Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவை பார்த்து கவலை கொள்ளும் ஹக்கீம் ..!!

with 5 comments

hakeemஜனா­தி­பதி எனும் உயர் பத­வியை வகித்த மஹிந்த ராஜ­பக் ஷ சாதா­ரண பாராளு­மன்ற ஆசனத்­திற்கு ஆசைப்­படும் மிகக் கேவ­ல­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளார் என்றும் இதையிட்டு இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் தான் கவ­லைப்­ப­டு­வ­தா­கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், கண்டி மாவட்ட வேட்­பா­ள­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

மட­வ­ளையில் தனது தேர்தல் பிர­சார காரி­யா­ல­யத்தை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரை­யாற்றும் போதே இவ்­வாறு கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

இந்­நாட்­டிலே புரட்­சி­க­ர­மான மாற்றம் பிறந்­தி­ருக்­கின்­றது. இந்த மாற்றம் எங்­க­ளுக்கு மிகவும் நிம்­ம­தியைத் தந்­தி­ருக்­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு சூழலை உரு­வாக்க நாம் எவ்­வ­ளவு ஏங்­கினோம் என்று எமக்குத்தான் தெரியும். மட­வ­ளையில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத சம்­ப­வங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.

மட­வ­ளையில் தேர்தல் ஒன்­றின்­போது இடம்­பெற்ற துக்­கக­ர­மான சம்­பவம் உல கில் பேசப்­ப­டு­பவை. அச்சம்­பவம் தேர்­த­லோடு மாத்­திரம் நின்று விட­வில்லை.

2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான சம்­வங்கள் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வா­சல்கள், தேவா­ல­யங்கள் மற்றும் கோவில்கள் போன்­றவை தாக்­கப்­பட்­டன. இதனால் இலங்கை சர்­வ­தேச அரங்கில் அவப்­பெ­யரை சம்­பா­தித்துக் கொண்­டது.

ஆட்­சி­யா­ளர்­க­ளினால் மறை­மு­க­மாக தூண்­டப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­கவே இவை இருந்­தன. ஆனால், இவை­ய­னைத்தும் சர் வதேச சதி­யா­கு­மெனக் கூறி அப்­போ­தைய அரசு இவற்­றை­யெல்லாம் மூடி­ம­றைக்­கப்­பார்த்­தது. ஆனால் மக்கள் நம்­ப­வில்லை.

அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ளரின் பேச்­சுக்கள் மற்றும் செயற்­பா­டுகள் அனைத்தும் சிறு­பான்­மை­யின மக்­களின் மனங்­களை புண்­ப­டுத்­தின. இவை தொடர்பில் நான் அவ­ருடன் பல தட­வைகள் தர்க்கம் புரிந்­தி­ருக்­கின்றேன். ஊட­கங்­களில் அவ­ருக்­கெ­தி­ராகப் பேசி­யி­ருக்­கின்றேன். பாது­காப்புச் செய­லா­ளரின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் அசைக்­க­மு­டி­யாது இருக்­கின்ற உங்­க­ளது ஆட்­சியை வெகு சீக்­கி­ரத்தில் அசைத்து விடு­மென்று நான் பல­த­ட­வைகள் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் கூறி­யி­ருக்­கின்றேன்.

மஹிந்த இப்­போது நிதா­ன­மாக இருந்து நான் கூறி­யதை யோசித்துப் பார்ப்­பா­ரே­யானால் நான் கூறி­யது எவ்­வ­ளவு உண்­மை­யென்­பதை அவர் உணர்ந்து கொள்வார். அப்­போது அவர் என்­மீது சீறிப்­பாய்ந்­ததை எண்ணிக் கவ­லைப்­ப­டுவார்.

சிறு­பான்­மை­யின மக்­களைத் தூண்டி அவர்­களை வன்­மு­றைக்கு இழுப்­பதே அந்த ஆட்­சி­யா­ளர்­களின் நோக்­க­மாக இருந்­தது. புல­னாய்­வுத்­து­றை­யினர் இதைத் தூண்­டி­விட்­டனர் என்று நம்­பப்­பட்­டது. ஒரு பொறுப்­புள்ள அர­சாங்கம் இந்த நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அவ்­வாறு செய்யத் தவ­றி­யதால் ஆட்சி கவிழ்ந்­தது.

மிகவும் உயர்ந்­த பத­வி­யான ஜனா­தி­பதிப் பத­வியில் இருந்த மஹிந்த இன்று ஒரு சாதா­ரண பாராளு­மன்றக் கதி­ரைக்கு ஆசைப்­படும் கேவ­ல­மான நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளார். இதை­யிட்டு நாம் மிகவும் கவ­லைப்­ப­டு­கின்றோம்.

மிகவும் கௌர­வ­மாக ஜனா­தி­பதிப் பத­வி­யி­லி­ருந்து ஓய்­வெ­டுக்க வேண்­டிய நிலையில் பதவி மோகம் கொண்டு பாராளு­மன்ற ஆச­னத்­திற்கு ஆசைப்­ப­டு­வ­தை­யிட்டு ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் நாம் அவ­ருக்­காக அனு­தா­பப்­ப­டு­கின்றோம். மஹிந்த அவ­ரா­கவே அவ­ரது தலையில் மண்ணை அள்­ளிப்­போட்டுக் கொண்டார் என்­ப­தற்கு இதுபோல் ஆயிரம் உதா­ர­ணங்­களைச் சொல்ல முடியும். அவர் முஸ்லிம் மக்­க­ ளையும், தமிழ் மக்­க­ளையும் புண்­படுத்­தி னார்.

இருந்­தாலும், அவர் என்ன செய்­தாலும் அவ­ருக்­காக கூஜா தூக்­கு­கின்­ற­வர்கள் இருக்­கத்தான் செய்­கின்­றார்கள். இருப்­பினும் இந்தத் தேர்­தலில் பாரிய மாற்­ற­மொன்று ஏற்­பட்டு பல­மான அர­சாக ஐக்­கிய தேசியக் கட்சி அரசு உரு­வாகும். மட­வளை உட்­பட முழுக் கண்டி மாவட்­டமும் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.

பாத்தம்­பர நீர்­வி­நி­யோ­கத்­திட்டம், வடக் குக் கண்டி நீர்­வி­நி­யோ­கத்­திட்டம் என பல திட்­டங்கள் 6300 கோடி ரூபாய் செலவில் கண்­டியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்தப் பணி என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு பாரிய அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களை இந்த கண்டி மாவட்டம் அனு­ப­விக்­க­வுள்­ளது. இச்­சந்­தர்ப்­பத்தை நாம் முழு­மை­யாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

மட­வளை மதீனா தேசியப் பாடசாலை எனது கல்வியின் கலங்கரை விளக்கம். அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய் வதற்கு என்னால் முடிந்த அனைத்து உத விகளையும் செய்வேன். இந்தப் பாடசாலை குறைந்த வளங்களைப் பயன்படுத்தி விளையாட்டிலும் முன்னேறியுள்ளது. இந் தப் பாடசாலையின் விளையாட்டு மைதா னத்தை அபிவிருத்தி செய்வதற்கு நான் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இந்நிகழ்வில் ஐ.தே.க. வேட்பாளர் ஆர்.துனுவில, முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ் தர்களான யாசீன், ரிஸ்மி, ரியாஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 1, 2015 இல் 9:56 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. இப்போ இப்படி நக்கலா பேசுறாரு…. ஆனா, மஹிந்த வெண்டா.. உடனே போய் அவர்ர காலில (விழாம) விழுந்து… “நான் அன்று தேர்தல் மேடைகளில் கூறியதெல்லாம்… எனது மக்களை “மா”க்களாக்க…, பேக்காட்ட அவ்வாறு உளறினேன்… நீங்கள் அதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது… எனக்கு இத்தனை முள்ளுகள் தரவேண்டும்” என்று சொல்லுவாரு!…. நம்ம தலைவராச்சே!!

  Risniy

  ஓகஸ்ட் 3, 2015 at 1:58 பிப

 2. He is a seasonal actor….He’ll come, ask vote, select to Parliament and sell it to Government for their own benefits not for the people’s benefits who voted for them. These type of political businessmen to be identified and ignored by voters.

  Mohammed Rizvi Uvais

  ஓகஸ்ட் 3, 2015 at 8:11 பிப

  • அன்பு நண்பர்ஹலே (Risniy , Rizvi ) ஒருவரை பற்றி விமர்சிக்கமுன் அவர்கள் நமக்கஹா (முஸ்லிம்) செய்த நலவற்றை சற்று சிந்தித்து விமர்சிக்க. தயுசெய்து உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் இங்கு வேண்டாம். நன்றி

   umair

   ஓகஸ்ட் 4, 2015 at 10:13 முப

   • Umair! Can you tell what he did for us?

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 4, 2015 at 5:52 பிப

   • Umair! Can you tell me what he done for Muslims?….Don’t you know that he skipped in Parliament when Aluthgama Topic came to debate….Don’t you know he was long silent for Vilpattu Issue…..Better to think buddy…..This Businessman to be identified and ignored by voters….

    Mohammed Rizvi Uvais

    ஓகஸ்ட் 4, 2015 at 8:05 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: