Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவுக்கு எதிராக செயல்படுவதற்காக பதவி துறக்கிறேன் : ரூபவாஹினியின் பணிப்பாளர்

leave a comment »

ruஅஸ்ரப் ஏ சமத்:இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தபாணத்தின் தலைவா் காலாநிதி சோமரத்தின திசாநாயக்க அப் பதிவியில் இருந்து இராஜினமாச் செய்துள்ளாா்.அவா் எஞ்சிய உள்ள நாட்களில் குருநாகலில் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவும் குருநாகால் அகில விராஜ் காரியவாசமுடன்இணைத்து ஜ.தே.கட்சி பிரச்சாரததில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தாா். அதற்காக இப் பதிவியில் இருந்து கொண்டு என்னால் இதனைச் செய்ய முடியாது என  திசாநாயக்க தெரிவித்தாா்.

இன்று நாரேகேன் பிட்டிய ஜனாகி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநட்டிலேயே மேற்கண்ட தகவல்கலைளத் தெரிவித்தாா்.அவா் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில்கடந்த ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டில் நல்லதொரு நல்லாட்சியை ஏற்படுத்த நாம் அணைவரும் பாடுபட்டோம்.  ஆனால் ஹம்பந்தோட்டையில் இருந்து குருநாகலுக்கு மீண்டும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்கள்  பாராளுமன்றத் தோ்தலில் குதித்துள்ளாா்.

எனது ஊா் குருநாகல் தம்பெதெனியாலயவாகும்  மக்களால் நிரகாரித்த முன்னளா்ள் ஜனாதிபதி  மீண்டும் இந்த நாட்டில் கொலை,களவு., குடும்ப ஆட்சி, அரச சொத்துக்கள் அபகரிப்பு போன்ற துறைகளில் சம்பந்தப்பட்டவா்களை சோ்த்துக் கொண்டு  மீள ஆட்சி கதிரைக்காக களம் இறங்கியுள்ளாா்.   கடந்த ஜனவரி  8  ஆம் திகதி  68 இலட்சம் மக்களால் நிராகரிக்கப்பபட்டவா்  மீளவும் பிரதமா் பதவிக்கு இந்த நாட்டு  மக்களும் தற்போதைய ஜனாதிபதியும் தெரிபு செய்யமாட்டாா்கள்.   ஆனால் இவா்கள் மீண்டும் தாம் சம்பாதித்த அரச  நிதிகளைக் கொண்டு அவா்கள் மீள ஆட்சி பீடம் ஏற  பணங்களை தற்போதைய தோ்தல்களில் செலவளித்து பதவி பெற முயற்சிக்கின்றனா்.

ஆகவே தான்  நான் குருநாகல் மாவட்டத்தில்  ஜ,தே.கட்சி ஆதரவாளா்களுக்காக தோ்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட உள்ளேன்.  அதற்காக அரச தொலைக்காட்சி ஒன்றின் தலைவராக இருந்து கொண்டு  என்னால்  அரசியலில் ஈடுபட முடியாது.  ஆகவே தான் எனது தனிப்பட்ட விடயங்களுக்காக இப் பதவி விலகுவாதாக  ஜனாதிபதி, பிரதமா், ஊடக அமைச்சருக்கும் அறிவித்துள்ளேன்.  நான் தலைவராக பதவி வகித்த காலத்தில்  எனது அமைச்சரோ பிரதமரோ ஜனாதிபதியோ எங்களுக்கு எவ்வித அளுத்தமும் கொடுக்க வில்லை.

ஆனால் கடந்த காலத்தில்  ருபாவகினிக்கு முன்னாள் ஜனாதிபதியின் பிரச்சாரத்திற்காக 260 மில்லியன் ருபாவை நஸ்டத்தினை ஏற்படுத்தியுள்ளாா்கள். இதற்கான  சட்ட நடவடிக்கையோ.அலலது இந் நிதியை மீள அறிவிடுவதற்கோ எவ்வித தஸ்தவேஜூகளும் ஆளனியில் இல்லை.  தொலைபேசி முலமே இதனை செய்துள்ளாா்கள்.  இதனால் 260 மில்லியன் ருபா நஸ்டமேற்பட்டது

தற்போதைய ஆட்சியில்  எவ்வித விளம்பரமோ இலவசமாக காட்சிப்படுத்த தற்போதைய அரசாங்க அமைச்சா்களிடமிருந்து எவ்வித அளுத்தம் இல்லை.மீள ரணில் பிரதமராக வந்தால் இலங்கை ருபாவகினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் பதியை பெறுவதா என்று நான் பின்னா் தீா்மாணிப்பேன் எனத் தெரிவித்தாா்

சிறந்த சிங்கள திறைப்படங்கள், சீனிமா கலைஞா்களை தயாரித்த எனக்கு மக்களுக்கு முன் சென்று மீள நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு நான் ஒரு போதும் தயங்கப்போவிதில்லை என காலநிதி சோமரத்தின திசாநாயக்க தெரிவித்தாா்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 30, 2015 இல் 3:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: