Lankamuslim.org

One World One Ummah

லக்ஸ்மன் வசந்த பெரேரா கைது

leave a comment »

Lakshman Vasantha Pereraகடந்த மாதம் 26 ஆம் திகதி மாத்தளை நகரில் அரசியல்கட்சி ஆதரவாளர் ஒருவரைக் கடத்தி தாக்குதல் நடத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் வசந்த பெரேரா தேடப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று காலை மாத்தளை பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.

லக்ஸ்மன் வசந்த பெரேரா எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இவ் உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.

laxman

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 3, 2015 இல் 10:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: