Lankamuslim.org

One World One Ummah

வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

with one comment

North_Eastern_Sri_Lanka_districtsBBC: இலங்கையில் தீர்வாக வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு தோன்றியுள்ளது.

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

இனப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வை கொண்ட அரசியல் தீர்வான்று காணப்படும்போது அது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகின்றது.

இது தொடர்பாக பிபிசியுடன் பேசிய வழக்கறிஞர் உவைசுர் ரகுமான் .இலங்கை – இந்திய ஓப்பந்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த இரு மாகாணங்களும் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் பிரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

மீண்டும் இரு மாகாணங்களும் இணைக்கப்படுமானால் அதனை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் 35 சதவீதமாக காணப்படும் முஸ்லிம்களின் விகிதாசாரம் வடக்கு – கிழக்கு இணையும் போது 18 சதவீதமாக குறையும் ஆபத்து இருப்பதாக சமூக செயற்பாட்டாளரான எம்.எஸ்.எம். நஸீர் கூறினார்.

இதனைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்கிறார் ஓய்வுபெற்ற அரச அதிகாரியான எஸ்.ஏ. ஐனுடின். வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழமையான தேர்தல் கோஷம். இது ஒரு போதும் சாத்தியப்படக் கூடியது அல்ல என கிழக்கு மாகாண சிங்களவர் அமைப்பு கூறுகின்றது

நாட்டில் எந்தவொரு தலைவரும் இதற்கு இனிமேல் இணங்கப் போவதும் இல்லை. அப்படி இணைப்பதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதும் இல்லை என்று அமைப்பின் தலைவரான அனுர பண்டார குறிப்பிடுகின்றார்.

Written by lankamuslim

ஜூலை 29, 2015 இல் 5:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. “மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை”யாகவே தமிழ் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசுவதும், ஸ்ரீ.ல.மு.கா. கரையோர முஸ்லிம் மாவட்டம் பற்றி பேசுவதும்…..

    உண்மையில், அப்போதைய சூழ்நிலையில், பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் தமிழர்களுக்கும் (முஸ்லிம்களுக்கும் கூட) அரசியல், பொருளாதார, மற்றும் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் அதனை அடிப்படையாக வைத்து புலிகள் உருவாகி, அவர்களின் ஆதிக்கம் வடகிழக்கில் இருந்த காரணத்தினாலும் அந்த நேரம் வடகிழக்கு இணைப்பு நடந்ததும், பின்னர் தனித்தமிழ்நாடு பற்றிய பிரகடனமும் சாத்தியமானதாக இருந்தது.

    அவ்வாறே, பெரும்பான்மையினரின் உரிமை மறுப்புகளுக்கும் மேலாக, புலிகளினதும் அவர்களின் பிரதிநிதிகளினதும், முஸ்லிம்களின் மீதான “இனவெறியாட்டமும், உயிர்வாழும் உரிமையைக்கூட பறிக்கும் கேவலமான, அரக்கத்தனமான, மோசமான ஆயுத- மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மூலமான தாக்குதல்கள் மூலம் “இரண்டாவது பெரும்பான்மை” இனத்தின் மூலமாகவும் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை காரணமாக இருதலைக்கொள்ளி எறும்பாக நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களும் தமக்கான சுதந்திரமான ஆட்சி, அதிகாரம் வேண்டி, நிலத்தொடர்பற்ற தனி மாகாணத்தை வட, கிழக்கில் வேண்டி நின்றனர்.

    இருப்பினும் இவ்விரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் இருவகையான போராட்டங்களும் மகிந்தவின் இரும்புக்கரங்கள் மூலம் அடக்கப்பட்டன.

    இந்நிலையில், தற்போது ஏற்கனவே இனவாதம் பேசிய பல பெரும்பான்மை இன செல்வாக்குள்ள பிரதிநிதிகளும், ஆட்சியாளர்களும் பழைய இனவாத சிந்தனைகளை களைந்து “ஒரு குடியின்கீழ் அனைத்து மக்களும் பாதுகாப்பு பெறுவோம்” என்ற கோசத்தோடும் “அதிகாரப்பகிர்வு, அல்லது சகலருக்கும் சகலதும்” என்ற கோசத்தோடும் அரசியல் முன்னெடுப்புக்களை நகர்த்தும் இவ்வேளையில்… அதற்காக பாடுபட்டு “ஒரு பொது ஆட்சியை” வேண்டி நிற்கும் இவ்வேளையில்…….

    அதை நம்பாத நிலையில், எப்படியிருந்தாலும் மீண்டும் தங்களுக்கு “வடக்கு கிழக்கை இணைத்து தனியாக தமிழரை தமிழரே ஆளும் தமிழ்தேசமாக்கி தாருங்கள்” என்ற கோசத்தை தமிழ் கூட்டணி வைக்குமாயின்….. நிச்சயமாக, ஏற்கனவே எல்லா விதத்திலும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகளை, புறக்கணித்து, நிராகரித்து, அநியாயம் இழைத்து, (வெறும் பசப்பு வார்த்தைகளைத்தவிர) இன்றுவரை ஒரு சிறு உதவிகளைக்கூட செயல்ரீதியாக செய்யாமலும், ஏனையவர்கள் செய்யும் உதவிகளைக்கூட முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் (தாங்கள் மட்டுமே பெறவேண்டும் என்ற ஒரே கோட்பாட்டில்) இந்த நிமிடம் வரை செயற்பட்டு வரும் தமிழ் பிரதிநிதிகளை எந்த விதத்திலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் நம்பத்தயாருமில்லை, அவர்களோடு சேர்ந்து போராடத்தயாருமில்லை. அவ்வாறான எந்தவொரு முஸ்லிமினதும், முஸ்லிம் தலைமையினதும் முடிவு தனது, அல்லது தங்களது தற்கொலைக்கு சமமானதாகும். அதோடு, அவ்வாறு இது ஆதரிக்கப்படுமாயின்…. தற்போதைய பொதுபலசென போன்ற மதவாத பயங்கரவாதிகள் முஸ்லிம்கள்மீது தமது பயங்கரவாதத்தை முன்னெடுப்பதற்கு, பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் அனுமதியையும் பெறுவதற்கு மிக இலகுவாக வழிவகுப்பதோடு, நல்ல சிந்தனையுள்ள சிங்கள, பௌத்த மக்களையும் முஸ்லிம்கள் மீது வெறுப்படையச்செய்யும். எனவே முஸ்லிம் காங்கிரஸ் போன்று சமூகத்தின் மீது எள்ளளவும் அக்கறையில்லாத சுயநல அரசியல் சாக்கடைகளை இந்த விடயங்களில் ஒத்துப்போவதற்கோ, அதற்காக குரல் கொடுப்பதற்கோ ஏனைய முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல், சமூகப்பிரதிநிதிகளும் இடம் கொடுக்கக்கூடாது. இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால்… நேற்று (26.07.2015) முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் திரு. ஹசன் அலி என்பவர் தமிழ் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு இணைப்பை வரவேற்றிருந்தார். இது இன்றைய அரசியல் சூழ்நிலையில், நாட்டு சூழ்நிலையில் எந்தளவு முட்டாள்தனமானது. அவ்வாறு இந்நேரம் இணைக்கப்பட்டிருந்தால் அவரது கட்சியை சேர்ந்த அரசியல் வியாபாரிகளில் ஒருவரான ஹாபீஸ் நசீர் முதலமைச்சராக இருந்திருப்பாரா? இது முஸ்லிம்களை பிரச்சினையில் சிக்கவைப்பதாகும்.

    அவ்வாறுதான் வடக்கு-கிழக்கு இணைப்பு சாத்தியமாகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்….நிச்சயமாக, வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு கிடைத்தே ஆகவேண்டும். அதை இல்லாமல் செய்யும் முஸ்லிம் பிரதிநியாக மீண்டும் அதே முஸ்லிம் காங்கிரசும், அதே தலைவரும் இருப்பதால்… ஏற்கனவே முஸ்லிம்களை நிராகரித்த ரணிலே ஆட்சிக்கு தலைமை வகுக்க இருப்பதால்…. இந்த கூட்டு வியாபாரிகளின் பழைய வியாபாரம் -2002 இல் ஏற்பட்டது போல் ஏற்படாமல் இருக்க… அனைத்து முஸ்லிம் சமூகமும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒற்றுமைப்பட்ட, பொதுவான ஒரு மாற்று அரசியல் தலைமைகளையும், பிரதிநிதிகளையும் உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்..

    அண்மையில் ரவூப் ஹகீம் “தான் எப்போதுமே ரணிலின் / ஐ.தே.க. யின் அபிமானி” என்று பச்சையாக சொல்லியிருந்தார் என்பதையும், எனவே அவர் 2002 இணைப்போலவே மீண்டும் ரணிலோடு “ஒப்பந்தங்கள்” மூலம் அடிமைப்படுவார் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

    Risniy

    ஜூலை 30, 2015 at 9:37 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: