Lankamuslim.org

One World One Ummah

தேர்தல் முடியும் வரை மட்டுமே மகிந்தவுடன் இருப்போம்: தயாசிறி

with one comment

dayasiri-முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய ரூபவாஹினியில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நேரத்தில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் குழுவிடம் தயாசிறி இதனை கூறியுள்ளார்.

மிகவும் வெறுப்படைந்தவராக பேசிய தயாசிறி ஜயசேகர, “ முழு நாட்டையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு, தற்போது குருணாகலையும் சாப்பிட வந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை மட்டுமே நாங்கள் இவர்களுடன் இருப்போம். என்ன செய்வது” என தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் குருணாகலில் போட்டியிட தீர்மானித்ததை அடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் அணியில் உட்பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். இதனால், மேலும் அதிருப்திக்கு உள்ளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் நாவின்னவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துள்ளனர். நாவின்னவுடன் சென்றுள்ள ஆதரவாளர்கள் எண்ணியதை விட மிகப் பெரிய எண்ணிக்கை என கூறப்படுகிறது.

Written by lankamuslim

ஜூலை 30, 2015 இல் 11:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு குழுக்களாக பிளவடைந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றாகத் தெரியும்.

    அதன் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தானம் வழங்குவதனைப் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

    நடைமுறைச் சாத்தியமுடைய எந்தவொரு திட்டமும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

    Imran

    ஜூலை 31, 2015 at 1:20 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: