Lankamuslim.org

One World One Ummah

வஸீம் தாஜு­தீனின் மரணம்: அடுத்த கட்ட விசார ணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி

leave a comment »

washimபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான இறு­தி­யான பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு உத்­த­ரவு பிறப்பித்தார்அத்­துடன் சட்ட வைத்­திய அதி­கா­ரியை திறந்த மன்றில் சாட்­சி­ய­ம­ளிக்கச் செய்து அதனை ஒழுங்­கு­ப­டுத்­து­வது குறித்து சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்தார்.

றக்பி வீரரின் மரண விசா­ரணை தொடர்­பி­லான வழக்கு நேற்று தொடர்ச்­சி­யாக இரண்­டா­வது நாளும் விசா­ர­ணைக்கு வந்தபோதே நீதிவான் நிஸாந்த பீரிஸ் இந்த உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்தார்.

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் வாகன விபத்தால் ஏற்­ப­ட­வில்லை எனவும் அது ஒரு கொலை என சந்­தே­கிக்கும் படி­யாக உள்­ளது எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று முன்தினம் கொழும்பு மேல­திக நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தனர்.

பற்கள் உடைக்கப் பட்டு, முது­கெ­லும்பு முறிக்­கப்­பட்டு, குதி கால் பகு­தியில் உள்ள எலும்பும் உடைக்­கப்­பட்டு, கூரிய ஆயு­தத்தால் கழுத்தில் குத்­தியும், தட்­டை­யான ஆயுதம் ஒன்­றினால் தாக்­கி­ய­தாலும் றக்பி வீரரின் மரணம் நிகழ்ந்­தி­ருக்­கலாம் எனவும் அதற்­கான தழும்­புகள் மற்றும் அடை­ய­ாளங்கள் அவ­ரது சட­லத்தில் இருந்­த­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ள­தா­கவும் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறிக்கை சமர்ப்­பித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்றுமுன்தினம் அறி­வித்­தனர்.

தாஜுதீன் மரணம் தொடர்பில் மரண விசா­ரணை நடத்­திய முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ரசேகர இடைக்­கால அறிக்கை ஒன்றை மாத்­தி­ரமே சமர்­ப்பித்­த­தாக பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­துள்­ளனர்.

எனவே, பூரண மரண விசா­ரணை அறிக்கை நீதி­மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கேட்டுக் கொண்­டனர். இந்த கோரிக்­கையை ஏற்றுக்கொண்டு கொழும்பு மேல­திக நீதிவான் நிஷாந்த பீரிஸ், இறு­தி­யான முழு­மை­யான மரண விசா­ரணை அறிக்­கையை சமர்­ப்பிக்­கு­மாறு ஆனந்த சம­ர­சேகரவுக்குத் தெரி­வித்தார். மேலும் தாஜுதீன் மரணம் தொடர்பில் மரண விசா­ரணை நடத்­திய நான்கு சட்ட வைத்­திய அதி­கா­ரி­க­ளையும் நீதி­மன்றில் அழைத்து சாட்சி பெற வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர்.

இதனைத் தொடர்ந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்று அத­னையும் அன்­றைய தினம் மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்தும் படி நீதிவான் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்தார். வெள்­ள­வத்தை முருகன் வீதியை வதி­வி­ட­மாகக் கொண்ட வஸீம் தாஜுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாலிகா மைதானம் அருகே மதில் ஒன்­றுடன் மோதி­ய­வாறு எரிந்து கொண்­டி­ருந்த காரில் இருந்து கரு­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். இதனைத் தொடர்ந்து நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவினரும் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

எனினும் இரு வரு­டங்கள் கழிந்தும் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிறை­வு­றாத நிலையில் றக்பி வீரர் தாஜு­தீனின் மர­ணத்தில் மர்மம் நீடித்­தது.

இந் நிலையில் கடந்த பெப்­ர­வரி மாதம் இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டன. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் கீழ் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒருவர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது.

மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்­தி­ருந்த வஸீம் தாஜு­தீனின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் அவ­ரது நுரை­யீ­ர­லுக்குள் காபன் மொனோக்சைட் வாயு நிரம்பி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்த நிலையில் மர­ணத்தில் சந்­தேகம் நில­வு­வ­தாக கூறப்­பட்டு அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கும் மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக பாகங்கள் அனுப்­பப்­பட்­டன.

எனினும் 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்­பி­லான அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரின் அறிக்கை கடந்த பெப்­ர­வரி மாதமே பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது. அந்த அறிக்கை ஊடாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் தாஜு­தீனின் மரணம் குறித்து தெளி­வான ஒரு விட­யத்தை முன் வைக்க முடி­யாது என குறிப்­பிட்­டி­ருந்தார். இந் நிலையில் பிரேத பரி­சோ­த­னையை மேற்­கொண்ட அப்­போ­தைய அரசின் பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரி­யான ஆனந்த சம­ர­சே­கர, இர­சா­யன பகுப்­பாய்­வு­களை நடத்திய சிரேஷ்ட உதவி இர­சா­யன பகுப்­பாய்­வாளர் ரொஷான் பெர்னாண்டோ ஆகியோரை நீதிமன்றில் பெற் றுக்கொண்ட அனுமதிக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இது தொடர்பிலான அடுத்த கட்ட விசார ணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. VK-எம்.எப்.எம்.பஸீர்

Advertisements

Written by lankamuslim

ஜூலை 29, 2015 இல் 4:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: