளிக்காத கட்சியாக வளர்ந்தோங்கியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் கட்சியில் சிலர் இனவாத ரீதியில் செயற்பட முனைந்ததன் காரணமாக அவர்கள் முகவரியற்றுப்போன வரலாறு பதிவாகியே உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கிடையே நாட்டில் மோசமான இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சில தீய சக்திகளே இவ்வாறு இனவாதத்தை தூண்டி தமக்குச் சாதகமான அரசியலை நடத்த முற்பட்டு வருகின்றன.

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதகமாக அமைந்த மறுதினமே அவர் மெதமுலனவில் மக்கள் முன்னிலையில் பேசுகின்ற போது தனக்கு பெளத்த மக்கள் 58 இலட்சம் பேர் வாக்களித்ததாகவும் தமிழ், முஸ்லிம் மக்களே தன்னைத் தோற்கடித்ததாகவும் தெரிவித்தார். இது மஹிந்தவின் முற்று முழுதான இனவாத முகத்தை வெளிப்படையாக காட்டுவதாகவே அமைந்தது.

மஹிந்தவுடன் அணி சேர்ந்திருக்கும் குறிப்பிடத்தக்கதான சிலர். இவர்கள் எப்போதும் சுயநல அரசியல் போக்கு கொண்டோர்கள் என்பதுதான் உண்மை.

மஹிந்த தவறிழைக்கவில்லை. அவரோடிருந்த சிலர்தான் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டதாக பூசி மெழுகிப்பார்க்கின்றனர். இந்த நாட்டில் பொதுபல சேனா போன்ற இனவாதச் சக்திகளை வளர விட்டதே மஹிந்த ஆட்சியில் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தென்னிலங்கை காலி நகரில் பொதுபல சேனா அலுவலகத்தை அன்று திறந்து வைத்தவரே அன்றைய பாதுகாப்புச் செயலாளர்தானே. இப்போது அவரே குருணாகல் கூட்டத்தில் எமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு தவறிழைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு இனி ஒரு போதும் அவ்வாறு நடக்காது என்று தமையனுக்கு வாக்குப் பிச்சை கேட்டிருக்கின்றார்.

உண்மையான பெளத்த மக்கள் ஒருபோதும் இனவாதப் பேக்கில் செயற்படமாட்டார்கள். பெளத்த தர்மம் இனவாதத்தைப் போதிக்கவே இல்லை. புத்தர் பெருமான் எப்போதும் அனைவரையும் நேசித்தவர். அவர் மனிதகுல மேன்மைக்காகவே பேசினார். இன, மத, குல ரீதியில் அவரது போதனை அமையவில்லை. ஆனால் இன்றைய சில பெளத்த இனவாதச் சக்திகள் புத்தரின் போதனைக்கு முற்றிலும் மாற்றமாகவே செயற்படுகின்றனர்.

எமது நாட்டின் சனத்தொகையில் 74 சதவீதத்தினர் சிங்கள பெளத்தர்களாவர். இதனைச் சாதகமாகிப் பயன்படுத்தி இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அதில் அரசியல் இலாபம் தேடும் முயற்யில் மீண்டுமொரு தடவை மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார். சிங்களவர்கள் மத்தியில் ஒருவிதமாகவும், முஸ்லிம்கள், தமிழர்கள் மத்தியில் அவர்களுக்காக முதலைக் கண்ணீரும் வடிக்கின்றார்.

இப்போது ஐக்கிய தேசியக் கட்சி மீதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சேறுபூசும் அரசியலை மஹிந்த அணியினர் மேற்கொண்டுள்ளனர். அளுத்கம, தர்ஹா நகர் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்களும், முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்ட போது அப்படி எதுவுமே நடக்கவில்லை.

முஸ்லிம்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்று பொய்யைக் கூறி மஹிந்திவின் விசுவாசிகள் சிலரே முஸ்லிம்களிடம் வாக்குப்பிச்சை கேட்க முன்வந்துள்ளனர். இவர்களால் 500 வாக்குகளைத் தானும் முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. முடிந்தால் வடக்கு, கிழக்கில் பிரசார மேடையில் தோற்றி இவர்கள் முஸ்லிம்களிடம் வாக்குக்கேட்க முன்வரட்டும். அப்போது தெரிந்து கொள்ள முடியும் முஸ்லிம் மக்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை.

இந்த நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் போல் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.

தேசியப் பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கெள்ளக்கூடிய தீர்வைக் காண்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருபவர்.

எப்போதோ பாலஸ்தீனத்துக்கு குரல் கொடுத்ததால் மஹிந்தர் முஸ்லிம்களின் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது. முஸ்லிம்கள் தமது உண்மையான நண்பர், தலைவர் யார் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டனர். ஜனவரி 8ல் அளித்த தீர்ப்பையே ஆகஸ்ட் 17லிலும் நாட்டு மக்கள் அளிக்க தயாராகி வருகின்றனர்.

இனவாத பிரசாரம் இனிமேலும் இந்த நாட்டில் எடுபடப் போவதில்லை. இனவாதத்துக்கான முற்றுப்புள்ளி ஆகஸ்ட் 17இல் வைக்கப்படும்.

இனக்கலவரங்களுக்கு தூபமிடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் தேர்தல் மேடைகளில் பகிரங்கமாக அறிவித்து வருகின்றார். இனம், மத ரீதியில் மக்களுக்கு அபகீ ர்த்தி ஏற்படக்கூடிய விதத்தில் பேசுபவர்கள் மீது தமது அரசு கடுமையாக நடந்து கொள்ளும் என ரணில் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 17 இல் நல்லாட்சிக்கான தீர்ப்பை சரியான முறையில் மக்கள் வழங்குவார்கள் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவே காணப்படுகிறார். மக்கள் மீது அவர் நம்பிக்கை வைத்துள்ளார். அந்த நம்பிக்கை வீண்போகாது என நம்பலாம்.-தினகரன்

பிலால்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 4, 2015 இல் 5:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: