Lankamuslim.org

One World One Ummah

தேர்தல் பிரசாரத்தில் அல்குர்ஆன் அவமதிப்பு நகபாம்புக்கு எதிராக முறைப்பாடு

with one comment

sIRAS NOORDEENஅல்­குர்­ஆனை அவ­ம­திக்கும் வகை­யி­லான  கருத்துக்களைத் தெரி­வித்த பொது பல சேனா அமைப்பின் அர­சியல் கட்­சி­யான பொது ஜன பெர­முன (பி.ஜே.பி) சார்பில் அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் ‘நாக பாம்பு’ சின்னத்தில் போட்­டி­யிடும் சுசந்த ரண்­முத்து குமார­ண­சிங்க எனும் வேட்பாளருக்கு எதி­ரா­க முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தின் போது அல்­குர்­ஆனை அவ­ம­திக்கும் வகை­யி­லான பொலிஸ் மா அதிபரிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.  இம் முறைப்­பாட்­டினை ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் அதன் உறுப்­பி­ன­ரான ஏ.ஆர்.எம்.சபீன் நேற்று பொலிஸ் தலைமையகத்திலும் தேர்தல் ஆணை­யா­ள­ரி­டமும் நேரில் கைய­ளித்தார். இவ­ருடன் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப், ஸப்ராஸ் ஹம்ஸா ஆகி­யோரும் உடன் சென்றி­ருந்­தனர்.

இதே­வேளை இவ் விடயம் தொடர்­பான மற்­று­மொரு முறைப்­பாட்டை ஆர்.ஆர்.டி. அமைப்பின் உறுப்பினரான காதர் முஹை­தீனும் நேற்று தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் கைய­ளித்­துள்ளார்.

குறித்த வேட்­பா­ளரால் கடந்த 29 ஆம் திகதி தேர்தல் பிர­சா­ரத்தை நோக்­காகக் கொண்டு சமூக ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யி­டப்­பட்ட வீடியோ பதிவு ஒன்­றி­லேயே அவர் அல்­குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார்.

அதில், முஸ்­லிம்­களை மரக்­க­லயா என்றும் தமி­ழர்­களை தெமலுன் என்றும் வர்­ணித்­துள்ள அவர், அல்குர்ஆன் தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். ” ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்களின் சனத்­தொகை 50 வீதத்தை விட அதி­க­ரித்தால் அங்கு வாழும் முஸ்­லி­மல்­லா­த­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட வேண்டும். இதுவே அல்­லாஹ்வின் விருப்­ப­மாகும்” என அல்­குர்­ஆனில் கூறப்பட்­டுள்­ள­தாக அவர் குறித்த வீடியோ பதிவில் தெரி­வித்­துள்ளார்.

இவை உட்­பட மொத்­த­மாக 6 விட­யங்கள் சட்­டத்­துக்குப் புறம்­பான முறையில் குறித்த வீடி­யோவில் இடம்­பெற்­றுள்­ள­தாக இம் முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 3, 2015 இல் 7:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Please push the legal move to punish this stupids and stop such funny things!

    Risniy

    ஓகஸ்ட் 4, 2015 at 10:26 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: