Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமக்குள் முரண்­பட்­டுக்­கொள்­வதை நிறுத்த வேண்டும்

with one comment

ACJUமுஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல தீய சக்­திகள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் இத்­தேர்தல் காலத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமக்குள் முரண்­பட்­டுக்­கொள்­வதை நிறுத்தி, கட்சி பேதங்­களை ஓரங்­கட்டி பொது இலக்­கு­களை நோக்­கியும் பொது பிரச்­சினை­க­ளுக்கு தீர்வு காணும் வகை­யிலும் செயற்­பட வேண்டும் என்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

பொதுத் தேர்தல் தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொது செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் விடுத்­துள்ள வழிக்­காட்­டல்­க­ளிலே மேற்­கண்ட வேண்­டுகோள் விடுக்கப்பட்­டுள்­ளது.

உலமா சபையின் வழி­காட்­டல்­களில் பின்­வரும் விட­யங்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அல்­லாஹ்வின் நாட்­டப்­ப­டியே சகல விட­யங்­களும் நடை­பெ­று­கின்­றன என்று உறு­தி­யாக நம்­பிக்கை கொண்­டுள்ள நாம் எதிர்­வரும் தேர்­தலும் அல்­லாஹ்வின் நாட்­டப்­ப­டியே அமையும் என்­பதில் உறுதி கொள்ள வேண்டும்.

இம்மை, மறுமை வாழ்வின் வெற்றி நபிகள் நாயகம் அவர்­களைப் பின்­பற்றி வாழ்­வ­தி­லேயே தங்கியிருக்கின்­றது என்­பதை உறுதி கொண்­டுள்ள நாம் தேர்தல் சந்­தர்ப்­பத்­திலும் நபி வழி­நின்றே செயற்பட வேண்டும். முஸ்­லிம்­களின் மிகப் பொரும் ஆயுதம் துஆ­வாகும். எனவே நாட்­டி­னதும் முஸ்லிம்­க­ளி­னதும் நிம்­ம­தி­யான வாழ்­வான வாழ்­வுக்­காக துஆ செய்ய வேண்டும். நல் அமல்­க­ளிலும் ஈடு­பட வேண்டும்.

ஜன­நா­யக நாடொன்றில் பல­த­ரப்­பட்ட கட்­சிகள் தேர்­தலில் பேட்­டி­யி­டலாம். எவரும் தாம் விரும்பும் வேட்பா­ளரை ஆத­ரிப்­பது அவ­ரது உரி­மை­யாகும். முஸ்­லிம்கள் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யாக நடந்து கொள்ளக் கூடாது.

முஸ்­லிம்கள் நாவால், உடல் உறுப்­புக்­களால் வெளி­யாகும் எந்த குற்றச் செயல்­க­ளிலும் சம்­பந்­தப்­பட்டு விடக்­கூ­டாது. வீணான தர்க்­கங்கள், சண்­டைகள், வன்­செ­யல்கள் வதந்­திகள் பரப்­பு­வதில் ஈடு­ப­டக்­கூ­டாது.

இது ஈமானைப் பாதித்­து­விடும். சகோ­தர முஸ்­லிமின் உயிர், பொருள், மானம், மரி­யாதை என்­ப­வற்­றிற்கு உத்­த­ர­வா­த­ம­ளிப்­ப­துடன் பிற மத சகோ­த­ரர்­க­ளுக்கு தீங்கு ஏற்­ப­டாத வகையில் முஸ்லிம் அர­சியல் வாதிகளும் மக்­களும் செயற்­பட வேண்டும்.

90 வருட வர­லாற்றைக் கொண்ட உலமா சபை எந்த ஒரு அர­சியல் கட்­சி­யி­னையும் சாராத அமைப்­பாகும். அதனால் உலமா சபை எந்­த­வொரு கட்­சிக்கும் ஆத­ர­வா­கவோ, எதி­ரா­கவோ செயற்­ப­டாது. அதனால் எவரும் உலமா சபையின் பெயரைப் பயன்­ப­டுத்தி பிர­சாரம் செய்யக் கூடாது.

முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் இந்­நாட்டின் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளையும், நன்­மை­களையும் பாது­காக்க வேண்டும். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஒற்­று­மை­யா­கவும் புத்­தி­சா­லித்­த­ன­மா­கவும் நடந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூ­கத்தை அர­சியல் ரீதி­யாகப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தவோ தக்வா, அமா­னிதம் பேணுதல் தூரநோக்கு போன்ற உயர்ந்த பண்­பா­டு­களைக் கொண்ட முன் மாதி­ரி­யா­ன­வர்­க­ளாக தங்­களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உல­மாக்கள் குத்பா பிர­சங்­கங்­களில் அர­சியல் சார்ந்த விட­யங்­களைப் பேசு­வதை முற்று முழு­தாக தவிர்த்துக் கொள்­வ­துடன் மேற் சொன்ன விட­யங்­களை அமுல் செய்ய பொது மக்­க­ளுக்கு வழி காட்ட வேண்டும். பள்ளி வாசல்­களை தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கோ, அது சம்­மந்­தப்­பட்டவை­க­ளுக்கோ பயன்படுத்து­வதை தவிர்க்க வேண்டும்.

தேர்தல் முடிந்த பின் நிதானமாக நடந்து கொள்ளவது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சக வாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் உலமா சபையின் கிளைகள் இந்த அறிவித்தல்களை கவனத்திற் கொண்டு பொதுமக்களை வழிநடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 3, 2015 இல் 11:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. I couldn’t understand what is the logic of ACJU…..If ISLAM is guiding to righteous path, Why this ACJU couldn’t guide Muslims Minorities select good Governors and Government. No need to support a political party but at least request to vote right person and send him to right place….This 8 grade Mullas never change.

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 4, 2015 at 8:10 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: